என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 2
    கடுகு - தாளிக்க
    வர மிளகாய்-2
    வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    வெல்லம்- தேவையான அளவு
    நல்லெண்ணெய் - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும். கடுகு தாளித்து, வரமிளகாயை அதில் சேர்க்கவும்.

    பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள். 5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் வெல்லத்தை சேருங்கள்.

    அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள். பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம்.

    இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி.

    இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

    வெள்ளைப் பூஞ்சை எனும் நோய் தாக்குதல் தற்போது நோயாளிகளிடம் கண்டறியப்பட்டு வருகிறது. அடுத்த சவாலாக மஞ்சள் பூஞ்சை நோய் பரவி வருகிறது.
    கொரோனா நோயில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இந்தியாவில் காணப்பட்டு வருகிறது. புதுவையிலும் இந்த நோய்க்கு 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    இந்தநிலையில் வெள்ளைப் பூஞ்சை எனும் நோய் தாக்குதல் தற்போது நோயாளிகளிடம் கண்டறியப்பட்டு வருகிறது. அடுத்த சவாலாக மஞ்சள் பூஞ்சை நோய் பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரத்தை சார்ந்த 45 வயது கொரோனா நோயாளிக்கு இந்த நோய் முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பரவி வரும் பூஞ்சை நோய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மஞ்சள் பூஞ்சை நோய் பாம்பு, பல்லி உள்ளிட்ட ஊர்வனவற்றுக்கே ஏற்படும். சுகாதாரமாக இல்லாததும், சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் ஏற்படலாம்.

    இந்த நோய் தாக்கியவர்களுக்கு உடல் அசதி, பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். உள்உறுப்புகள் பாதித்து மஞ்சள் நிற சீழ் வைத்து ஆறாத புண்களாக மாறி மரணம் கூட ஏற்படலாம்.

    சிறந்த சுகாதாரம், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியே பூஞ்சை நோய்களுக்கு எதிரான கவசம் ஆகும். மஞ்சள் பூஞ்சை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அருண் கூறினார்.
    கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களில் இருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம்.
    நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல்; புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல.

    வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும் பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?

    படித்தவற்றை சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்குக் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்கு பிடித்த பழங்களையோ கடலைகளையோ உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.

    படிப்பதைவிட மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள்.

    வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது.

    படிக்கும்போதும் சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றை திரும்ப வாசிப்பது என்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும். படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்பு படுத்திக்கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரில் இருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்குவந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

    கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களில் இருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம். காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஓடக்கூடச் செய்யலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்வதன் மூலம் படித்த பாடங்கள் மறக்காமல் இருக்கும்.
    உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.
    கொரோனா குறித்த புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்த சில எளிமையான வழிகள் இங்கே...

    இதுவரை வந்த தகவல்களின்படி, குழந்தைகளையும் வயதானவர்களையும்தான், கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகிறது என்பது தெரிகிறது. அதனால், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய மூன்றும், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்குக் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளன.

    சிறிய குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டியவை...

    கொரோனா நம் நாட்டைவிட்டுச் செல்லும்வரை, `உங்கள் நண்பர்களைத் தொடாமல் இருங்கள். உங்கள் கைகளை நீட்டினால் வருகிற தூரத்திற்கு நண்பர்களை விலகி இருக்கச் சொல்லுங்கள். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது' என்று சொல்லிக்கொடுங்கள்.

    பொம்மைகளும் டெமோவும்!

    இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை எப்படி மறைக்க வேண்டும் என்பதை, அவர்களுடைய பொம்மைகளை வைத்தே டெமோ செய்துகாட்டுங்கள்.

    பாட்டும் கைகழுவுதலும்

    ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்தச் சொல்லிக்கொடுங்கள். பாட்டுப்பாடிக்கொண்டே சோப்பு போட்டு கைகளைக் கழுவச் சொல்லுங்கள். மறுக்காமல் சந்தோஷமாகச் செய்வார்கள் குழந்தைகள்.

    நோ டச்!

    அடுத்தவர்களைத் தொடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது, கூட்டம் சேர்கிற இடத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுங்கள்.

    வண்ணநீரும் கொரோனா வைரஸ் பரவலும்..!

    ஸ்பிரே செய்யக்கூடிய பாட்டில்களில் வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி, வெள்ளைத்துணியில் ஸ்பிரே செய்து, வாயையும் மூக்கையும் மூடாமல் இருமினாலும் தும்மினாலும் இப்படித்தான் கொரோனா வைரஸ் பரவும் என்று சொல்லிக்கொடுங்கள்.

