என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உடல் மெலிந்து காணப்படும் பெண்கள், பூசி மொழுகினாற்போன்று உடலில் தசைபோட்டால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று நினைப்பதும்- அதிக உடல் எடைகொண்ட பெண்கள், மெலிந்தால் அழகு அதிகரிக்கும் என்று கருதுவதும் பொதுவானதுதான்.
    உடல் மெலிந்து காணப்படும் பெண்கள், பூசி மொழுகினாற்போன்று உடலில் தசைபோட்டால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று நினைப்பதும்- அதிக உடல் எடைகொண்ட பெண்கள், மெலிந்தால் அழகு அதிகரிக்கும் என்று கருதுவதும் பொதுவானதுதான். காதல் உணர்வுகள் தலைதூக்கும் டீன்ஏஜ் காலகட்டத்திலும், அதன் பின்பு திருமணத்திற்கு தயாராகும் பருவத்திலும் பெண்களுக்கு தங்கள் உடல்மீது அதிக அக்கறை ஏற்படுகிறது.

    உடல் மெலிந்து காணப்படும் பெண்கள் உணவாலும், மருந்து மாத்திரைகளாலும் உடல் எடையை அதிகரிக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உடல்வாகு பொதுவாக அவரவர் பாரம்பரியத்தை பொறுத்தது. சில பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்கள் உடலில் தசைபோடாது. அதற்கு காரணம் அவர்களது பாரம்பரியம்தான்.

    இதில் முதலில் கவனிக்கத்தகுந்த விஷயம், பெண்கள் தங்கள் உடல் ஒல்லியானதா? அல்லது போதுமானதா? என்பதை தெளிவாக அறியவேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை வைத்துக்கொண்டு ஒல்லியாக இருப்பதாக முடிவுசெய்துவிடக்கூடாது. அதை துல்லியமாக தெரிந்துகொள்ள ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ துணைபுரியும். அந்த அளவு 18.5 முதல் 24.9 வரை இருந்தால் உங்கள் உடல்வாகு போதுமானதாக இருப்பதாகவே அர்த்தம். நீங்கள் அதற்கு மேல் எடைகூட வேண்டியதில்லை.

    ஒல்லியாக இருக்கும் சில பெண்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு மதிய நேரங்களில் தூங்கினால் எடை அதிகரித்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது உடலை குண்டாக்கக்கூடும் என்றாலும், அப்போது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

    பின்விளைவுகளற்ற முறையில் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துக்கள், முந்திரி-பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் வகைப் பொருட்கள், கடலை, முழு பயறு வகைகள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் உணவில் அசைவம் சேர்க்கலாம். தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். நெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்சா போன்ற உணவு வகைகளும் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும்.

    ஒல்லியான பெண்கள் தினமும் சாப்பிடும் உணவின் கலோரி கணக்கை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1900 கலோரி தினமும் தேவை. ஒல்லியாக இருப்பதை தெளிவாக அறிந்துகொண்டால் அதைவிட கூடுதலாக தினமும் 1000 கலோரி எடுத்துக்கொள்ளலாம். மூன்று நேர உணவு என்பதற்கு பதில் தினமும் ஆறு நேரமாக சாப்பிடுங்கள். அது சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும் என்பது மிக அவசியம்.

    பெரும்பாலான பெண்களிடம் முரண்பாடான கருத்து ஒன்று பல காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது, ஒல்லியாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்பது. ஒல்லியோ, குண்டுவோ எதுவானாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் உடற்பயிற்சி அவசியம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்க, ரத்த ஓட்டத்தை சீராக்க, நன்றாக பசியெடுக்கச்செய்ய உடற்பயிற்சி தேவை. ஆனால் எந்த உடற்பயிற்சியையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் செய்யவேண்டியதில்லை.

    உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு பொறுமை மிக அவசியம். ஒரு சில மாதங்களிலே எதிர்பார்த்ததுபோல் உடல் எடை உடனே அதிகரித்துவிடாது. அப்படி அதிகரித்துவிடவும்கூடாது. உணவு, ஓய்வு, உடற்பயிற்சி போன்றவை பலன் தந்து உடல் எடை அதிகரிக்க பொறுத்திருக்கவேண்டும். பெண்கள் ரொம்ப ஒல்லியாக இருப்பதாக கருதினால், டாக்டரிடம் ஒருமுறை உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம்.
    மாய்ஸ்சுரைசர் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
    பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.

    மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது அவை சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். சருமத்திற்குள் ஊடுருவுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது உருவாகும் கூடுதல் ஈரப்பதம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக சரும செல்கள் பலவீனமடையும். சரும துளைகள் முழுவதும் அடைபடும் அபாயமும் உண்டாகும். அதனால் முகப்பரு மற்றும் வறண்ட சரும பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.

    மேலும் தேவைக்கு அதிகமாக மாய்ஸ்சுரைசரை உபயோகிக்கும்போது சருமம் புத்துணர்ச்சியை இழந்துவிடும். சோர்வு எட்டிப்பார்க்கும். சருமத்தில் தென்படும் ஒருசில அறிகுறிகளை கொண்டே மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவி இருப்பதை அறிந்து கொள்ளலாம். சருமத்தில் கருப்பு புள்ளிகள் தென்படுவது, சரும துளைகள் அடைப்பட்டிருப்பது, அதிக எண்ணெய் பசைத்தன்மை தென்படுவது, சருமத்தில் புள்ளிகள், தடிப்புகள் எட்டிப்பார்ப்பது, இறந்த செல்கள் வெளிப்படையாக தெரிவது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவும்போது சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்களும் தோன்றும். அதனை பயன்படுத்திய பிறகு முகத்தில் ஏதேனும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் அது சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது.

    மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும். ஒப்பனை செய்யும்போது அது சரியாக சருமத்தில் கலப்பதற்கும் அனுமதிக்காது. முகத்தில் புள்ளிகள், திட்டுகளை ஏற்படுத்தும். மாய்ஸ்சுரைசரை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

    * பட்டாணி அளவிலோ அல்லது அதை விட சற்று அதிகமாகவோ மாய்ஸ்சுரைசரை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கைகளை சூடாக்க வேண்டும். பின்பு கன்னங்களில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். பிறகு நெற்றி, தாடை பகுதியில் தடவ வேண்டும். கழுத்தில் தேய்க்கும்போது கீழிருந்து மேல்நோக்கி தடவ வேண்டும்.

    * காலையில் எழுந்ததும் முகம் கழுவிய பிறகு லேசாக டவலில் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருப்பதால் அதிக அளவில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அது வழிவகுக்கும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண் டும். அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.

    * சருமம் ஏற்கனவே வறண்டு போய் இருந்தால் அதற்கேற்ப மாய்ஸ்சுரைசரை சற்று அதிகமாக பயன்படுத்தலாம். ஆனால் சருமம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

    * வாரத்திற்கு ஒரு முறை இறந்த செல்களை அகற்றவும் வேண்டும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு மாய்ஸ்சுரைசரை சரியாக செயல்பட வைக்கும். இதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
    மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், கண் சிவப்பாகுதல் எனப் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடல் சூட்டை குறைக்க முடியுமா? என்னென்ன வழிகள் உள்ளன? என்று பார்க்கலாம்.
    உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், கண் சிவப்பாகுதல் எனப் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடல் சூட்டை குறைக்க முடியுமா? என்னென்ன வழிகள் உள்ளன? என்று பார்க்கலாம்.

    உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். குறைந்தது 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவரவரின் வயதுக்கு ஏற்ப ¾ அல்லது 1 அல்லது 1 ½ லிட்டர் அளவு தண்ணீர் கொடுக்கலாம். ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் கால், பாதம் நனையும்படி 15 நிமிடங்கள் வைத்திருந்தாலும் ஓரளவுக்கு வெப்பநிலை குறையும்.

    தாதுக்கள், விட்டமின் நிறைந்த இளநீரைக் குடித்து வந்தாலும் வெப்பநிலை குறையும். நல்ல பலன் கிடைக்கும்.

    புதினா டீ போட்டுக் குடிப்பது. புதினா, எலுமிச்சை சாறு கலந்து ஜூஸோ டீயோ போட்டுக் குடிப்பது நல்லது.

    வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும்.

    புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

    மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சியாகும்.

    உடலின் வெப்பம், வெளி காரணங்களால் ஏற்படும் சூடு ஆகியவற்றைப் போக்க விட்டமின் சி நிறைந்த உணவுகள் உதவும். அவை, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, கிவி.

    கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனை வெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் குடிப்பது மிக்க நல்லது.

    தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி அல்லது மாலை 4 மணி அளவில் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். பெரியவர்கள், 3 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது.

    2 ஸ்பூன் வெந்தயத்தை முன்னாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது மோருடன் கலந்து குடிக்கலாம். பெரியவர்கள் சாப்பிடலாம்.

    தினமும் ஒரு யோகர்ட் வாங்கி சாப்பிடலாம். இதனாலும் உடல் குளிர்ச்சியாகும். அனைவருக்கும் ஏற்றது.

    சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும். அனைவருக்கும் ஏற்றது. 1

    புழுங்கல் அரிசியுடன் சிறிது வெந்தயம் கலந்து குழைய வேகவிடவும். அதில் கெட்டியான தேங்காய்ப் பால் ஊற்றி கலக்க வேண்டும். 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று காலை உணவாக சாப்பிடுவது மிக மிக நல்லது. உடல் சூடு காணாமல் போய்விடும். இதற்கு புதினா துவையல் தொட்டு சாப்பிடலாம். அனைவருக்கும் ஏற்றது.

    பெண்கள் செவ்வாய், வெள்ளி… ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு வரவே வராது. பெரியவர்கள் அவசியம் செய்ய வேண்டும்.

    இரவு 10 மணிக்குள் தூங்க சென்றுவிட்டால் உடல் சூடு அதிகரிக்காது. அதுவும் எண்ணெய் குளியல் குளித்த அன்று, கட்டாயமாக இரவில் சீக்கிரம் தூங்க சென்று விடுங்கள்.

    கற்பூரவல்லி குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவல்லி இலைகள் - 15,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    புளி - கோலி குண்டு அளவு,
    பெருங்காயம் - சிட்டிகை,
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள், தேங்காய்த் துருவல், புளியை தனித்தனியாக சேர்த்து வதக்கி ஆற விடவும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்த கொள்ளவும்.

    அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கற்பூரவல்லி சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைக்கு பெயர் சூட்ட பெற்றோர் புதுவிதமாக சிந்திக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெயர் சூட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு.
    குழந்தைக்கு பெயர் சூட்ட பெற்றோர் புதுவிதமாக சிந்திக்கிறார்கள். தங்கள் குழந்தையின் பெயர் மற்ற குழந்தைகளின் பெயர்களை விட தனித்துவமாகவும், வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சில எழுத்துகளை தாங்கி இருக்க வேண்டும் என்றும் நிறைய பேர் விரும்புவார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெயர் சூட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு.

    * நீண்ட எழுத்துகளுடன் இருக்கும் பழமை யான பெயர்களை கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது. அதே நேரத்தில் கலாசாரத் துடன் ஒத்திருக்கும்படி பெயர் வைக்கலாம். அது எதிர்காலத்தில் குழந்தைகள் தங்கள் பெயரை உச்சரிப்பதற்கு தயங்காத நிலையை ஏற்படுத்தும். இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் பெயர்களில் இருந்து பொருத்தமான பெயரை தேர்ந்தெடுத்து சூட்டலாம்.

    * குழந்தையின் பெயர் உச்சரிப்பதற்கு இனிமையாகவும், குறைந்த எழுத்துக்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நான்கு, ஐந்து எழுத்துக்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் முழு நீள பெயரை கூறி அழைப்பதில்லை.

    * குழந்தைக்கு வைக்கும் பெயர் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்யும்படி அமைந்துவிடக்கூடாது. சட்டென்று மனதில் பதியும்படியும் இருக்க வேண்டும். உச்சரிக்க சிரமப்படும் அளவுக்கும் இருக்கக்கூடாது.

