என் மலர்
ஆரோக்கியம்
உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும்.
உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும். அதனை பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், முகப்பரு போன்ற அடிப்படை சரும பிரச்சினைகள் தோன்றாது.
ஆல்கஹால் இல்லாத டோனர்களை பயன்படுத்த வேண்டும். அவை அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கும். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் (ஏ.ஏ.ஏ), சாலிசிலிக் அமிலம், ஹையலூரோனிக் அமிலம் ஆகியவை உள்ளடங்கி இருக்கும் டோனர்களை பயன்படுத்துவது நல்லது. அவரவர் சரும வகைக்கு ஏற்ற சிறந்த டோனரை தேர்வு செய்வது அவசியம். இதற்கு சரும நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சருமம் வறட்சி கொண்டதாக இருந்தாலோ, ஏதாவதொரு பகுதியில் உலர்வாக காணப்பட்டாலோ அதற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுக்கவேண்டும். தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சரும வறட்சியில் இருந்தும் காக்கும்.
தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. எல்லா சீதோஷ்ணநிலைக்கும் சன்ஸ்கிரீன் ஏற்றது என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெளியே செலவிடும் நேரத்தை பொறுத்து 6 மணிநேரத்திற்கு ஒருமுறை அதனை பூசிக்கொள்ளவேண்டும்.

கோடை காலத்தில் வெறுமனே தண்ணீர் பருகுவது மட்டுமே தீர்வும் ஆகாது. உண்ணும் உணவுகள் நீர்ச்சத்து கொண்டதாகவும், திரவ வடிவிலான ஊட்டச்சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
கோடை காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால், உடல் சோர்வு, தலை வலி, சரும பிரச்சினை, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு வெறுமனே தண்ணீர் பருகுவது மட்டுமே தீர்வும் ஆகாது. உண்ணும் உணவுகள் நீர்ச்சத்து கொண்டதாகவும், திரவ வடிவிலான ஊட்டச்சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
‘‘தினமும் 2 லிட்டர் தண்ணீர், கொழுப்பு அளவு குறைவாக கொண்ட பால் ( 300 மி.லி முதல் 400 மி.லி. ), 500 மி.லி. திரவ உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும்’’ என்கிறார் பெங்களூருவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நினா மரியா.
வெப்பம் அதிகரிக்கும் காலகட்டத்தில் திரவத்தன்மை நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். பழங்களும், காய்கறிகளும் நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடியவை. ஆரஞ்சு, முலாம், தர்பூசணி, வெள்ளரி, பச்சை இலைக் காய் கறிகள், பூசணி, சுரைக்காய் போன்றவை நீர்ச்சத்து அதிகம் கொண்டவை. பால் மற்றும் பால் பொருட்களும் நீர்ச்சத்து கொண்டவை.
கோடையில் உண்ணவேண்டிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்:
ஸ்கிம் பால்: இந்த பாலில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ, பி12, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், எலக்ட்ரோலைட் ஆகியவையும் நிறைந்திருக்கும். அதனால் இது ஊட்டச்சத்து மிக்கது. உடலை வறட்சியில் இருந்து காக்கும் தன்மை பாலுக்கு உண்டு. உடற்பயிற்சி செய்த பிறகு உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு பால் அவசியமானது.
தர்பூசணி: கோடையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தர்பூசணி முக்கியமானது. இதில் 92 சதவீதம் தண்ணீரும், வைட்டமின் ஏ, சி, மெக்னீசியம், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. மேலும் இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. தர்பூசணியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டு கள் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கக்கூடியவை.
ஸ்ட்ராபெர்ரி: இது 91 சதவீதம் நீர்ச்சத்தை கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் அழற்சி பாதிப்பில் இருந்துவிடுபடலாம். இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.
