என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.
    அபுதாபி :

    அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த யூகோவ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் தற்போது கடும் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்களுக்குள் ஏ.சி.எந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த எந்திரங்களை சரியாக பராமரித்து, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்வது சுகாதாரமாகும்.

    இதுபோன்று அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றது. இதனை அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் டைம் பாம் என எச்சரிக்கிறார்கள். சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மோசமாக பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

    சுத்தம் செய்யப்படாத ஏ.சி

    அமீரகத்தின் வாழ்க்கைமுறை பொறுத்தவரையில் வீடுகள், அலுவலகங்களில் 90 சதவீதம் உள்ளே உள்ள அறைகளிலேயே இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே வெளியில் உள்ள காற்றை விட உள்ளே உள்ள காற்றானது 5 மடங்கு அதிகமாக மாசுபடுகிறது.

    அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகை போன்றவைகள் கலப்பது அதிகரிக்கும் என தனியார் மருத்துவமனையின் டாக்டர் ஜானி ஆவூக்காரன் எச்சரித்துள்ளார்.

    நாடு முழுவதும் வசிக்கும் பொதுமக்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே இது குறித்த விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ஏ.சி. எந்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்து தரமான காற்றை சுவாசிக்க பராமரித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.
    பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும். சொந்த வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏன்என்றால் சொந்த வாழ்க்கை வெற்றி என்பது தொழில் வாழ்க்கை வெற்றிக்கு அடித்தளமிட்டுக் கொடுத்து, அவர்களை ஈடுபட்ட துறையில் சாதிக்கவைக்கும் சக்திகொண்டது.

    சரி.. தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக, சறுக்கலின்றி அமைத்துக்கொள்வது அத்தனை எளிதான காரியமா?

    எளிதான காரியம் இல்லைதான்! எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் திருமணமாகி புதிய சூழலுக்குள் வரும்போது சற்று திகைத்துப் போகிறார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.

    புகுந்த வீட்டில் இருக்கும் உறவுகள் சில நேரங்களில் அவளுக்கு அதற்கான அவகாசத்தைகூட அளிப்பதில்லை. கணவர் குடும்பத்தினர் சில விஷயங்களை அவள் மீது திணிக்கிறார்கள். கணவரது குடும்பத்தினர் அனைவரையும் தனது செயல்பாடுகள் மூலம் திருப்திப்படுத்துவது என்பது, பெரும்பாலான பெண்களுக்கு இயலாத காரியம். அதை நினைத்து பெண்கள் சோர்வடைந்துவிடக் கூடாது. சோர்வடைந்தால் அவர்களது மனநலமும், உடல்நலமும் பாதிக்கப்படும். அவர்களது குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதே நேரத்தில் மனக்குழப்பமடைந்து, குடும்ப உறவுகளில் இருந்து பிரிந்துசெல்லவும் முயற்சிக்கக்கூடாது.

    பெண்களால் எதுவும் முடியும். புதிய உறவுகளை அவர்களால் அன்பாலும் வெல்லமுடியும். அதை நிரூபிக்க பெண்கள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பெண்கள் முன்பு பொறுமைமிக்கவர்களாகத்தான் இருந்தார்கள். பொறுமையின் சிகரங்களாக இருந்த அவர்களை குமுறும் எரிமலைகளாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கைச் சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை. அழகை, ஆரோக்கியத்தை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்பை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.

    வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுமை விலைமதிப்பற்றது. பெண்களுக்கு நிறைந்த பலனை தரத்தக்கது.

    பெண்கள் மிகசிறந்த அன்பு என்ற ஆயுதத்தோடு புதிய உறவுகளை அணுக வேண்டும். கணவரது குடும்பத்தினர் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். அவர்கள் ஒருவேளை உங்களை தவறாக புரிந்துகொண்டு செயல் படத் தொடங்கினால் தவறுகளை புரியவைக்க புத்திசாலித்தனத்தை துணையாக்கிக்கொள்ளவேண்டும். ஆத்திரமான பேச்சுக்கள், கோபம் போன்றவை உறவுகளை சீர்குலைக்க மட்டுமே உதவும்.

    ‘நான் நிறைய படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். தகுதிமிக்க எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்?’ என்ற கர்வம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் காலப்போக்கில் உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.