    க்ளிட்டர் அண்ட் கொரோனா வைரஸ்

    சோப் போட்டு கைகளைக் கழுவ மறுக்கும் பிள்ளைகளின் கைகளில் சிறிதளவு க்ளிட்டர்ஸைத் தடவிவிட்டு, வெறும் தண்ணீரால் கழுவச் சொல்லுங்கள். கையெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் க்ளிட்டரைக் காட்டி, இப்படித்தான் கொரோனா வைரஸும் உங்கள் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

    உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.

    தும்மும்போதும் இருமும்போதும் வாயை டிஷ்யூ பேப்பரால் அல்லது உங்களுடைய கைக்குட்டையால் பொத்திக்கொள்ளுங்கள். இவையிரண்டும் இல்லையென்றால், உங்கள் கைகளின் முட்டிப்பகுதியால் மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ளுங்கள். இருமி, தும்மி முடித்ததும் மறக்காமல் கைகளை சோப்பு போட்டுக் கழுவி விடுங்கள். இந்த சுகாதார விஷயங்களை உங்களைவிடச் சிறிய பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.

    கண் நீர் அழுத்த நோயும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக் கூடிய பார்வை இழப்பும், கண்ணின் கருவிழியில் ஏற்படுகிற நோய் மற்றும் பிற காரணங்களாலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.
    இந்தியாவில் முதியவர்கள் 65 சதவீதம் பேருக்கு கண்புரை நோய் இருக்கிறது. 18 சதவீதம் குழந்தைகள் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கண் நீர் அழுத்த நோயும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வரக் கூடிய பார்வை இழப்பும், கண்ணின் கருவிழியில் ஏற்படுகிற நோய் மற்றும் பிற காரணங்களாலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விழித்திரையில் உள்ள செல்கள் செயலிழந்தும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

    கண்புரை

    மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடனடியாக பார்வையிழப்பு வர வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு ஒரே சிகிச்சை முறை என்பது கண்ணில் இருக்கக்கூடிய கண் புரையை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் செயற்கையாக கண்ணில் லென்ஸ் பொருத்தப்படும். இதன் மூலம் அவர்கள் பார்வையை முற்றிலுமாக திரும்ப பெற முடியும். கண்புரைக்கு அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே தீர்வு காணமுடியும். மற்ற சொட்டு மருந்து உள்ளிட்டவை பலன் தராது.

    பார்வை இழப்பு

    குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுவதற்கு, பிறக்கும்போதே கருவிழியில் இஞ்சுரீஸ் ஏற்படுவதே காரணமாகும். பள்ளிப்பருவத்தில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது வைட்டமின் ஏ குறைபாடால் ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்வை இழப்பு அதிகளவில் இருந்தது. ஆனால் தற்போது மத்திய மாநில அரசுகளின் பல்வேறு பள்ளி சிறார்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் அவை குறைந்துள்ளது.

    எனவே மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கீரை வகைகள், காய்கறி வகைகள், முட்டை, மீன் போன்ற கண் பார்வைக்கு தேவையான அனைத்து சத்தான பொருட்களையும் கொடுப்பதன் மூலம் கண் பார்வை இழப்பை தடுக்கலாம்.

    கோடை

    கோடை காலங்களில் கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிக வெளிச்சம் உள்ள இடங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை பார்ப்பவர்கள் கவனமாக பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிய வேண்டும். கோடை வெயிலில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சாதாரண கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.