பீச் பழங்கள்: சீனாவை பூர்வீகமாக கொண்ட பீச் பழங்களும் நீர்ச்சத்து நிரம்பப் பெற்றவை. இவற்றுள் வைட்டமின் ஏ, பி மற்றும் சி மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும் இருக்கின்றன. சருமப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றலும் இதற்கு உண்டு. கோடை காலத்துக்கு ஏற்ற பழமான இதில் கலோரியும் குறைவாகவே இருக்கிறது.
ஆரஞ்சு: இதில் நார்ச்சத்தும், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது.
வெள்ளரிக்காய்: நீர்ச்சத்து நிறைந்திருக்கும் இது உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கக்கூடியது. ஒரு வெள்ளரிக்காயில் 8 கலோரிதான் இருக்கும். கோடையில் தவறாமல் உணவில் வெள்ளரிக்காய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கீரை: 96 சதவீதம் நீர்ச்சத்து கொண்டவைகளாக கீரைகள் இருக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நியூரல் டியூப் எனப்படும் குறைபாட்டை தடுக்கக்கூடிய போலேட் என்ற சத்தும் இதில் இருக்கிறது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே போன்ற சத்துகள் எலும்புகளை வலுப்படுத்தக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியவை.
சூப்: இவற்றில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் சூப் உடலுக்கு ஆரோக்கியமானது. சூப்களை தொடர்ந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். கோழி சூப் பருகுவதும் உடலில் நீர்ச்சத்தின் தேவையை பூர்த்தி செய்ய உதவும். கோடை காலத்தில் சூப் வகைகளை பருகலாம்.
தயிர்: உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது, உடல் ஆற்றலை மேம்படுத்த உதவும். இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. தயிர் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
தக்காளி: இதில் 94 சதவீதம் நீர்ச்சத்தும், குறைந்த அளவிலான கலோரியும் இருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தக்காளி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் கொண்டது. இது தவிர எலுமிச்சை சாறு, மோர், இளநீர், மில்க் ஷேக், கரும்புச்சாறு போன்றவற்றையும் கோடை காலத்தில் பருகி நீர்ச்சத்தை தக்கவைக்கலாம்.

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
தேவையான பொருட்கள் :
சீரகம் - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சின்ன வெங்காயம் - 5,
புளி - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 5,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.
பின்னர் அதனை ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.
சூப்பரான சட்னி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
கொரோனா வைரஸ் பரவல் பீதியில் இருந்து மக்கள் ஓரளவு இயல்புக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அலை வீசத்தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே பல மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த குழந்தைகள் மீண்டும் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
இந்த நோய்த்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சி, கற்றல், விளையாட்டு, நடத்தை, தகவல் தொடர்பு, உணர்வுகளை வெளிப் படுத்துதல் போன்றவைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் தொடர்ச்சியாக பள்ளி களுக்கு சென்று தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்புகிறார்கள். தங்கள் நண்பர்களை சந்திக்கும் ஆவலும் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவான மனஅழுத்தம் குழந்தை களின் நடத்தையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு மேற்கொள்ளவேண்டியவை:
* குழந்தைகளிடையே நிலவும் கொரோனா பற்றிய அச்சத்தை தீர்க்க பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அதனை பற்றி தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் கவலை மற்றும் மன சோர்வுக்கு தீர்வு காணலாம். தாத்தா, பாட்டியுடன் வழக்கத்தைவிட அதிக நேரம் செலவிட வைக்கலாம். அப்போது முககவசமும், பாதுகாப்பு உணர்வும் மிக முக்கியம்.
* வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் குழந்தைகளை அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதிக்கலாம். வீடு குப்பையாகிவிடுமே என்று கவலைப்படாமல் அவர்களை மகிழ்ச்சியாக செயல்படவிடுங்கள். அதன்பிறகு அவர் களை கொண்டே வீட்டை சுத்தமாக்குங்கள். வீட்டு வேலைகளை சரியாக செய்தால் பரிசுகொடுத்து அவர்களை பாராட்டுங்கள். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும், சமூக பொறுப்புகளை புரிந்துகொள்வதற்கும் வழிகாட்டலாம்.