    * தங்கள் குழந்தையின் பெயர் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருக்கும் பிராண்ட்களின் பெயரையோ, விசித்திரமான இடங்களின் பெயர்களை தாங்கி இருக்கும் பெயர்களையோ வைக்கக்கூடாது. அது மற்றவர்களின் விமர்சனத்திற்கு வழிவகுத்துவிடக்கூடும்.

    * மூதாதையர்களின் பெயர்களையோ, பழமையான பெயர்களையோ வைப்பதற்கு முன்பு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பழைய பெயர்களாகவே இருந்தாலும் எல்லா காலகட்டத்திற்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

    * அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய பேர் வாய்க்குள் நுழையாத பெயர்களை வைத்துவிடுகிறார் கள். அதனை மற்றவர்கள் கேலி செய்ய நேரிடும். அர்த்தம் பொதிந்த பெயர்கள் கூட சில சமயங்களில் கேலிக்கு உள்ளாகலாம். அதனால் கவனமாக சிந்தித்து பொருத்தமான பெயரை சூட்டுங்கள்.

    * சிலர் வைக்கும் பெயர் அது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா? என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும். பாலினத்தை சரியாக குறிக்கும் விதத்தில் பெயரும் அமைந்திருக்க வேண்டும்.

    * நல்ல பெயராக இருக்கிறது என்பதற்காக உறவினர்கள் ஏற்கனவே பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் பெயரை திரும்பவும் சூட்டக்கூடாது. அது குழந்தைகளுக்கே குழப் பத்தை ஏற்படுத்திவிடும்.

    * ஆங்கில எழுத்துக்களின் தொடக்க எழுத்தில் பெயர் ஆரம்பிப்பது நல்லது. கடைசியில் உள்ள எழுத்துக்களில் பெயர் வைத்தால் வகுப்பில் தொடங்கி பல்வேறு இடங்களில் பெயர் கடைசியாக இடம்பெற நேரிடும். மற்றவர்கள் பெயர்கள் வாசித்து முடியும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
    ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
    ஒவ்வொரு இளைஞனும் தன்னையறிந்து கொள்ளும் போது வாழ்வில் வெற்றி பெறுகிறான். அதன்பின் தனது தேசத்தின் பண்பாடு, கலாசாரங்களைப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்கிறபோது அவ்விளைஞனால் அந்நாடும் பெருமையடைகிறது. இளைஞர்கள் ஒவ்வொவரும் நம் தேசத்தின் தூண்கள்; நம்பிக்கை நாயகர்கள், ஆற்றலின் அற்புதங்கள்; முயற்சியின் முழுவடிவங்கள்; சாதிக்கும் அக்னிக் குஞ்சுகள்; சிந்தனைகளைச் சிலைகளாக்கும் சிற்பிகள்; புதிய சரித்திரம் படைக்கும் கதாப்பாத்திரங்கள், மொத்தத்தில் அளப்பரிய மனித வடிவங்கள்.

    மாணவப் பருவத்தில் மாணவ ராக்கெட்டுகள் பள்ளி என்னும் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டுகளாக வெளிவருகின்றனர். சரியான வேகத்தில் பாய்ந்து, விண்வெளியை அடைந்து, அதன் சுற்றுப்பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை போல் தங்களது இலக்குகளை சரியாக அடைகின்ற இளைஞர்களே வாழ்வில் வெற்றி வாகை சூடுகிறார்கள்.

    அவ்வாறில்லாமல், இளமைப் பருவத்திலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல், தீய நண்பர்களிடம் நட்புக்கொள்ளுதல், லட்சியமின்றி சோம்பியிருத்தல் போன்ற செயல்பாடுகளால் அற்புதமான இளமைப்பருவம் அலங்கோலப்படுவது வேதனையே.

