search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்
    X
    குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்

    குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்

    குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்காக செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கே காணலாம்.
    இன்றைய நகர வாழ்க்கையில் தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அனைத்து அபார்ட்மெண்டுகளிலும் குட்டிக் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வயதான பெரியவர்கள் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்காக செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கே காணலாம்.

    * தவழும் குழந்தைகள் உள்ள வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அவர்கள் தரையில் வாய் வைத்து விடுவார்கள் அல்லது தரையில் இருக்கும் பொருட்களை வாயில் போட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    * வீட்டை குழந்தைகளுக்கு ஏற்ற அமைப்பில் மாற்றி அமைத்துக்கொள்வது அவசியம். அவர்களது குறும்பை முன்கூட்டியே யூகித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னதாகவே அமைத்துக்கொள்வது நல்லது.

    * வீட்டில் குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் அலமாரிகள் இருந்தால் அவற்றை அவர்கள் திறக்க முடியாதபடி ‘லாக்’ பயன்படுத்தலாம். ‘பிரிட்ஜ்’ எப்போதுமே பூட்டப்பட்டு இருப்பதும், கழிவறைகளை தாளிட்டு மூடப்பட்டு இருப்பதும் முக்கியம்.

    * தண்ணீர், எண்ணெய் போன்றவை தரையில் சிந்தினால் உடனே துடைத்துவிட வேண்டும். வழுக்கக்கூடிய தரைத்தளப்பகுதிகளை தேர்ந்தெடுத்து வழுக்கும் தக்க ‘மேட்’ போடவேண்டும்.

    * மேசைகளில் உள்ள ‘டிராயர்களை’ திறந்து விடாமல் ‘சைல்டு லாக்’ போட்டு வைப்பது நல்லது.

    * சமையலறையில் உள்ள கத்தி போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவேண்டும்.

    * சோபா, கட்டில் ஆகியவற்றின் மேல் குழந்தைகள் ஏறி விழுந்தால், அடிபடாத வகையில் கெட்டியான ‘ரக்ஸ்’ வகைகளை விரித்து வைக்கலாம்.

    * மாடிப் படிக்கட்டுகளில் ஏறாமல் இருப்பதற்கும், மேலே உள்ளபோது கீழே இறங்கி விடாமல் இருப்பதற்கும் ‘பேபி கேட்’ தடுப்பை பொருத்திக்கொள்வது பாதுகாப்பானது.

    * டேபிள்களின் முனைகளில் குழந்தைகள் அடிபடுவதை தவிர்க்கும் வகையில் ‘ Co-r-n-er Pr-ot-e-ct-or ’ என்ற சிறிய அமைப்பை பொருத்தி வைக்கலாம்.

    * பல குழந்தைகள் ஆர்வம் காரணமாக ‘எலக்ட்ரிகல் சாக்கெட்டுக்குள்’ விரல்களை விட முயற்சிப்பார்கள். அதை தவிர்க்க தக்க ‘கவர்களை’ உபயோகிக்கலாம். அவர்களது கவனத்தை தவிர்க்கும் வகையில் கண்கவரும் டிசைன்கள் இல்லாதவற்றை பயன்படுத்தலாம்.

    * ஒரு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் உள்ள கியாஸ் ஸ்டவ்வுக்கு ‘பர்னர் நாப் கவர்’ போட்டு வைப்பதன் மூலம், அவற்றை திருகி விடுவதை தவிர்க்க இயலும்.

    * கதவுகளை அவர்களாகவே திறப்பதை தவிர்க்க ‘டோர் நாப் கவர்’ மற்றும் கதவுகள் மூடிக்கொள்ளாமல் இருக்க ‘டோர் ஸ்டாப்பர்’ ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
    Next Story
    ×