* உள்அறை விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தலாம். குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான எளிய விளையாட்டுகளை விளையாடலாம்.
* பெற்றோரின் மேற் பார்வையில் டிஜிட்டல் தளங்கள் வழியாக நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஊக்குவிக்கலாம். ஆன்லைன் வழியாக வாரம் ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களது மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ‘கொரோனா பாதிப்பாக இருக்குமோ?’ என்று பீதி அடையாதீர்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். அதனால் கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டியதில்லை. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தைமஸ் என்னும் சுரப்பி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். கொரோனா வைரஸ் குழந்தை களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததற்கு தைமஸ் சுரப்பியும் ஒருவகையில் காரணம்.
* 18 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 8.5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். ஏனெனில் கொரோனா பற்றிய சரியான புரிதல் குழந்தைகளிடம் இல்லாதபட்சத்தில் அவர்களின் மன நலம் வெகுவாக பாதிப்புக்குள்ளாகிவிடும்.

திருமணத்திற்கான மொத்த செலவில் மண்டபம், ஆடை, நகை, சீர்வரிசை என பல விஷயங்களில் பட்ஜெட்டை விடவும் சிக்கனமாக திருமணத்தை நடத்த உதவும் சில வழிகளை காணலாம்.
திருமணம் என்பது வாழ்க்கையின் முக்கிய தருணம் என்பதால் அதைச்சார்ந்த பல கனவுகள் எதிர்பார்ப்புகள் மணமக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இருக்கும். திருமணத்திற்கான மொத்த செலவில் மண்டபம், ஆடை, நகை, சீர்வரிசை என பல விஷயங்களில் பட்ஜெட்டை விடவும் சிக்கனமாக திருமணத்தை நடத்த உதவும் சில வழிகளை காணலாம்.
திருமணம் என்றதுமே முதலில் முடிவு செய்ய வேண்டியது மண்டபம். இந்த விஷயத்தில் சீசன் இல்லாத மாதங்களில் திருமணத்தை நடத்தலாம். திருமணத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் மேல் இருந்தால் திறந்தவெளி மைதானத்தை தேர்வு செய்து மண்டப வாடகையில் 50 சதவீதம் வரை சேமிக்கலாம்.
மணமேடை முதல் மண்டபம் வரை அலங்கரிப்பது அவசியமாகி விட்டது. அந்த செலவை குறைக்க சீசனுக்கு ஏற்ற மலர்களை பயன்படுத்தலாம். விலை குறையும். செயற்கை மலர்கள் கொண்டும். அலங்காரம் செய்தால் செலவு பாதியாக குறையும்.
திருமணம் என்றாலே ஆடைகள் விஷயத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவழிப்பவர்கள் உண்டு. ஆடம்பரமாக எடுக்கும் உடைகளை மீண்டும் அணிய பலரும் விரும்புவதில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் ஆடைகள் எடுத்து கொண்டு ஆடம்பரமான உடைகளை வாடகைக்கு பெற்று அணிந்து கொண்டு செலவை கட்டுப்படுத்தலாம்.
உடைகளை போன்றே நகைகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. அணியும் உடைக்கு ஏற்ப இந்த நகைகளை தேர்வு செய்து அணிந்து கொள்ளலாம். இவற்றில் ஆடம்பரம் முதல் எளிமையான டிசைன்கள் வரை பல ரகங்கள் இருக்கின்றன.
இப்போது விழாக்களுக்கு அழைப்பு விடுக்க பல முறைகள் உள்ளன. ஸ்மார்ட் போன் என்பதே வாழ்க்கை என்ற நிலையில் இ-இன்லைட் மூலம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கலாம். அழைப்பிதழ் தேர்வு அச்சடிப்பு, தபால் செலவு என எதுவுமின்றி அழைக்கலாம். அதில் பல வடிவங்கள் வீடியோ ஆகியவை உள்ளன.