    அன்பு என்பது அனைவரின் இதயத்தையும் பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் பெண்களின் வாழ்க்கையை அழகாக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியை பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.

    பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு விழாத மனிதர்களே இல்லை. பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்க அதிக அன்பை செலுத்தவேண்டும்.

    உங்கள் அன்புக்கு கட்டுப்படாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலம் அவர்களுடைய மனதில் உள்ளதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எப்படி அணுகினால் அவர்களுக்கு உங்களை புரியவைக்க முடியும் என்று சிந்தித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுங்கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். மற்றவர்களின் நிறைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றிய தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப் படுத்துங்கள். அன்பால் அகிலத்தை வென்ற புத்தரை அடிக்கடி நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.
    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறியதாவது:-
    கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். தற்போது கொரானா வைரஸ் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறியதாவது:-

    மூக்கு ஒழுகுதல் (4.1.சதவீதம்), மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது. மேலும் வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு(40 சதவீதம்) பூரணமாக குணமடைவதை காணமுடிகிறது.

    தொண்டையில் புண்(11.3 சதவீதம்.) எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம்(டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது. மேலும் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது. இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்பு உள்ளதால் காதுகேளாமை வரும் வாய்ப்புகளும் அதன் தாக்கமும் முற்றிலும் அறியப்படவில்லை.

    இவ்வாறு டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறினார்.
    தற்போது எந்த வயதினர் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.

    குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.

    வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.
    குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
    சர்வேயை ஆதாரமாகவைத்து செக்ஸாலஜிஸ்ட்டுகள் மிக முக்கியமான விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். அதன் விவரம்:

    “பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந்திருக்கிறது. அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.

    அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.

    பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள்.

    ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.

    தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.
    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்
    சர்க்கரை வள்ளிக்கிழங்கு -1
    பச்சை மிளகாய் - 1 (நறுக்கவும்)
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.

    அரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதைத்தொடர்ந்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.

    இதனை சூரணமாக வைத்துக்கொள்ளவும்.

    சிறிதளவு பிசைந்து வைத்த அரிசி மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் சூரணத்தை வைத்து விரும்பிய வடிவில் கொழுக்கட்டையாக்கி, வேகவைத்து சாப்பிடவும்.
    காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள்.
    மோதல் முற்றி விவாகரத்து கேட்கும் நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கி, அவர்களுக்குள் மீண்டும் மன இணக்கத்தை ஏற்படுத்த கடைசிகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் குடும்பநல ஆலோசனை மையம் அது. காதல் திருமணம் செய்த வேகத்திலே, பிரிந்துபோக தயாராக இருக்கும் இளஞ்ஜோடிகள் அன்று திரளாக அங்கே கவுன்சலிங்குக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்களில் ஒரு ஜோடியில் கணவருக்கு 27 வயது. மனைவிக்கு 23 வயது.

    இருவரும் பொருத்தமான ஜோடி என்று சொல்லும் அளவுக்கு அம்சமாக காணப்பட்டார்கள். ஆனால், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதுபோல் ஆளுக்கொரு பக்கமாக தூரமாக விலகி நின்றிருந்தார்கள். இருவர் அருகிலும் தனித்தனியாக அவரவர் குடும்பத்தை சேர்ந்த பத்து, பதினைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள். அவர்களும் எதிரிகளை பார்ப்பதுபோல்தான் முறைத்துகொண்டு நின்றிருந்தார்கள்.

    தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் அந்த பெண் கோழிக்குஞ்சு போல் அமுங்கியபடி உட்கார்ந்திருந்தாள். தாயார் அவளிடம் நெருக்கமாக அமர்ந்துகொண்டு, ‘இப்படி கேள்வி கேட்டால் அப்படி பதில் சொல்.. அப்படி கேள்வி கேட்டால் இப்படி பதில் சொல்’ என்று குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார். அதுபோல், அவளது கணவருக்கும் அவரது உறவுக்கூட்டம் சுற்றியிருந்து மந்திர ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தது. அந்த பக்கமாக சாலையில் தங்களை கடந்து செல்கிறவர்கள் தங்கள் முகத்தை பார்த்துவிட்டால் அது அவமானம், என்ற எண்ணம் அந்த இளஞ்ஜோடியிடம் இருந்துகொண்டிருந்ததால், அவ்வப்போது முகத்தை திருப்பிக்கொண்டும், மறைத்துக்கொண்டும் இருந்தார்கள்.

