search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்கள் அலுவலகத்தில் பாதுகாப்பான சூழல் உள்ளதா?
    X
    உங்கள் அலுவலகத்தில் பாதுகாப்பான சூழல் உள்ளதா?

    உங்கள் அலுவலகத்தில் பாதுகாப்பான சூழல் உள்ளதா?

    பணிக்கு செல்லும் பெண்கள் சக ஆண் ஊழியர்களின் பாலியல் சீண்டல்களுக்கும், வன்கொடுமைகளுக்கும், ஆளாகும் போது காவல் துறையில் புகார் கொடுக்க இயலாத மன ரீதியான தடை இருந்து வருகிறது.
    படிக்கவும், வேலை செய்யவும் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டி உள்ளது.பணியிடங்களில் பெண்களுக்கு தக்க பாதுகாப்பான சூழல இருக்கிறதா என்பது இன்னமும் கேள்வியாகவே உள்ளது. பணிக்கு செல்லும் பெண்கள் சக ஆண் ஊழியர்களின் பாலியல் சீண்டல்களுக்கும், வன்கொடுமைகளுக்கும், ஆளாகும் போது காவல் துறையில் புகார் கொடுக்க இயலாத மன ரீதியான தடை இருந்து வருகிறது.

    அதற்கான தீர்வாக 1997-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாகா கமிட்டியின் வழிகாட்டுதல்களை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி 10 பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் வன்முறை தடுப்பு உட்குழு ஏற்படுத்த வேண்டும். குழுவி தலைவியாக சம்பந்தப்பட்ட நிறுவன உயர் நிலைப்பொறுப்பில் இருக்கும் பெண் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். உறுப்பினர்களாக இரண்டு பெண் ஊழியர்கள் மற்றும பெண்கள் நலம் நாடும் தன்னார்ல குழுவில் இருந்து ஒரு பெண்ணும் இடம் பெற வேண்டும்.

    விசாகா கமிட்டி வழிகாட்டுதலின் படி அலுவலகத்தில் பெண்ணின் உடலை தொட முயற்சித்தல், பாலியல் இச்சைக்கு இணங்க அழைத்தல், ஆபாச படங்களை காட்டுதல், பாலியல் உணர்வை தூண்டும் மொழியில் உரையாடுதல், உடல் மொழியை வெளிப்படுத்துதல் ஆகியவை பெண்களுக்கு எதிரான குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு அலுவலக ஒழுக்க விதிகளில் இடம் பிடித்தது.
    2013-ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம்-2013 நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டம் அலுவலகத்தின் நிரந்தர பெண் ஊழியர்கள் மட்டுமின்றி தற்காலிக ஊழியர்கள், பயிற்சியாளர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், முறைசாரா பெண் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பணியிடங்களில் பாதுகாப்பு அளித்தது.

    அதன் விதிகளின்படி பாலியல் துன்புறுத்ததல் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண் எழுத்துப்பூர்வமான புகாரை உட்குழுவிடம் அளிக்க வேண்டும். அப்பெண் விரும்பினால் முதல் கட்ட நடவடிக்கையாக பேச்சு வார்த்தை மூலம் இதை தீர்க்க முயற்சி செய்யலாம். இல்லையெனில் புகாரின் மேல் முறைப்படி விசாரனை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எழுத்து பூர்வமான எச்சரிக்கை, அலுவலக ஒழுங்கு நடவடிக்கை, காவல் துறையினரிடம் ஒப்படைத்தல் ஆகிய தண்டமைகளை உட்குழு ஆராய்ந்து முடிவெடுக்கும்.

    பெண்களின் பாதுகாப்பு எல்லா இடங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். அரசும், காவல் துறையும் நிறுவன தலைமைகளும் அதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பெண்கள் துணிச்சலாக முன்வந்து தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தயங்காமல் சொல்லி சட்டத்தின் உதவியை பெற வேண்டும்.
    Next Story
    ×