search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஊன்றுகோல் ஊன்றுவதற்கு மட்டுமல்ல..
    X
    ஊன்றுகோல் ஊன்றுவதற்கு மட்டுமல்ல..

    ஊன்றுகோல் ஊன்றுவதற்கு மட்டுமல்ல..

    கால், மூட்டு, பின்பகுதி, இடுப்பு, கால் பாதங்கள் போன்றவை உடலின் பாரத்தை தாங்குகின்றன. அந்த பாரத்தை தாங்கி குறைக்கவும் ஊன்று கோல் அவசியமாகிறது.
    வயதான காலத்தில் நடக்க முடியாதவர்கள்தான் ஊன்றுகோலை பயன்படுத்துவார்கள் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் ஊன்றுகோல் ஊன்றி நடப்பதற்கு மட்டுமல்ல. நடக்கும்போது ‘பேலன்ஸ்’ கிடைப்பதற்கும், முதுகு வளைந்து கூன்போடாமல் இருக்கவும் அது பயன்படுகிறது. சிரமப்பட்டு நடக்கும்போது உடல் சோர்ந்து தசைவலி தோன்றும். அப்படிப்பட்ட அவஸ்தைகள் ஏற்படாமல் இருக்கவும் ஊன்றுகோல் உதவுகிறது.

    கால், மூட்டு, பின்பகுதி, இடுப்பு, கால் பாதங்கள் போன்றவை உடலின் பாரத்தை தாங்குகின்றன. அந்த பாரத்தை தாங்கி குறைக்கவும் ஊன்று கோல் அவசியமாகிறது.

    ஊன்றுகோல்கள் பலவிதங்களில் உருவாகின்றன. கம்புகளால் ஆனவை, பலமான உலோகங்களால் உருவானவை, மடக்கி வைக்க கூடியவை, உடைக்கவோ-வளைக்கவோ முடியாத ‘கார்பன் பைபர் வாக்கிங் ஸ்டிக்’ போன்றவைகளும் உள்ளன.

    பொருத்தமான ஊன்றுகோலை தேர்ந் தெடுப்பது மிக முக்கியமானது. பொருத்தமற்றவைகளை தேர்ந்தெடுத்தால் அவை உடலுக்கு கூடுதல் சோர்வை உருவாக்கிவிடும். ஊன்று கோல் தேர்ந்தெடுக்கும்போது வழக்கமாக பயன்படுத்தும் காலணியை உபயோகிக்க வேண்டும். கைகளை கீழே போட்டு பிடிப்பதற்கு வசதியாக உள்ள ஊன்றுகோலை தேர்ந்தெடுங்கள். பிடிப்பதற்கு வசதியான ஊன்றுகோலை வாங்க வேண்டும். உபயோகித்து பார்த்து வாங்குவதே சிறந்தது.
    Next Story
    ×