திருமணத்தில் பல உணவு வகைகளை பரிமாறி ஆடம்பரத்தை காட்ட நினைத்தால் பட்ஜெட் நிச்சயம் எகிறி விடும். எத்தனை பேர் திருமணத்திற்கு வருவார்கள் என்பதை தோராயமாக கணக்கிட்டு சமைப்பதே போதுமானதாக இருக்கும்.
திருமண நிகழ்வில் அனைத்தையும் புகைப்படம் எடுக்காமல் முக்கிய நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்யலாம். இதற்காக புது சிந்தனைகளுடன் பலரும் குறைந்த பட்ஜெட்டில் புகைப்படம் வீடியோ எடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தலாம்.

படிப்போடு, கொஞ்சம் உடல்மொழி அறிவையும் வளர்த்து கொள்வது நல்லது. அப்போதுதான், நேர்காணலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும். உடல்மொழி சார்ந்த தகவல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.
நேர்காணலில், கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதை கடந்து, உடல்மொழியையும் கவனிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் படிப்போடு, கொஞ்சம் உடல்மொழி அறிவையும் வளர்த்து கொள்வது நல்லது. அப்போதுதான், நேர்காணலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும். உடல்மொழி சார்ந்த தகவல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.
* கைகுலுக்கல்
நேர்காணலில் கை குலுக்கும்போது கைகள் வளையாமல் இருப்பது நேர்மையை பளிச்சென அடையாளப்படுத்தும். அலுவலகத்தில் நுழைந்தவுடனே உங்களுக்கான உடல்மொழி தேர்வும் தொடங்கி விடும் என்பதால், உங்களுக்கு ஆபீசில் வழிகாட்டி உதவுபவர் முதற்கொண்டு, நேர்காணல் செய்பவர்களுக்கும் சரியான மரியாதை தந்து பேசுவது உங்கள் ஆளுமையை ஜொலிக்க வைக்கும்.
* கவனியுங்கள்
இன்டர்வியூ அறையில் அவர்கள் அமரச்சொல்லும் முன்பே முந்திக்கொண்டு உட்காருவது, கால்மேல்கால் போட்டு உட்காருவது போன்ற செயல்கள் உங்களை வேலையில் ஆர்வமில்லாதவர் என்றே முத்திரை குத்தும். இருக்கையின் பரப்பில் முழுமையாக அமருங்கள். ஆர்வத்தை காண்பிக்கிறேன் என அதிகம் முன்னே செல்வது ஆவேச, அவசரக்காரர் என்ற பெயரையே வாங்கிக்கொடுக்கும். கால்களை குறுக்காக வைத்து அமர்வது நம்பிக்கை இல்லாததை காட்டிக் கொடுப்பதாக அமையும்.
* தலைசாய்ப்பது ஆபத்து
இன்டர்வியூவில் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது தலையை கீழே கவிழ்ப்பது, எதிர்மறையான கருத்தையே நேர்காணல் செய்பவர்களுக்கு ஏற்படுத்தும். தலையை சமநிலையாக வைத்து கண்களை நேராகப் பார்த்து பேசுவது சிறப்பு.
* நேர்கொண்ட பார்வை
நேர்காணல் செய்பவர்கள் யாராக இருப்பினும் சரி, வெட்கப்படாமல் அவர்களது கண்களைப் பார்த்து பேசுவது முக்கியம். கண்களைப் பார்த்துப் பேசுவது அவர் களுக்கு சரியான மதிப்பை கொடுக்கிறோம் என்று அர்த்தம். கீழே குனிந்து பதில் சொன்னால், அந்த ஆபீசில் என்றுமே நீங்கள் தலை நிமிர்ந்து வேலை செய்ய முடியாது.
