என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றுதான். சில சிக்கலான கர்ப்பம் கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது மேலும் சிக்கலை அதிகரிக்கும்.
    பயணம் பல நேரங்களில் உற்சாகமானதாக இருந்தாலும் சில நேரங்களில் சோர்வாக இருக்கும் மற்றும் பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது குறிப்பாக அவர்கள் பயணத்தில் இருக்கும்போதே கூடுதல் கவனம் தேவை. கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது பாதுகாப்பான ஒன்றுதான். சில சிக்கலான கர்ப்பம் கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது என்பது மேலும் சிக்கலை அதிகரிக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பயணம் செய்யத் திட்டமிடுவதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    கர்ப்பம் கருப்பையின் உள்ளே பாதுகாப்பானது மற்றும் ஈர்ப்பு அதை பாதிக்காது. புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் கருப்பை கருப்பையின் உள்ளே பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் வாயை இறுக்குகிறது. படிக்கட்டுகளில் ஏறுதல், பயணம், வாகனம் ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது கருக்கலைப்பை ஏற்படுத்தாது.
    கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்

    ஹார்மோன் குறைபாடு, குரோமோசோமால் அசாதாரணம், சில நோய்த்தொற்றுகள், அடிவயிறு அல்லது விபத்தில் நேரடி அடி அல்லது அதிர்ச்சி போன்ற காரணங்களால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், கர்ப்பப்பை வாய் இயலாமை (கருப்பையின் வாய் பலவீனமாக இருப்பது). இது இரண்டாவது மூன்று மாதங்களில் கூட கருக்கலைப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு இதுபோன்ற ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய் தையல் மற்றும் படுக்கை ஓய்வு தேவைப்படலாம். சிறுநீர் மற்றும் யோனி நோய்த்தொற்று ஆரம்பகால கர்ப்பத்தில் இரத்தப்போக்கு ஏற்படலாம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக பயணிக்க செய்ய வேண்டியவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.

    எந்தவொரு பயணத் திட்டங்களையும் செய்வதற்கு முன், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தனது மருத்துவரை அணுகி அவளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும் மற்றும் அவளுக்கு ஏதேனும் மருத்துவ முன்னெச்சரிக்கைகள் தேவைப்பட்டால் சொல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

    கர்ப்ப காலத்தில் உணவில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியம். லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது குமட்டல், வாந்தி மற்றும் அசெளகரியம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது.

    உங்கள் கர்ப்ப ஆவணங்கள், மருத்துவரின் பரிந்துரை, மருந்துகள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பிற பயன்பாடுகளை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.

    உங்கள் தண்ணீர் பாட்டிலை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் அல்லது வெளியில் இருந்து பாட்டில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும். பயணம் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க மறக்காதீர்கள். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியமானதாகும்.

    மென்மையான மற்றும் வசதியான ஒன்றை அணியுங்கள். நீங்கள் உட்கார மற்றும் நடக்க வசதியாக இருக்கும் ஆடைகளை தேர்வு செய்யவும்.

    பொது குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு சரியான சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள். நீங்கள் பயணம் செய்யும் போது கை சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி ஸ்ப்ரேக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
    ஆண்கள் கோட்-ஷூட் அணிந்து கொள்வதைவிட இந்தியப் பாணியில் இருக்கும் ஷெர்வானிகளை அணிந்து கொள்வதில் மிகவும் விருப்பம் காட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.
    வட இந்தியாவில் திருமணத்தன்று அணியும் ஷெர்வானிகளை தென்னிந்திய ஆண்கள் தங்களது வரவேற்பு நிகழ்ச்சியன்று அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். கோட்-ஷூட் அணிந்து கொள்வதைவிட இந்தியப் பாணியில் இருக்கும் ஷெர்வானிகளை அணிந்து கொள்வதில் மிகவும் விருப்பம் காட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.