    உள்ளே இருந்து முதலில் கணவருக்கு மட்டும் அழைப்பு வந்தது. குடும்பத்தினர் யாரும் அந்த பக்கம் தலைகாட்டிவிடாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். படிப்பில் ரொம்ப சுமாரான மாணவர் பதற்றத்தோடு பரீட்சை ஹாலுக்கு செல்வது போன்ற மனநிலையில் அவர் உள்ளே சென்றார்.

    ஒரு மணி நேரம் ஆகிவிட ‘உள்ளே போனவரை இன்னும் காணலையே.. என்ன நடந்துச்சோ?’ என்றபடி, உள்ளே நடந்ததை எல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவலில், அந்த இளைஞனின் குடும்பத்தினர் ஆர்வத்தோடு வெளியே அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். சீக்கிரமே அவளை பிரித்து விவாகரத்து வாங்கிவிட்டு, அந்த சூட்டோடு இளைஞனுக்கு இன்னொரு பெண் பார்த்து அடுத்தொரு திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்ற வேகம் அவர்களிடம் இருந்துகொண்டிருந்தது.

    சிறிது நேரம் கழித்து மனைவியான அந்த இளம்பெண்ணை உள்ளே அழைத்தார்கள். கணவரை வெளியேவிடாமல் அங்கேயே தனியறையில் உட்காரவைத்துவிட்டார்கள். அவள் உள்ளே சென்றும் வெகுநேரம் ஆனது. அவர்கள் இருவரிடமும், காதல் தொடங்கிய காலத்தில் இருந்து காதலில் இடம்பெற்ற இனிமையான தருணங்கள் வரையிலும்- அவர்கள் இருவரும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ எடுத்த முயற்சிகள் முதற்கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்திய நாட்கள் வரையிலும்- உள்ள அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்துவிட்டு, பிரச்சினை எங்கே- எப்படி உருவானது? அந்த பிரச்சினைகள் இருவரும் பிரிந்துபோகும் அளவுக்கு தீவிரமானவைகளா? என்றெல்லாம் கேட்டறிந்துகொண்டிருந்தார்கள்.

    அந்த இளஞ்ஜோடிகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் நான்கு வருடங்களாக காதலித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த காதல் வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமும், ஒரு மாதமுமே ஆகியிருக்கிறது. அதில் கருத்துவேறுபாட்டுடன் 4 மாதங்களாக பிரிந்திருக்கிறார்கள்.

    இளஞ்ஜோடியிடம் பிரச்சினைகள் உருவாக மூலகாரணம் என்ன என்பதை எளிதாக கண்டறிந்துவிட்ட அந்த ஆலோசனை மையத்தின் தலைமை பெண் அதிகாரி, இருவரையும் நெருக்கமாக அமரவைத்து கைகளை பற்றிப்பிடித்துக்கொள்ள சொன்னார். ‘உங்கள் இருவரது காதல் திருமணம், உங்கள் குடும்பத்தில் உள்ள முக்கியமான சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் உங்கள் இருவருக்குள்ளும் இன்னும் வற்றாத காதல் இருந்துகொண்டிருக்கிறது. திட்டமிட்டு வாழ்க்கையில் இணைந்த நீங்கள், உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய இன்னும் வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கிறது.

    நீங்கள் இருவரும் உங்களை நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களை, உங்கள் அளவுக்கு புரிந்துகொண்டவர்கள் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. உங்களை பிரிக்க சிலர் களமிறங்கியுள்ளனர். இப்போது உங்கள் வாழ்க்கையை காப்பாற்றியாகவேண்டும். அது உங்கள் இருவரால் மட்டுமே முடியும். அனுபவமின்மையால் உங்களுக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதை உங்கள் இரு குடும்பத்தாரும் பெரிதாக்கி, உங்களை இந்த இடம் வரை கொண்டுவந்துவிட்டார்கள். இவர்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையை காப்பாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்க, இருவரும் தங்களுக்குள் இருந்த கோபதாபங்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் வெகுநாட்களுக்கு பிறகு பார்த்து கண்கலங்கினார்கள்.