* கைகளை கவனியுங்கள்
இன்டர்வியூவில் கைகளை இறுக்கிப்பிடிப்பது, தாடை, வாயை கைகளால் தாங்கிப்பிடிப்பது போன்ற சைகைகள் வேலையில் ஆர்வமில்லாததையும், எதிர்ப்பு, பாதுகாப்பு தேடும் மனநிலை என்பதையே எதிரிலுள்ளவர்களுக்கு உணர்த்தும். பிரார்த்திக்கும்படி கைகளை வைத்திருப்பது நம்பிக்கையின் அடையாளம். அதேபோல கைகளை தளர்வாக தொடைகள் மீது வைத்திருப்பதும் சிறப்பானதே.

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் என்ன என்று பார்ப்போமா?
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் என்ன என்று பார்ப்போமா ?
மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பெற்றோர்களின் வழக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும்.
உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம்.
சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.
போனமுறை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம். அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும்.
பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது. மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.

கருவின் வளர்ச்சிக் காலம் மற்றும் தாய் உட்கொள்ளும் அளவு மருந்துகளின் இரண்டும் கருவின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன.
கருவுற்ற தாய்க்கும், கருவுக்கும் சில நேரங்களில் மருந்துகள் மிகவும் முக்கியமான தேவையாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் மருந்தானாலும், சத்துணவு மாற்றானாலும், மருந்துவரின் ஆலோசனையின்றி எதையும் உட்கொள்ளக் கூடாது. தேவையெனின், வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய மாத்திரைகளை உட்கொள்ள மருத்துவர்களே சிலருக்குப் பரிந்துரைப்பர்..
கருவுற்ற தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், கருவின் வளர்ச்சிக்குப் பிராணவாயுவும் பிற சத்துக்களும் செல்லக்கூடிய நஞ்சுக்கொடி வழியாகவே செல்லும். எனவே, கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும்:
இவைகள் கருவை நேரடியாக பாதித்து கருவின் வளர்ச்சியில் அசாதாரண மாற்றத்தை (பிறவிக் குறைபாடுகள்) ஏற்படுத்தலாம்; சில சமயங்களில் கரு இறக்கவும் நேரிடலாம்.
இவைகள் சில சமயங்களில் நஞ்சுக் கொடி சுருங்கி, கருவுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயு மற்றும் பிற சத்துக்கள் செல்லாமலோ, மிகக் குறைந்த அளவோ கிடைக்க செய்யலாம். இதன் விளைவாக குழந்தை வளர்ச்சி குறைந்தோ, எடை குறைந்தோ பிறக்கலாம்.
இவைகளால் கருப்பையின் தசைநார்கள் அழுத்தமாக சுருங்கி, விரிய நேரிடலாம். இது கருவுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடை செய்வதோடு, உரிய காலத்திற்கு முன்பே பிரசவ வலியை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்தை ஏற்படுத்தக் கூடும்.
கருவுற்ற தாயின் இரத்தத்தை குடல் உறிஞ்சியின் அருகிலுள்ள நஞ்சுக் கொடியின் மிக மெல்லிய தசைப்படலமே சிசுவின் இரத்தத்தில் இருந்து தாயின் ரத்தத்தை பிரிக்கிறது. கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள் குடல் உறிஞ்சியின் உள்ள இரத்தக் குழாய்கள் மூலம் மெல்லிய திரையைக் கடந்து தொப்புள் கொடி வழியாக கருவைச் சென்றடையும்.
கருவின் வளர்ச்சிக் காலம் மற்றும் தாய் உட்கொள்ளும் அளவு மருந்துகளின் இரண்டும் கருவின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. கரு உருவாகி 20 நாட்களுக்குள் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவையே அழித்துவிடநேரிடலாம் அல்லது எந்தவொரு பலனும் கூட இல்லாமல் இருக்கலாம். கருவின் உறுப்புகள் வளரும் கருவுற்று 3 முதல் 8 வார காலத்தில், மருந்துகளால் கரு எளிதில் பாதிப்படையக் கூடியது.