    இளமைப்பருவம் குழந்தை பருவம்போன்று இயல்பான பருவம் அல்ல. அது ஓர் ஈடில்லாத இன்றியமையாத பருவம். தீயவற்றை ஒதுக்கி, நல்லவற்றை நாடிச் செல்லவேண்டிய நற்பருவம். நதிகளின் வாழ்க்கையைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையும். அதில் துள்ளி வரும் நீர்வீழ்ச்சியைப் போன்றது இளமைப் பருவம். நீர்வீழ்ச்சியின் ஆற்றல் அளப்பரியது. அது கரடு முரடான மலைகளில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கும். இளமைப் பருவமும் தன் முன்னே இருக்கின்ற பிரச்சினைகளைக் கடந்து வெற்றிவாகை சூடும் இயல்புடையது. எனவே, யார் ஒருவர் அத்தகைய ஆற்றலை நல்வழியில் செயல்படுத்துகிறாரோ அவர் வெற்றியாளராகின்றார்.

    இளமையில் துடிப்போடும், ஆற்றலோடும், அறிவுத்திறனோடும் இருப்பவர்களே எதிர்காலத்தில் ஞானியாகவும், புகழ்பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது அந்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியே. ஆரோக்கியமான திடமான, அறிவான இளைஞர்கள் ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய பலமாகும்.

    1999-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச இளைஞர் தினத்தை ஆகஸ்டு 12-ம் நாளாக கொண்டாடுகிறது. இந்த வருடம் “இளைஞர்கள் இடம் பெயர்தல், வளர்ச்சியை நோக்கி முன்னேறுதல்” என்பதே இவ்வாண்டின் மையக்கருத்தாகும்.

    எனவே, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப ஒவ்வொரு இளைஞரும் உலகலாவிய பயணம் அடைதல் அவசியம். அதன் மூலமே ஒரு தனி மனிதனின் உயர்வோடு தேசமும் உயரும். பணத்தினைச் சேர்க்கும் அவசரத்தில் நம் பண்பாட்டினை தொலைத்து விடாமல் இருப்பவர்களே தேசத்தின் தூதுவர்களாகின்றனர். பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மகாத்மா காந்தியைப் போல், “தனது குடும்பத்திற்கும், பெற்றோருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமலிருப்பேன் என்றும், நம் தேசத்தின் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் புறம்பாக எச்செயல்களையும் புரியமாட்டேன் என்று உறுதியோடு செல்பவர்கள்” உயர்வு பெறுகின்றனர்.

    ஒவ்வொரு இளைஞனும் ஓராயிரம் குழந்தைகளின் புத்தகமாகத் திகழ்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்ற பொழுது தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கின்றனர். எந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளின்மீது தாக்கத்தை உருவாக்குகிறாரோ அவர்களின் சாயலாகவே அக்குழந்தை சமுதாயத்தில் உருப்பெறுகிறது. எனவே, நல்லவர்களாகவும், ஒழுக்கமுற்றவராகவும் வாழவேண்டியது ஒவ்வொரு இளைஞனின் கடமையாகிறது.

    ஒவ்வொரு இளைஞனும் உயர்வினில் இமயமாய், உழைப்பினால் சோர்வடையாத மகா நதியாய், அறிவினில் மகாசமுத்திரமாய், ஆற்றலில் ஒளிவிடும் சூரியனாய், அன்பினில் குளிரும் நிலவாய், போர்க்குணத்தில் ஒரு சூறைக் காற்றாய், நற்சிந்தனைகளைப் பரவவிடும் மெல்லிய தென்றலாய், இம்மண்ணில் வரும்போது மானுடம் உயர்வு பெறும்.
    எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்….
    உளவிலாளர்களின் கூற்றுப்படி உறவுகள் தோல்வியடைய பல காரணங்கள் உள்ளன. இதில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிகை, இழப்பு ஆகியவை அடங்கும்.

    எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.

    உறவுகளில் வாக்குவாதம் முற்றிலும் இயல்பானது என்றாலும், மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை நிறுத்துவதற்கும் வழிகள் உள்ளன.

    வாக்குவாதங்கள் நடைபெறுவது இயல்பானது. ஆனால் அந்த நேரத்தில் கோபத்தை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். எதிரில் இருப்பவரின் கூற்றுக்கு, உடனடியாக கோபத்தோடு செயல்படாமல் பகுத்தறிவோடு அதை மதிப்பிட வேண்டும். அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியோடும், மரியாதையோடும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

    வாக்குவாதம் ஏற்படும் நேரங்களில் அமைதியாக யோசித்தால் வாக்குவாதம் சண்டையாக மாறாது.

    உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வாக்குவாதம் செய்வது விளைவுகளை மோசமானதாக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் நம்மை மீறி தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்கவோ, வருத்தப்படக்கூடிய செயலை செய்யவோ வாய்ப்பு உள்ளது. அதனால் பின்னர் வருத்தப்பட நேரிடும். வாக்குவாதம் முற்றும் நிலைக்கு செல்லும் போது நாம் விட்டு கொடுப்பது தேவையற்ற சண்டைகளை தவிர்க்க உதவும்.

    தொலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நாம் கூறவரும் கருத்துக்களை குறுஞ்செய்தியில் தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனவே முடிந்தவரை தொலைபேசியில் பேசுவதோ அல்லது நேரில் பேசித்தீர்த்து கொள்வதோ தான் சிறந்தது.

    சிறிய விஷயங்களை பெரிய பிரச்சனைகளாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற காரியங்களை விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை.
    ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் வரும் வெயில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், ஆயாசமும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பில்லாத ராகி, கம்பு, கூழ் வகைகளை அருந்தலாம்.காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது.

    இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், ஜூசாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.

    கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.கோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் வழக்கத்தை விட, கூடுதலாக பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் தண்ணீரில் சீரகம், மல்லித்தூள் இரண்டையும் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு குடிக்கலாம்.

    கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில், குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.

    காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிக்க வேண்டும்..ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.மேற்சொன்ன டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த கோடை காலத்தை குளிர்ச்சியாக மாற்றி சமாளிக்கலாம் .
    தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி பருப்பு தோசை. சரி, இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப்
    புழுங்கல் அரிசி - 2 கப்
    துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2
    நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை துருவி, அரைத்த மாவுடன் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

    இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.
    மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.

    பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம். சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.

    பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள். இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.

    உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.மனஅழுத்தம் உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக் டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும். இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.

    நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும். அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது போன்றவற்றையும் தவிருங்கள். சீரற்ற சாலைகளில் அதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.

    மார்பக வலியில் எச்சரிக்சை அடைய வேண்டிய சில அறிகுறிகளும் இருக்கின்றன. மார்பக காம்புகள் உள் இழுத்த நிலையில் இருந்தால் ரத்தமோ  அல்லது வேறுவித திரவமோ அதில் இருந்து சுரந்தால் மார்பகங்கள் சிவந்து காணப்பட்டால் உடனே டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    சிலருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.

    மார்பக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். தரமான பொருத்தமான பிரா அணியுங்கள். நெஞ்சுப் பகுதிக்கான எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
    உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஆவி பிடிக்கலாம்.
    கருப்பு மிளகு எண்ணெய் மிகவும் வலுவானது. எனவே உங்கள் சருமத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. இதை உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன்பு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள்.
    உங்கள் சருமத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் உருவாக்குவதிலிருந்து அதை புத்துணர்ச்சியுற செய்வதற்கும், க்ளோவ்யிங் சருமத்திற்கும் என கருப்பு மிளகு எண்ணெய் அனைத்தையும் செய்கிறது. இந்த அத்தியாவசிய எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

    இந்த எண்ணெயில் ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. மேலும், இந்த எண்ணெய் சருமத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை கொல்வதால் லேசான தோல் நோய்கள் மற்றும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் மூலப்பொருளாக பார்க்கப்படுகின்றன.

    கருப்பு மிளகு எண்ணெய் ஒரு சிறந்த தோல் சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இது அடைபட்ட துளைகளை திறப்பதோடு சருமத்தில் குவிந்திருக்கும் கூடுதல் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. இந்த எண்ணெயை கொண்டு வழக்கமாக மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் எஞ்சியிருக்கும் இறந்த சரும செல்கள் நீங்கிவிடும்.

    உங்கள் சருமம் வயதான தோற்றத்தை பெற்றால் அதிலிருந்து மீளவும், நிரந்தர தீர்வுக் காணவும் கருப்பு மிளகு எண்ணெய்யை அவசியம் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் கறைகள், சுருக்கங்கள் மற்றும் வயதான தோல் போன்ற பிற அறிகுறிகளைக் மட்டுப்படுத்த உதவும். மேலும் இது உங்களுக்கு மென்மையான, மிருதுவான மற்றும் இளமையான சரும பிரகாசத்தைத் தரும்.

    கருப்பு மிளகு எண்ணெய் முகத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்வதற்கு இந்த எண்ணெய் உதவும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமத்திலிருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்ற முடியும். இதன் மூலம் நீங்கள் உங்கள் சருமத்தை பொலிவுறச் செய்யலாம்.
    பெண்களின் உடல் அமைப்பு சுகப்பிரசவத்திற்கு ஏற்றபடியே அமைந்திருக்கிறது. அதனால் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், பயமில்லாமல் இருந்தால், பெரும்பாலும் அதிக வலியில்லாமல் பிரசவம் சுகமாக நடந்துவிடும்
    கர்ப்பமடையும் நாளில் இருந்தே பெரும்பாலான பெண்கள் பிரசவ வலியை நினைத்து பயங்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களிடம் பயம் அதிகரிக்க சினிமா மற்றும் டெலிவிஷன் நாடக காட்சிகளும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலும் தாங்க முடியாத வலியில் கர்ப்பிணி துடிப்பது போன்று காட்டுவதால், தாங்களும் அதுபோல் பிரசவ வலியில் துடிக்க வேண்டியதிருக்கும் என்றே அனைத்து கர்ப்பிணிகளும் அச்சமடைகிறார்கள். ஆனால் நிஜம் அதுவல்ல என்பது மகப்பேறு மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ‘பெண்களின் உடல் அமைப்பு சுகப்பிரசவத்திற்கு ஏற்றபடியே அமைந்திருக்கிறது. அதனால் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், பயமில்லாமல் இருந்தால், பெரும்பாலும் அதிக வலியில்லாமல் பிரசவம் சுகமாக நடந்துவிடும்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பிரசவ வலி பற்றி மகப்பேறு மருத்துவர்கள் கூறும் தகவல்கள்:

    பிரசவ வலியானது இழுத்துப்பிடித்து பிறகு விடுபடுவதும், மீண்டும் இழுத்துப்பிடிப்பதும் விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை ஏற்படும். இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும். சில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் அது பொய் வலியின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

    பனிக்குடம் உடைவதுதான் பிரசவம் நெருங்கிவிட்டதன் முக்கிய அறிகுறி. அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குட கசிவை உணர்ந்ததும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. தாமதித்தால் அது குழந்தைக்கு ஆபத்தாக முடியக்கூடும்.

    பிரசவ காலகட்டத்தில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. கர்ப்பப்பை வாயானது குழந்தையை வெளியே அனுப்பத் தகுந்தபடி விரிந்து கொடுக்கும்போது அந்தப் பகுதியில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு ரத்தப்போக்கு ஏற்படலாம். பிரசவம் நெருங்கும் நேரத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு என்பது அவசரகால சிகிச்சையாகக் கருதப்பட்டு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

    வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியையும் அசவுகரியத்தையும் உணர்ந்தால், அதுவும் பிரசவ வலி ஏற்படப்போவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாததுபோல உணர்ந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    பிரசவம் நெருங்கும் காலகட்டத்தில் எப்போதும் பெண்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு சென்றுவிடவேண்டும். பிரசவ வலியை பெண்களால் தாங்கிக்கொள்ள முடியும். அதுவும் தனது குழந்தை இந்த பூமியை எட்டிப்பார்க்க அந்த வலிதான் காரணமாக இருக்கிறது என்பதை உணரும்போது, வலியை மறந்து குழந்தையின் முகம் காண எல்லா தாய்மார்களும் ஆர்வமாக இருப்பார்கள்.

    வலியை குறைப்பதற்கோ, சுகப்பிரசவத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ மகப்பேறு மருத்துவர் தயாராக இருப்பார் என்பதால் எந்த கவலையும், பயமும் இன்றி பெண்கள் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பிரசவத்தை எதிர்கொள்ள வேண்டும்.
    ×