    சிறிது நேரம் கழித்து ‘உன் அம்மா இப்படி சொன்னார்.. என் அப்பா அப்படி சொன்னார்..’ என்று, பிரச்சினைகள் தோன்றிய விதத்தை இருவரும் மனம்விட்டுப் பேச, அடுத்து அந்த பெண் அதிகாரி செய்த ஏற்பாடுகள்தான் அதிரடி ரகம்.

    அந்த ஜோடியை தனிஅறையில் உட்காரவைத்த அவர், இரு குடும்பத்தாரையும் அவர்கள் அருகில் அனுமதிக்கவில்லை. அவர்கள் காதலித்தபோது பயணம்செய்து மிகுந்த சந்தோஷத்தை அனுபவித்த சுற்றுலா ஸ்தலம் ஒன்றின் பெயரை அவர்களையே சொல்லவைத்து, தனி அறையில் இருந்தபடியே அவர்களை அந்த ஊரில் உள்ள ஓட்டலில் உடனடியாக அறையை பதிவுசெய்யவைத்து, வீட்டிற்கு செல்லாமல் அங்கிருந்தே காரில் அந்த ஊருக்கு செல்லவைத்துவிட்டார். ‘ஒரு வாரம் கழித்து மனம் ஒன்றி திரும்பிவாருங்கள்’ என்று அனுப்பிவைத்துவிட்டார். இருவரிடமும் கிரெடிட் கார்டு இருந்ததால் வேலை எளிதாக முடிந்தது.

    இருதரப்பு பெற்றோரும் ஆலோசனை மையத்திற்கு வெளியே கால்வலிக்க காத்திருக்க, தனித்தனியாக உள்ளே சென்ற இளஞ்ஜோடியோ ஒன்றாக சேர்ந்து வெளியேவந்து, அவர்களுக்கு ‘டாடா’ மட்டும் காட்டிவிட்டு காரில் ஏறி கிளம்பியதை அவர்களது கண்களாலே நம்பமுடியவில்லை. உள்ளே நடந்த எதையும் ஊகிக்க முடியாமல், பின்பு ஆளுக்கொரு பக்கமாக கலைந்துசென்றார்கள்.

    “காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினைகள் உருவாக பெரும்பாலும் இருதரப்பு பெற்றோரோ, முக்கியமான உறவினர்களோதான் காரணமாக இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் மணவாழ்க்கையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள ஒருபோதும் மூன்றாம் நபர்களின் தலையீட்டை அனுமதிக்கக்கூடாது” என்கிறார், அந்த ஆலோசனை மைய பெண் அதிகாரி.

    காதல் மணம்புரிந்தவர்களே கவனமாக இருந்து உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்!
    கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. இந்த தழும்பால் ஏற்படும் வடுக்களை போக்க என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெரும்பாலான வேலைகள் கணினி சார்ந்த டிஜிட்டல் திரைகளின் வழியாகவே நடக்கின்றன. இது தவிர பெரும்பாலானோர் தங்கள் பொழுதுபோக்குகளுக்கு இணையதளங்களையே சார்ந்திருக்கிறார்கள். அதனால் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. அவைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

    கண்ணாடிகள் அணிவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அப்படி கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.

    உருளைக்கிழங்கு சாறையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கேடகோலேஸ் எனும் நொதி சருமத்தை பிரகாசமாக்கவும், கருமையான புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு நான்கு முறை செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.

    வெள்ளரிக்காயும் தழும்புகள் மறைவதற்கு உதவும். அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

    எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் வடுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அழுத்தமாக தடவ வேண்டும். அப்போது மூக்கு பகுதியில் குளிர்ச்சி தன்மையை உணர முடியும். குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம்.
    பாலாடைக் கட்டியில் 50 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு பொருட்கள் இருப்பதால் மெலிந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் பொருட்கள் சீஸில் நிறைந்துள்ளன.
    ‘சீஸ்’ என அழைக்கப்படும் பாலாடைக் கட்டி நமது உணவுப் பொருட்களின் பட்டியலில் நீங்காத இடம் பிடிப்பவை. உணவுக்கு மணமும், சுவையும் தரும் சீஸ், உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அதன் சத்துக்களை பார்க்கலாம்.