இக்காலகட்டத்தில் உட்செல்லும் மருந்துகளால் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமலிருக்கலாம் அல்லது கருக்கலைய நேரிடலாம். சில சமயங்களில், பிற்காலத்தில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய குறைபாடுகளை ஏற்படுத்தலாம். கருவுற்று எட்டு வாரங்களுக்குப் பிறகு உட்கொள்ளும் மருந்துகளால் வளர்ச்சியுற்ற சிசுவின் உடலுறுப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் ஏதேனும் சில பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), கருவுற்ற காலத்தில் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவின் மீது ஏற்படுத்தும் பாதிப்பின் அளவைக் கொண்டு மருந்துகளை வகைப்படுத்தியுள்ளது. அதிக விஷத்தன்மை கொண்ட சில மருந்துகளால் பிறப்பு குறைபாடுகள் நிகழ வய்ப்புள்ளதனால் , கருவுற்ற பெண்கள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளவே கூடாது எனத் தடை செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, தலிடோமைடு (வணிகப் பெயர் – தாலோமிட்) என்னும் மருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு இம்மருந்தால் சிசுவின் கை, கால் வளர்ச்சியை வெகுவாகக் குறைப்பதோடு, குடல், இருதயம், இரத்த நாளங்கள் ஆகியவற்றையும் பாதிப்படைய செய்தது. சில மருந்துகள் விலங்குகளில் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்திய போதும் மனிதர்களில் ஏதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உதாரணமாக ஆன்டிபெர்ட் என்று சொல்லக்கூடிய மிக்லீஸின். இம்மருந்து வாந்தி, அஜீரணக் கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படுகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை - 2 பிடி
மிளகு - ¼ டீஸ்பூன்
சீரகம் - ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 10
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
செய்முறை
மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் எடுத்து கொள்ளவும்.
கீரையை சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்து எடுங்கள்.
மிக்சியில் வதக்கிய கீரை, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், ப.மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோடை காலம், குளிர்காலம் என எல்லா காலங்களிலும் நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகமாக உதவுவது இளநீர். இயற்கையாக கிடைக்கும் இந்த குளிர்பானத்தை நாம் அருந்துவதனால் நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
கோடை காலம், குளிர்காலம் என எல்லா காலங்களிலும் நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகமாக உதவுவது இளநீர். இளநீரில் வைட்டமின்கள், கனிமங்கள், அமினோ அமிலங்கள், மின்பொருட்கள், என்சைம்கள் என ஏகப்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கும் இந்த குளிர்பானத்தை நாம் அருந்துவதனால் நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
இளநீரில் வைட்டமின்-சி, அமினோ அமிலங்கள், நார்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதினால் நமது வயிற்றுப்போக்கு பிரச்சனை அனைத்தையும் குணப்படுத்துகிறது.
இளநீரில் குறைந்த அளவே கொழுப்புகள் இருப்பதினால் இதை தினமும் அருந்துவதன் மூலம் நமது எடையையும் குறைக்க முடியும். இதில் இருக்கும் குறைந்த கொழுப்புகளும் நல்ல கொழுப்புகளாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் போன்ற அனைத்தையும் இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தடுத்துவிடும். எனவே இதை முடிந்தவரை குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களும் வாரத்திற்கு ஒரு இளநீரை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பொதுவாக நம் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தினமும் நாம் அதிகப்படியான நீர் குடிப்பதன் மூலம் அதை அகற்றி விடலாம் என்பார்கள். அதேபோல்தான் நீரை விட பலமடங்கு சக்தியைக் கொண்ட இளநீரை அருந்துவதன் மூலமாக நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றி விடும்.