    ஆச்ச்கன் ஷெர்வானி

    பேஷன் உலகில் மிகச்சிறந்த பாணியாகத் திகழ்கின்ற ஆடைகளில் இவ்வகை ஷெர்வானியும் ஒன்று எனலாம். அதனால்தான், இவ்வளவு பிரபலமான ஆச்ச்கன் ஷெர்வானிகளை தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளின்போது அணிந்து கொள்ள ஆண்கள் விரும்புகிறார்கள். சுரிதார் ஃபேண்ட்கள், டோத்தி இவற்றுடன் ஷெர்வானியின் மேல் ஜாக்கெட்டும் அணிந்தால் அது மிகவும் அற்புதமான தோற்றத்தைத் தரும் பாணியாக இருக்கும்.

    சிப்கன் ஸ்டைல் ஷெர்வானி

    சமகால சகாப்தத்தில், ஒருவித ராஜ தோற்றத்தைப் பிரதிபலிக்கும் பாணியில் அமைந்த ஷெர்வானி இவை. முகலாய அரச மற்றும் ஆட்சியாளர்கள் அணிந்திருந்த ஆடையின் பிரதிபலிப்பு இவ்வகை ஷெர்வானி என்றும் சொல்லலாம். பெரிய மணிமாலைகள், ஹாரங்களுடன் டர்பனும் (தலைப்பாகை) அணிந்து கொண்டால் ராஜகளை என்பது அடுத்தவர் சொல்லாமலேயே வந்துவிடும்.

    அங்ரகா ஷெர்வானி

    உடலைப் பாதுகாப்பது என்ற பொருள்படும் இவ்வகை ஷெர்வானிகள். கட்டுமஸ்தான உடலமைப்பைப் பெற்றுள்ள ஆண்கள் தங்களது தோற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்பும்போது அவர்கள் தேர்ந்தெடுப்பது இவ்வகை அங்ரகா ஷெர்வானிகள் என்றே சொல்லலாம். கழுத்து, காலர் மற்றும் கை போன்ற இடங்களில் மணிகள் மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறந்த வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இவ்வகை ஷெர்வானிகளை அணியும்பொழுது வேறு எந்த நகைகளையும் அணிய வேண்டிய அவசியம் இல்லை.

    நவீன பிரிண்ட் ஷெர்வானி

    பல்வேறு வடிவங்கள் மற்றும் கலைப்படைப்புகளுடன் சமகால வடிவமைப்புகளின் சரியான கலவை இவ்வகை அச்சிடப்பட்ட ஷெர்வானிகளாகும். உடுத்தும் ஆடையில் செழிப்பான தோற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் இவ்வகை ஷெர்வானிகளை நிச்சயம் விரும்புவார்கள். அச்சிடப்படும் உருவத்தின் சரியான தோற்றத்தை வெளிப்படுத்த மிகவும் தரமான பொருட்களைப் பயன்படுத்துவது இவ்வகை ஷெர்வானிகளின் மற்றொரு சிறப்பம்சம் எனலாம்.

    பாகிஸ்தானி ஷெர்வானி

    இந்தியத் திருமணங்களில் ஒரு தனித்துவமான இடத்தை இவ்வகை ஷெர்வானிகள் பிடித்துள்ளன. அழகு, கச்சு வேலை மற்றும் கண்களைக் கவரும் நிறம் இவற்றிற்காகவே இவ்வகை ஷெர்வானிகள் மணமகன் மட்டுமல்லாமல் பிற ஆண்களும் பல்வேறு விழாக்களுக்கும் அணிந்து கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள்.

    ஜோத்பூரி ஷெர்வானி

    இன்றளவும் இந்திய அரச குடும்பத் திருமணங்களில் இவ்வகை ஷெர்வானிகள் கட்டாயம் அணியப்படுகின்றன. இவ்வகை ஷெர்வானிகளை வடிவமைப்பவர்கள் மிகுந்த அனுபவம் வாய்ந்தவராகவே இருக்க முடியும். இவ்வகை ஷெர்வானிகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் மிகக் குறைந்த அளவிலேயே இவை தயாரிக்கப்படுகின்றன.