    சீஸ், பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பசு, எருமை, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. சீஸ், உடலில் உள்ள சத்துப் பொருட்களை சம நிலைப்படுத்த உதவுகிறது. இதில் உடலை செரிவூட்டும் சத்துப்பொருட்களான புரதம், வைட்டமின் மற்றும் கார்போ-ஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன. தாதுப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதால் ரத்த சோகை, உடல் சோர்வு, இருமல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

    எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் பொருட்கள் சீஸில் நிறைந்துள்ளன. 100 கிராம் பாலாடைக் கட்டியில் 28.5 கிராம் அளவிற்கு கால்சியம் உள்ளது. பற்களின் உறுதிக்கும் கால்சியம் அவசியம்.

    ‘வைட்டமின்-பி’ சத்து பாலாடைக் கட்டியில் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை உடற்செல்களின் வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகின்றன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. பாலாடைக் கட்டியில் 50 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு பொருட்கள் இருப்பதால் மெலிந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். 

    ‘டிரிப்டோபான்’ எனப்படும் அமினோ அமிலங்கள் பாலாடைக் கட்டியில் காணப்படுகிறது. இவை தூக்கமின்மையை போக்குவதுடன், உடல் வலியையும் நீக்கும். பார்வைத் திறனை மேம்படுத்தும் ரெட்டினா செல்களின் செயல்பாட்டை தூண்டும் ஆற்றல் பாலாடைக் கட்டிக்கு உண்டு. செரிமானத்தை தூண்டும் சத்துப் பொருட்கள் இதில் காணப்படுவதால் சீஸ் சிறந்த செரிமான காரணியாக விளங்குகிறது.
    ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது பெண்கள் குறிப்பாக ஐந்து தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகள் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஆடை- அணிகலனில் அபாரமாக ஜொலிப்பார்கள்!
    பெண்கள் டிரெண்டிங்கில் இருக்கும் பேஷன் உடைகளை வாங்கி அணிய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடைகளில் அதனை ஆடையாக பார்க்கும்போது அழகாக இருக்கும். ஆனால் அவர்கள் அணிந்து பார்க்கும்போது அது எடுபடாமல் போய்விடும். அதற்கு என்ன காரணம்? ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது பெண்கள் குறிப்பாக ஐந்து தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகள் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஆடை- அணிகலனில் அபாரமாக ஜொலிப்பார்கள்!

    அதிக அளவில் ஆபரணம் அணிதல்: வளையல்கள், இந்திய பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதிய வயது பெண்கள் வரை வளையல் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தேர்வு செய்யும்போது அவற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணமயமான வளையல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரோ கைக்கடிகாரம் அணிந்திருக்கும் கையிலும் வளையல்களை அணிகிறார்கள். இது பேஷன் தவறுகளில் முக்கியமானதாகும். வளையல் அணியும்போது கைக்கடிகாரம் அணியாமல் இருப்பதுதான் சரியானது. ஒருவேளை கைக்கடிகாரம் அணிய விரும்பினால் அந்த கையில் கடிகாரத்தை மட்டுமே அணிய வேண்டும். மற்றொரு கையில் வளையல்களை அணிந்து கொள்ளலாம். அதேபோல் உடுத்திருக்கும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப அணியும் வளையல்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். அதிக வளையல்கள் அணிவதும் நல்லதல்ல. அதிக ஆபரணங்கள் அணிவது ஆடைகளின் அழகை கெடுப்பதோடு, ஒட்டுமொத்த அழகையும் குன்றச்செய்துவிடும்.

    கூந்தல் அலங்காரம்: பெரும்பாலான பெண்கள் கூந்தல் அலங்காரத்தில் தவறு செய்கிறார்கள். ரப்பர் பேண்ட், பின்கள், ஹெட்பேண்ட் போன்றவற்றை ஒரே சமயத்தில் பயன்படுத்த வேண்டியதில்லை. கூந்தல் அலங்கார பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று நினைப்பது தவறானது. அதில் ஒன்றிரண்டை பயன்படுத்தினாலே போதுமானது. சில சமயங்களில் ஜடை பின்னி அலங்காரம் செய்துகொள்ளலாம். அதுவும் அழகான தோற்றத்தைத் தரும். ஒட்டுமொத்த கூந்தல் அலங்காரத்தையும் செய்துமுடித்துவிட்டு, ஒருமுறை கண்ணாடியில் பார்த்து திருப்தி அடைந்த பின்பு வெளியே கிளம்புங்கள்.

