search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜவ்வரிசி பருப்பு சுண்டல்
    X
    ஜவ்வரிசி பருப்பு சுண்டல்

    சத்து நிறைந்த ஜவ்வரிசி பருப்பு சுண்டல்

    காலை மற்றும் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் ஜவ்வரிசி பருப்பு சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - 1 கப்
    சிறுபருப்பு - கால் கப்
    வறுத்த வேர்க்கடலை - ½ கப்
    தேங்காய் துருவியது - சிறிதளவு
    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    ஜவ்வரிசியை முதல் நாள் இரவு அல்லது 5 மணிநேரம் ஊறவைக்கவும். அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது. அப்படி ஊற்றினால் குழைவாக வரும். உதிரியாக இருக்காது. சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    சிறுபருப்பை நன்றாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பருப்பு, வறுத்த வேர்க்கடலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

    கடைசியில் துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கலாம்.

    சூப்பரான ஜவ்வரிசி பருப்பு சுண்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×