    பார்வை குறைபாடு உள்ளவர்கள், தாங்கள் வழக்கமாக போடும் கண்ணாடியும், குறைபாடு இல்லாதவர்கள் கூலிங் கிளாஸ் உள்ளிட்ட கண் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம். கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் கண்ணில் அடிக்கடி தண்ணீர் வரக்கூடும். மேலும் தலை வலியும் ஏற்படக்கூடும். அவர்கள் ஒரு மணி நேர இடைவெளியில் கண்களை மூடித் திறந்து பார்த்து, தொடர்ந்து கணினியில் வேலை பார்க்காமல் இடைவெளி விட்டுவிட்டு பணிபுரிய வேண்டும். முக்கியமாக டி.வி., செல்போன் பார்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
    நம் எண்ணங்கள் பிறரின் உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைக்காமல் இருந்தால் அது நல்ல எண்ணங்கள். மாறாக துன்பம் விளைவித்தால் அது தீய எண்ணங்கள்.
    நம்மால் பின்னோக்கி சென்று புதிய வாழ்க்கையை தொடங்க முடியாது. ஆனால் நாம் நினைத்தால் இன்று முதல் புதிய வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும். புறவெளி கண்ணுக்கு தெரிந்துவிடும். பிறர் ஏதாவது சொல்லி விடுவார்கள் என்று கருதி, சேர்த்து வைத்த குப்பைகளை சுத்தம் செய்துவிடுவோம். அகவெளி யாருக்கு தெரியப்போகிறது. நாம பாட்டுக்கு வழக்கம் போல் வாழ்ந்து விடுவோம் என்று நினைத்தால் நமக்கு தான் இழப்பு. அகவெளியிலும் பழையனவற்றைக் கழித்துவிட்டுப் புதியனவற்றைச் சேர்த்துக் கொள்வது உத்தமமாகும். மனசுக்குள்ளே காயங்கள் தரும் நிகழ்வுகளை மறக்கலாம்.. மன்னிக்கலாம். புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். நம்மை மாற்றிக் கொள்ளலாம், புத்துணர்ச்சி கொள்ளலாம், புதிதாக எதிலாவது ஈடுபடலாம்.

    மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்கள்- நல்ல எண்ணங்கள் அதாவது நேர்மறை சிந்தனை என்றும், தீய எண்ணங்கள் அதாவது எதிர்மறை சிந்தனை என்றும் இருவகைப்படும். நம் எண்ணங்கள் பிறரின் உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைக்காமல் இருந்தால் அது நல்ல எண்ணங்கள். மாறாக துன்பம் விளைவித்தால் அது தீய எண்ணங்கள்.

    வாழ்வில் நமக்கு சாதகமாகவே எல்லாம், எப்போதும் நடக்க வாய்ப்பில்லை. நமக்கு பிடிக்காத சம்பவங்கள் நடந்தாலோ, பிடிக்காத வகையில் யாரேனும் நடந்து கொண்டாலோ, அதை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதை தீர்மானிப்பது நம் மனம். நம் மனதில் தீய எண்ணங்கள் வளர அனுமதித்தால், தாறுமாறாக பிரேக் இல்லாத வாகனம் போல செல்லத் தொடங்குகிறது. நாம் நம் நியாயமான ஆசைகளை அடைய சரியான, நிதானமான நல் வழியில் நேர்ப்பாதையில் பயணிக்கிறோமா? அல்லது பேராசையால் உந்தப்பட்டு, தீய வழியில், குறுக்குப் பாதையில் பயணிக்கிறோமா? என்பதை நடுநிலையோடு நமக்கு நாமே சற்று சிந்தித்து இப்போது சுயபரிசோதனை செய்யலாம்.

    நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்போது, அதனை பின்வருமாறு சமாளிக்கலாம். புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம், இனிமையான பாடல்களை கேட்கலாம். தியானத்தில் ஈடுபடுதல், புன்னகை தவழும் முகத்துடன் வலம் வருதல், முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் இருத்தல் போன்றவைகளில் ஈடுபடலாம்.

    சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்று உறுதிகொள்ளலாம். ‘எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனையை கொடுக்கிறாய்?’ என்று புலம்புவதால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நம்மோடு பயணிப்பவர்களில் பணம் இருக்கும் மனிதர்களிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதர்களிடம் இருந்து ஆறுதல் மட்டுமே கிடைக்கும். ‘தன்னால் உதவமுடியவில்லையே!’ என்ற வருத்தத்தை நாம் ஏன் அவர்களுக்கு கொடுக்கவேண்டும். நாம் கொஞ்சம் யோசித்தால் நம் பிரச்சினைகளை நாமே சரிசெய்ய முயற்சித்து அதில் வெற்றி கண்டு விடலாம். அப்படி வெற்றிகாணும்போது நம்ம மேல நமக்கு ஒரு லவ் வரும் பாருங்க. அந்த உணர்வே தனி. அது போன்ற உணர்வையும் ரசிப்போமே.

    இன்னொரு பெரிய ரகசியம் சொல்கின்றேன். எதிர்மறை எண்ணங்கள் நம்மை சூழும் பொழுது அத்தகைய எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும். முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களோடு அரட்டை , சின்ன சின்ன விளையாட்டுகள் வாயிலாக மகிழ்வை தருவது, பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு நன்னெறி, வாழ்வியல், விளையாட்டு, யோகா, நடனம், கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு திறன் குறித்து இலவசமாக கற்றுக் கொடுத்தல் போன்றவைகளில் ