search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தர்பூசணி பருப்பு தோசை
    X
    தர்பூசணி பருப்பு தோசை

    நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பருப்பு தோசை

    தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி பருப்பு தோசை. சரி, இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப்
    புழுங்கல் அரிசி - 2 கப்
    துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2
    நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை துருவி, அரைத்த மாவுடன் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

    இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×