நம் சருமத்தில் இருக்கும் புள்ளிகள், கருவளையங்கள், பருக்கள் போன்ற எல்லாவற்றையும் இளநீரை அருந்துவதன் மூலமாக மறையச் செய்யலாம். இல்லையெனில் இளநீரை இரவில் உறங்குவதற்கு முன்பாக முகத்தில் தடவி விட்டு காலையில் கழுவலாம் இதைத் தொடர்ந்து 3 வாரங்கள் செய்வதன் மூலம் உங்கள் முக மாற்றத்தை உங்களால் உணர முடியும். இதில் இருக்கும் சக்திகளினால் நமது சருமமும் பொலிவாகும் மின்னும்.
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை இளநீருக்கு உள்ளது. எனவே இதை அருந்துவதன் மூலமாக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை ஆரம்பத்தில் அழித்துவிடுகிறது. அதை தவிர்த்து உங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் இளமையில் முதிர்ச்சி தோற்றங்களை தடுத்து எப்போதும் இளமையாக வைத்துக் கொள்கிறது.
தினமும் தெருவோரங்களில் மலிவு விலையில் விற்கப்படும் இளநீரில் இத்தகைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே கோடை காலம் என எக்காலத்திலும் உங்களுக்கு தாகம் எடுத்தால் குளிர்பானங்களை அருந்தாமல் இளநீரை வாங்கி அருந்துங்கள்.

முகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும்.
முகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். சிலருக்கு துளைகள் சற்று பெரிதாக காணப்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் எளிதாக இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
அவர்களுக்கு முகப்பரு பிரச்சினையும் தீராத தொந்தரவைத்தரும். மன அழுத்தம், மரபியல் சார்ந்த குறைபாடு, மோசமான சரும பராமரிப்பு போன்றவையும் சரும துளைகள் பெரிதாக தென்படுவதற்கு காரணமாக அமையலாம். இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி சரும துளைகளை குறைக்கலாம்.
முட்டை: முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தில் உள்ள துளைகளை குறைக்க உதவும். இது தோல் இறுக்கமடைவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் எண்ணெய் சுரப்பு தன்மை அதிகரிப்பதை கட்டுப்படுத்தி சரும துளைகளை இறுக்கமடைய செய்ய உதவும். அகன்ற கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி வெள்ளைக்கருவை மட்டும் தரம்பிரித்து முகத்தில் தடவ வேண்டும். நன்கு உலர்ந்ததும் டிஸ்யூ பேப்பரை கொண்டு மெதுவாக துடைத்தெடுக்க வேண்டும். பின்பு முகத்தை நன்றாக கழுவி விடலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகளை போக்குவதற்கும் இதனை பயன்படுத்தலாம்.
முல்தானி மெட்டி: இது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. இது வலுவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையை உறிஞ்சி எடுத்துவிடும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இறந்த செல்களையும் அகற்ற உதவும். முகத்தில் உள்ள துளைகளை குறைக்கும் தன்மையும் கொண்டது. ரசாயனம் கலந்த அழகு பொருட்களை விட முல்தானி மெட்டியை உபயோகிப்பது சிறப்பானது.
ஐஸ் கட்டிகள்: இது பல சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரவல்லது. சருமத்தில் துளைகள் பெரிதாக இருந்தால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. காட்டன் துணியில் ஐஸ்கட்டிகளை பொதிந்து சருமத்தில் மென்மையாக தடவ வேண்டும். இதற்கு சரும துளைகளை சுருக்கும் தன்மை உண்டு.
கடலை மாவு: சருமத்தில் உள்ள துளைகளை சரி செய்யும் சிறந்த சமையல் பொருட்களில் இது முக்கியமானது. இயற்கையாகவே சருமத்திற்கு அழகு சேர்க்கக்கூடியது. இறந்த செல்களை நீக்கவும் உதவும். சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இது காரத்தன்மை கொண்டது என்பதால் அப்படியே உபயோகிக்கக்கூடாது. பால், தயிர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற ஏதாவது ஒன்றுடன் கடலை மாவை கலந்து சருமத்திற்கு உபயோகிக்கலாம். இதனுடன் பப்பாளி மற்றும் அரைத்த மஞ்சளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு பராமரிப்புக்கும் தயிரை உபயோகிக்கலாம். கெட்டி தயிரை முகத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் உலரவிட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும துளைகள் குறையும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் துளைகள் இறுகுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கவும் உதவுகிறது.