    மேக்கப்பில் கவனம் தேவை: மேக்கப் போடுவது ஒரு கலை. அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்து மேக்கப் வகைகளையும் ஒரே நேரத்தில் முயற்சித்து பார்ப்பது அழகை கெடுத்துவிடும். ஐ ஷேடோ, லிப் பாம் போன்றவைகளே அன்றாட அலங்காரத்திற்கு போதுமானது. ஐ லைனர், பிளஷ், ஷிம்மர், லிப் கலர் போன்றவைகளை திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் பயன்படுத்தலாம். பேஷியல் மேக்கப் போடும்போது சருமத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஒரு பகுதியில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தால் அதனை முழுமைப்படுத்திய பிறகு அடுத்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களுக்கு ஒப்பனை செய்ய விரும்பினால், உதடு களுக்கு கனமான லிப்ஸ்டிக் ஷேடுகளை தவிர்க்க வேண்டும். கண் ஒப்பனைக்கு பயன்படுத்தும் மஸ்காராவும், உதட்டுக்கு உபயோகிக்கும் லிப் பாமும் மிதமாக இருக்க வேண்டும். லிப் லைனர், லிப்ஸ்டிக் ஷேடு போன்றவற்றின் தேர்வில் கவனம் தேவை. இல்லாவிட்டால் முகப்பொலிவு மங்கிவிடும்.

    கனமான நகைகள் அணிதல்: அதிக கனமான மற்றும் அளவுக்கு அதிகமான நகைகளை அணிவதும் பேஷனுக்கு பொருத்தமாக அமையாது. பல பெண்கள் கனமான நெக்லஸ், காதணிகளை அணிகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள்தான் கனமான அணிகலன்களை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அணிகலன்களில் அதிக கவனம் செலுத்தும்போது ஆடையின் அழகு குறைந்துபோய்விடுகிறது. வித்தியாசமான உடைகளை விரும்பி அணியும்போது குறைவான எடைகொண்ட தோடுகளை அணிந்தால்போதும்.

    வண்ணங்களின் தேர்வு: அணியும் ஆடையில் அதிக நிறங்கள் இடம்பெற்றிருப்பதும், ஒரே நேரத்தில் பல வண்ண நிறங்களை கொண்ட அணிகலன்களை அணிந்து அழகு பார்ப்பதும் பேஷனில் செய்யும் மற்றொரு தவறாகும். சரும நிறத்திற்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். நக பூச்சும் அணியும் ஆடை, சருமத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். வெளி இடங்களுக்கு செல்லும்போது உடுத்தும் உடைக்கு ஏற்ற ஹேண்ட் பேக்கையும் தேர்வு செய்யுங்கள்.
    நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
    பெண்களால் எந்த வயதிலும் அழகாக உணர முடியும். உங்களால் முயற்சியில் ஈடுபட முடிந்தால் அதுவும் சாத்தியமே. 40 வயதுக்கு மேல் நீங்கள் சோர்வாக இல்லாமல் சில நல்ல வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை மேற்கொள்வது என்றைக்கும் நன்மை அளிக்கும். பெண்களைப் பொருத்தவரை ஒருவருக்கு வயதாகும் போது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளும் நோய்களின் அபாயங்களும் அதிகரிக்கிறது.

    நாள்பட்ட வலி மற்றும் நோய்களால் அவர்கள் அவதியுறுகின்றனர். வழக்கமான உடல் செயல்பாடு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நோயைத் தடுக்கவும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி உடலை வலிமையாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதைப் பின்பற்றி நடப்பது நீங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவி செய்யும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    ஒவ்வொரு நாளும் நீங்கள் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கலாம். உடற்பயிற்சியின் போது உடற்பயிற்சியின் தீவிரத்தை சரிபார்க்க நீங்கள் இதய துடிப்பு மானிட்டரைப் பயன்படுத்தலாம், அதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் உடற்பயிற்சிகளையும் சரியாக நிர்வகிக்கலாம். உங்களிடம் இதய துடிப்பு மானிட்டர் இல்லையென்றால், ஒரு எளிய துடிப்பு சோதனை உங்கள் இதய துடிப்பு வீதத்தைப் புரிந்துகொள்ள உதவும். உங்கள் இதயத் துடிப்பை கணக்கிட ஒவ்வொரு துடிப்புகளை 6 விநாடிகளுக்கு எண்ணி அந்த எண்ணிக்கையை 10 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.