    ஜாக்கெட் பாணி ஷெர்வானி

    டஸ்ஸர், பட்டு மற்றும் பனாரஸ் துணிகளில் பழங்காலத் தோற்றத்தைத் தரும் வகையில் தங்கப்பூச்சு மற்றும் ஜிகினா வேலைப்பாடுகளுடன் ஒரு இளவரசர் போன்ற தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டவை இவ்வகை ஷெர்வானிகள்.

    அனார்கலி ஷெர்வானி

    இந்தியாவின் கடுஞ் சிக்கலான வேலைப்பாட்டிற்கு மிகச்சிறந்ததாக அமைந்த மற்றொரு உதாரணம் இவ்வகை ஷெர்வானிகள். சுல்தான் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஷெர்வானிகள் இவை.

    இந்தோ-வெஸ்டர்ன் ஷெர்வானி

    இந்திய-மேற்று பாணியின் கலவையாக நவீனத்துவத்தின் தொடுதலுடன் சமநிலையில் இருக்கும் இளைஞர்களின் விருப்பத்தைத் தோற்றுவிக்கும் புதுவிதமான ஷெர்வானி இவை எனலாம்.

    ஷெர்வானி இல்லாமல் திருமண நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் முழுமையடையாது என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் நாம்.
    அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளிலே பல்லாயிரக்கணக்கான சத்துக்கள் நிரம்பியுள்ளது. அப்படிப்பட்ட பீர்க்கங்காய் தோலை வைத்து எப்படி சுவையான துவையல் செய்வது என்பதை பார்ப்போம்..
    தேவையான பொருள்கள்:

    பீர்க்கங்காய் தோல்- 1 கப்
    காய்ந்த மிளகாய் - 10
    உ.பருப்பு - 50 கிராம்
    க.பருப்பு- 50 கிராம்
    உப்பு- தேவையான அளவு
    வெங்காயம்- 1
    தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
    புளி- சிறிதளவு,
    எண்ணெய்- 2 ஸ்பூன்

    பீர்க்கங்காய் தோல் துவையல்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பீர்க்கங்காயில் உள்ள தோல்களை தனியாக சீவி வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து உ .பருப்பு, க. பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

    அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளவும்.

    இரண்டு கலவையும் நன்றாக காற்றாட விட்டு பிறகு மிக்சியில் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளளவும்.

    பத்தே நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்.

    இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி,தோசை என டிபனுடன் சேர்த்து சாப்பிடலாம். .

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி படிப்புக்குப் பின், பட்டப்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், தங்கள் விருப்பம், திறமையின் அடிப்படையில் அடுத்து எதைப் படிக்கலாம் என தேர்ந்தெடுப்பது நலம்.
    மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக செயல்படுவது அவசியம். பள்ளி படிப்புக்குப் பின், பட்டப்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், தங்கள் விருப்பம், திறமையின் அடிப்படையில் அடுத்து எதைப் படிக்கலாம் என தேர்ந்தெடுப்பது நலம். குறிப்பாக, பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவர்களில் பெரும்பாலானோர், பட்டப்படிப்பில், மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அந்த இரு படிப்புகளுக்கு மட்டுமே பொருளாதார அடிப்படையில் எதிர்காலம் இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருவது தான் காரணம். எனினும் எல்லோரோலும் மருத்துவப் படிப்பிற்கான இடத்தை பெற முடிவதில்லை; பி.இ., படித்து முடிக்கும் அனைவருக்கும், அவர்கள் நினைத்தபடி வளமான எதிர்காலம் உடைய வேலை கிடைத்துவிடுவதும் இல்லை.

    அதே சமயம், பிளஸ் 2-வில் கணிதத்தை ஓர் பாடமாக படித்த மாணவர்கள், `ஆக்சூரியல் சயின்ஸ்’ எனப்படும் காப்பீட்டு திட்ட வடிவமைப்பு குறித்த பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வதன் மூலம், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு மிகப் பெரிய சம்பளமாக பெறக்கூடிய வேலைவாய்ப்பை பெற முடியும்.

    உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. காப்பீட்டு துறை வேலை வாய்ப்பு என்றால், இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது டெவலெப்மென்ட் ஆபீசர் வேலை மட்டுமே என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அந்த துறையில், காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்தல், காப்பீட்டு தொகையை நிர்ணயித்தல், காப்பீடு அல்லது இழப்பீட்டு தொகையை நிர்ணயித்தல் என பல பிரிவுகள் உள்ளன. அவற்றிற்கான நிபுணர்களும் தேவைப்படுகின்றனர். அப்படி காப்பீட்டு துறை சார்பான நுணுக்கமான விஷயங்களை கற்பிக்கும் படிப்பு தான், ஆக்சூரியல் சயின்ஸ். பிளஸ் -2 வில் கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, புள்ளியியல், வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம்.

    உலக அளவில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், காப்பீட்டு திட்டங்களை வரையறுக்கும் அதிகாரிகளுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படித்தவர் களுக்கு இத்துறையில் கை நிறைய சம்பளத்துடன் வேலை காத்துக்கிடக்கிறது. இத்துறையில் பி.எச்டி., ஆய்வு படிப்பை முடித்தால் மிக வேகமாக உயர் பதவிகளை அடைவது நிச்சயம்.

    பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல் மட்டுமின்றி, இளநிலை பட்டப்படிப்பில் கணிதம், புள்ளியில், வணிகக்கணிதத்தை ஒரு பாடமாக படித்தவர்களும் எம்.எஸ்சி., ஆக்சூரியல் சயின்ஸ் படிக்கலாம்.

    பிற பட்டப்படிப்புகளைப் போல் அன்றி, குறிப்பிட்ட சில கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களே ஆக்சூரியல் சையின்ஸ் படிப்பை நடத்துகின்றன. அதனால் `ஆக்சூரியல் சயின்ஸ்’ பட்டப் படிப்பை எந்தெந்த கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை அறிந்து, அப்படிப்பால் கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றிய சந்தேகங்களை துறை சார் வல்லுனர்களிடம் கேட்டு தெளிந்த பின், அதில் சேர்ந்து பயனுற, வாழ்த்துக்கள்...!
    நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
    * மனித உடலின் மூலப் பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை.

    * மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், அவனது காது, ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு இருக்கும்.

    * ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை, சுமார் 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள், உள்ளங்கையும், உள்ளங்காலும்தான்.

    * பொதுவாக மனிதர்கள் இரவு வேளையில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நம்முடைய கண்களை சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    * மனித இதயம், இடது பக்கத்தைவிட வலது பக்கம் கொஞ்சம் பெரியதாக இருக்கும். இதயமானது, ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறை சுருங்கி விரிகிறது. அப்படியானால் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி முறை.

    * இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வேலைகளைத்தான் செய்யும். ஆனால் மனித உடலில் உள்ள கையானது, பல ஆயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாகச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது. நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

    * மனித உடலில் உள்ள கால் பாதங்களும், பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்றுதான். ஒரு சதுர அடியில், 3-ல் ஒரு பங்கு மட்டுமே உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள உடலை, சுமார் 70 முதல் 80 வருடங்களாக தாங்கி நிற்கின்றன என்பதே வியப்புக்குரியதுதான்.

    * மனித உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 2 நீச்சல் குளங்களை சுத்தப்படுத்துவதற்கு தேவையான குளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க தேவையான பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு, ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.
    தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல.
    ‘‘அடிக்கடி முகம் கழுவுவது நல்லதல்ல’’ என்கிறார்கள் சரும நோய் மருத்துவர்கள். சருமம் எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருந்தால் தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. அது அவசியமானது. சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    எண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும் முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீக்கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும்.

    முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் இருக்கும் ரசாயன பொருட்கள் சருமத்தின் மென்மையையும், இயற்கையான பளபளப்பையும் நீக்கிவிடும். முகம் எண்ணெய் பசைமிக்கதாக இருந்தால் டோனர் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். சென்சிட்டிவ்வான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பையும் பயன்படுத்தலாம். முகத்தை அதிக நேரம் கழுவவோ, துடைக்கவோ கூடாது.
    ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள்.
    ஆண்கள் உடல் அளவில் பாறை போன்றவர்களாக இருந்தாலும், மனதளவில் பனியை போன்றவர்கள். சிறுவயதில் தாயின் அன்புக்காக ஏங்கி அதில் கரைந்துபோகும் அவர்கள், திருமண வயதில் அதே அன்பை தனது வயதுக்கு ஏற்ற பெண்ணிடம் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் ஆண்களின் வாழ்க்கையில் இன்னொரு பெண், திருமணத்தின் மூலம் இணைத்துவைக்கப்படுகிறாள். ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள்.

    எப்போதுமே பெண்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழத்தெரிந்தவர்கள். இடத்துக்குதக்கபடி தங்களை எளிதாக மாற்றிக் கொள்ளவும் செய்வார்கள். அந்த ஆற்றல் அவர்களது திருமணத்தில் வெளிப்படுகிறது. திருமணத்திற்கு முன்புவரை யாரென்றே தெரிந்திராத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையோடும், புதிய மனிதர்களோடும்தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக்கொண்டுதான் அவள் மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாள். கணவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக்கொள்கிறாள்.

    கணவன் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை வீட்டில் உறுதி செய்துகொள்கிறாள். இதன் மூலம் கணவன் தன்னிடமிருந்து அகலாமல் பார்த்துக்கொள்கிறாள். தங்களை சுற்றியிருப்பவர்களின் எண்ணங்களை குறிப்பால் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு. அந்த அளவுக்கு அவர்களிடம் அபரிமிதமான உள்ளுணர்வு சக்தி இருக்கிறது. பெண்கள் எல்லாவற்றையும்விட அன்புக்காகவே அதிகம் கவலைப்படுவார்கள். ஆகவே கணவன் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என பெண் எதிர்பார்ப்பாள்.

    உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மனோரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது, செயல்படுவது, ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின் மூலமாக ஒவ்வொரு பெண்ணும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இயல்பாகப் பெறுகிறார்கள். ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை விலகுவதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக்கொள்கிறது. பிற்காலத்தில் தாமும் ஒரு தாயாகப்போகிறோம் என்ற உள்ளுணர்வால், தனது தாயின் இடத்தை வகிக்கப் பயிற்சி பெறுகிறது.

    ஒரு தாய், தன் மகள் வடிவில் தான் மீண்டும் வாழ்வதாக நினைக்கிறாள். அவளது மகளோ, தனது தாயின் வாழ்வை தான் அடுத்த தலைமுறையில் தொடர்வதாக எண்ணுகிறாள். இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் மகள் வடிவில் வாழ்வதால் தன்னை சாகாவரம் படைத்தவள் என கருதி கர்வப்படவும் செய்கிறாள்.

    ஆண்களைப் போல் தனக்கென ஒரு எல்லையைப் பெண் நிர்ணயம் செய்துகொள்வதில்லை. அவள் விசால மனம் படைத்தவள். தான் கற்ற ஒரு சிறிய விஷயத்தை வைத்தே வாழ்க்கையை முன்னுக்குக்கொண்டு வந்துவிடும் திறன் பெண்ணிடம் இருக்கிறது. வெற்றியால், உயர்வால் ஓர் ஆண் அடைய முடியாத எல்லாவற்றையும் ஒரு பெண் எளிதாக அடைந்துவிடுகிறாள். ஆண் செய்யும் அத்தனை விஷயங்களும் பெண்ணைச் சுற்றியே அமைகிறது. ஓர் ஆண் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நட்பு என எந்த ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு பெண்ணைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இவ்வாறு மனித வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணின் மூலமாகவே காலங்காலமாகக் கடந்து செல்கிறது. இதுதான் பெண்ணை முழுமையானவளாக்குகிறது.
    தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
    உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப்பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்க்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடை 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.

    அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது உறுதியானால் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அந்த பெண் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
    இன்றைய காலகட்டத்தில் உடல் நலத்திற்கு ஊட்டமளிக்கும் உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது அவசியமானது. அத்தகைய தன்மை கொண்ட கருப்பு கொண்டையை பயன்படுத்தி ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கருப்புகொண்டைகடலை மாவு - 2 கப்
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    தண்ணீரை லேசாக சுடவைத்து கருப்பு கொண்டைகடலை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    ரொட்டி தயார் செய்யும் பதத்திற்கு வரவில்லை என்றால் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது சப்பாத்தியை விட சற்று கனமாக இருக்கும்.

    ஆரோக்கிய பலன்:

    இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கும். சருமத்திற்கும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
    மனிதனின் இரண்டு கால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பதுதான் இயல்பானது. ஆனால், சிலருக்கு இரண்டு கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு வளர்ச்சி குருத்துகளில் முறிவு ஏற்பட்டு இருக்கலாம். அடிபட்டவுடன் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் கால்களின் அமைப்பில் மாற்றம் வரக்கூடும்.

    இதனால் அடிபட்ட காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளருவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

    ஒரு கால் உயரம் குறைவாக அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால், தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும். வளர்ந்து வரும் நமது நாட்டில் இதுபோன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.

    குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரிடம் ஆலோசனை செய்து உரிய சிகிச்சை அளிப்பது கட்டாயம். கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான்.

    இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம்கள் மூலம் போலியோ தடுப்பு மருந்து எல்லோருக்கும் கொடுக்கப்பட்டு விடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய் பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது இன்னொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
    கால், மூட்டு, பின்பகுதி, இடுப்பு, கால் பாதங்கள் போன்றவை உடலின் பாரத்தை தாங்குகின்றன. அந்த பாரத்தை தாங்கி குறைக்கவும் ஊன்று கோல் அவசியமாகிறது.
    வயதான காலத்தில் நடக்க முடியாதவர்கள்தான் ஊன்றுகோலை பயன்படுத்துவார்கள் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் ஊன்றுகோல் ஊன்றி நடப்பதற்கு மட்டுமல்ல. நடக்கும்போது ‘பேலன்ஸ்’ கிடைப்பதற்கும், முதுகு வளைந்து கூன்போடாமல் இருக்கவும் அது பயன்படுகிறது. சிரமப்பட்டு நடக்கும்போது உடல் சோர்ந்து தசைவலி தோன்றும். அப்படிப்பட்ட அவஸ்தைகள் ஏற்படாமல் இருக்கவும் ஊன்றுகோல் உதவுகிறது.

    கால், மூட்டு, பின்பகுதி, இடுப்பு, கால் பாதங்கள் போன்றவை உடலின் பாரத்தை தாங்குகின்றன. அந்த பாரத்தை தாங்கி குறைக்கவும் ஊன்று கோல் அவசியமாகிறது.

    ஊன்றுகோல்கள் பலவிதங்களில் உருவாகின்றன. கம்புகளால் ஆனவை, பலமான உலோகங்களால் உருவானவை, மடக்கி வைக்க கூடியவை, உடைக்கவோ-வளைக்கவோ முடியாத ‘கார்பன் பைபர் வாக்கிங் ஸ்டிக்’ போன்றவைகளும் உள்ளன.