சர்க்கரை: இது, சரும துளைகளில் படிந்திருக்கும் எண்ணெய் தன்மையையும், அழுக்கையும் நீக்கக்கூடியது. சிறுதளவு சர்க்கரையுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்ததும் சருமத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
வெள்ளரி: இதனை துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவி வந்தால், திறந்தவெளி துளைகள் நீங்கும். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் முகத்தில் தடவலாம். இதுவும் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது. முதுமையான தோற்றத்தை தடுக்கவும் உதவும். வெள்ளரிக்காயுடன் தயிரையும் சேர்த்து சரும அழகை மேம்படுத்தலாம்.

வீட்டில் உள்ள நபர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமைக்க வேண்டும். சமைப்பது மற்றும் சாப்பிடுவது ஆகியவற்றில் எப்படி சிக்கனமாக செயல்படலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.
இன்றைய காலகட்டத்தில் காலை உணவு மதிய உணவு இரவு உணவு என்று ஒரு பட்டியலே உள்ள நிலையில் உணவில் சிக்கனம் கட்டாயம் தேவை. சமைப்பது மற்றும் சாப்பிடுவது ஆகியவற்றில் எப்படி சிக்கனமாக செயல்படலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.
ஒவ்வொரு உணவுப்பொருளிலும் முழுமையாக சாப்பிடக்கூடிய பகுதியின் அளவு மாறுபடும், எனவே அவற்றை பற்றி தெரிந்து வைத்திருத்தல் அவசியம். கீரை வகைகள் 30-40 சதவிகிதம் மட்டுமே உணணக்கூடிய பகுதியை உடையவை. இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது எந்தெந்த உணவுப்பொருட்களை எவ்வளவு வாங்க வேண்டும் என்று முடிவு செய்ய உதவும்.
சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்து கொள்ளலாம். சமையலில் இந்த பொடியை பயன்படுத்தினால் சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். விலை மலிவான காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம், மேலும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க கூடிய காய்கறிகளை தேர்ந்தேடுப்பது அவசியம்.
இரண்டு முட்டையில் ஒரு கப் கடலை மாவு கலந்துவிட்டால் 6 ஆம்லெட் வரை போட முடியும்.
காய்கறி பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். இதனால் அதிக கியாஸ் வீணாகாது.
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு போன்றவற்றை தண்ணீர் விடாமல் குக்கர் ஆவியில் வேக வைத்த பின்னர் எடுத்து வறுத்தால் ஒரு கப் எண்ணெய்க்கு பதிலாக குறைவான எண்ணெய் போதுமானதாக இருக்கும்.
அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து மிக்ஸியில் அரைத்துகட்டியான பேஸ்ட் போன்று தயார் செய்து பிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் தினசரி கரைசலின் போது புளி வீணாகாமல் தடுக்கலாம்.
பாத்திரத்தை கழுவிய உடனே அடுப்பில் வைத்தால் அந்த பாத்திரம் சூடாகவே இரண்டு நிமிடமாகும். அதனால் கேஸ் வீணாகும், அதற்கு பதிலாக நன்றாக பாத்திரத்தை துடைத்து அடுப்பில் வைக்க வேண்டும்.
வீட்டில் உள்ள நபர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமைக்க வேண்டும். சாப்பாடு மீதமாகி விட்டால் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பழைய சோறாக சாப்பிடலாம். இது வெயில் காலம் என்பதால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். அல்லது வத்தல் போடலாம்.
இட்லி மாவு அரைத்து ஒரு வாரம் வரையில் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஒருவேளை வேகவைத்த இட்லி மிஞ்சிவிட்டால் தாளித்து இட்லி உப்புமாவாக சாப்பிடலாம்.