    40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, இலக்கு இதய துடிப்பு 90-153 ஆகும், மேலும் அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என வாரத்திற்கு 5 நாட்கள் விறுவிறுப்பாக நடப்பது பொருத்தமானது மற்றும் பயனளிக்க கூடியது. உங்களுக்கு அதிக நேரம் கிடைத்தால் ஜாகிங் அல்லது ஓடுதல் போன்ற தீவிரமான பயிற்சிகளை ஒரு நாளைக்கு 15 முறை செய்யுங்கள்.

    நீங்கள் உடற்பயிற்சியை ஒரு வேலையாகப் பார்த்தால், அதன் பலன்களை நீங்கள் அனுபவிப்பது குறைவு. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு வகை உடற்பயிற்சியைக் கண்டுபிடிக்கும் வரை நீங்கள் பரிசோதனை செய்யலாம். ஏனெனில் நீங்கள் விரும்புகின்ற உடற்பயிற்சியை செய்யும் போது டோபமைன், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின், வெகுமதி, விழிப்புணர்வு, மனநிறைவு மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை கையாளும் நரம்பியக்கடத்திகள் ஆகியவற்றை வெளியிட உதவுகிறது.

    வலிமை பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் வயதில் எலும்பு மற்றும் தசை இழப்பைக் குறைக்கிறது. படிக்கட்டுகள் ஏறுவது மற்றும் தோட்டக்கலை போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு உங்கள் உடலை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு முறிவு நோய்க்கு வலிமை பயிற்சி நன்மை பயக்கும். இந்த நோய் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

    வலிமை பயிற்சி இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் 55-66 வயதுடையவர்களுக்கு லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.



    காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும்.
    காதல் மனித வாழ்க்கையை துளிர்க்கவும் வைக்கிறது. துடிக்கவும் வைக்கிறது. எத்தனையோ காதலர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினாலும், தோல்வியடையும் ஒரு சில காதலர்களின் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்துவிடுகிறது. காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    கட்டுக்கடங்காத காதல் தீயால் ஏற்படும் கோர சம்பவங்களையும், இழப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும். அதை பற்றி விரிவாக அலசுவோம்!

    `காதல் ஒரு மோசமான செயல். அதற்கெல்லாம் உன்னை அனுமதிக்க முடியாது' என்று சில பெற்றோர்கள், மகளிடம் சொல்கிறார்கள். அப்படி சொல்லவேண்டியதில்லை. காதல் என்பது மனித உணர்வு. அது இயல்பானது. பயங்கொள்ளக்கூடியதல்ல. கட்டுப்படுத்த வேண்டியதும் இல்லை. மகளுடன் சுதந்திரமாக எல்லா விஷயங்களையும் விவாதித்தால்தான் அவளும் தனது மனதில் இருப்பதையும், தன்னைச் சுற்றி நடப்பதையும் விவாதிக்க முன்வருவாள். காதலுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோரின் மகள்கள் பெற்றோருக்கு தெரியாமலே காதலிக்கிறார்கள். அது தப்பான காதலர்களுக்கு ஊக்கமாகிவிடுவதால், அத்தகைய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படவும் செய்கிறார்கள். மகள் பாதிக்கப்பட்ட பின்பே இத்தகைய பெற்றோருக்கு மகளின் காதலே தெரியவருகிறது.

    `என் மகளுக்கு எதுவுமே தெரியாது. அவள் ஒரு அப்பாவி' என்று சில பெற்றோர் தவறாக தப்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். காதல் தப்பானதல்ல. காதலிக்கும் பெண்களும் தப்பானவர்கள் இல்லை. காதலை சரியாக கையாளத்தெரியாத பெண்களே அதன் ஆபத்துகளில் சிக்குகிறார்கள். காதலை போன்று பெண்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரும். அதை எல்லாம் கையாள பெண்களுக்கு போதுமான அனுபவம் தேவை. அதனால் பிரச்சினைகளே இல்லாத பெண்களாக யாருமே வாழ முடியாது என்பதை உங்கள் மகளுக்கு உணர்த்தி, பிரச்சினைகளை சரியாக கையாள வழிகாட்டுங்கள்.
    ×