    பொருத்தமான ஊன்றுகோலை தேர்ந் தெடுப்பது மிக முக்கியமானது. பொருத்தமற்றவைகளை தேர்ந்தெடுத்தால் அவை உடலுக்கு கூடுதல் சோர்வை உருவாக்கிவிடும். ஊன்று கோல் தேர்ந்தெடுக்கும்போது வழக்கமாக பயன்படுத்தும் காலணியை உபயோகிக்க வேண்டும். கைகளை கீழே போட்டு பிடிப்பதற்கு வசதியாக உள்ள ஊன்றுகோலை தேர்ந்தெடுங்கள். பிடிப்பதற்கு வசதியான ஊன்றுகோலை வாங்க வேண்டும். உபயோகித்து பார்த்து வாங்குவதே சிறந்தது.
    பணிக்கு செல்லும் பெண்கள் சக ஆண் ஊழியர்களின் பாலியல் சீண்டல்களுக்கும், வன்கொடுமைகளுக்கும், ஆளாகும் போது காவல் துறையில் புகார் கொடுக்க இயலாத மன ரீதியான தடை இருந்து வருகிறது.
    படிக்கவும், வேலை செய்யவும் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டி உள்ளது.பணியிடங்களில் பெண்களுக்கு தக்க பாதுகாப்பான சூழல இருக்கிறதா என்பது இன்னமும் கேள்வியாகவே உள்ளது. பணிக்கு செல்லும் பெண்கள் சக ஆண் ஊழியர்களின் பாலியல் சீண்டல்களுக்கும், வன்கொடுமைகளுக்கும், ஆளாகும் போது காவல் துறையில் புகார் கொடுக்க இயலாத மன ரீதியான தடை இருந்து வருகிறது.

    அதற்கான தீர்வாக 1997-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாகா கமிட்டியின் வழிகாட்டுதல்களை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி 10 பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் வன்முறை தடுப்பு உட்குழு ஏற்படுத்த வேண்டும். குழுவி தலைவியாக சம்பந்தப்பட்ட நிறுவன உயர் நிலைப்பொறுப்பில் இருக்கும் பெண் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். உறுப்பினர்களாக இரண்டு பெண் ஊழியர்கள் மற்றும பெண்கள் நலம் நாடும் தன்னார்ல குழுவில் இருந்து ஒரு பெண்ணும் இடம் பெற வேண்டும்.

    விசாகா கமிட்டி வழிகாட்டுதலின் படி அலுவலகத்தில் பெண்ணின் உடலை தொட முயற்சித்தல், பாலியல் இச்சைக்கு இணங்க அழைத்தல், ஆபாச படங்களை காட்டுதல், பாலியல் உணர்வை தூண்டும் மொழியில் உரையாடுதல், உடல் மொழியை வெளிப்படுத்துதல் ஆகியவை பெண்களுக்கு எதிரான குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு அலுவலக ஒழுக்க விதிகளில் இடம் பிடித்தது.
    2013-ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம்-2013 நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டம் அலுவலகத்தின் நிரந்தர பெண் ஊழியர்கள் மட்டுமின்றி தற்காலிக ஊழியர்கள், பயிற்சியாளர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், முறைசாரா பெண் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பணியிடங்களில் பாதுகாப்பு அளித்தது.

    அதன் விதிகளின்படி பாலியல் துன்புறுத்ததல் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண் எழுத்துப்பூர்வமான புகாரை உட்குழுவிடம் அளிக்க வேண்டும். அப்பெண் விரும்பினால் முதல் கட்ட நடவடிக்கையாக பேச்சு வார்த்தை மூலம் இதை தீர்க்க முயற்சி செய்யலாம். இல்லையெனில் புகாரின் மேல் முறைப்படி விசாரனை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எழுத்து பூர்வமான எச்சரிக்கை, அலுவலக ஒழுங்கு நடவடிக்கை, காவல் துறையினரிடம் ஒப்படைத்தல் ஆகிய தண்டமைகளை உட்குழு ஆராய்ந்து முடிவெடுக்கும்.

    பெண்களின் பாதுகாப்பு எல்லா இடங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். அரசும், காவல் துறையும் நிறுவன தலைமைகளும் அதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பெண்கள் துணிச்சலாக முன்வந்து தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தயங்காமல் சொல்லி சட்டத்தின் உதவியை பெற வேண்டும்.
    ×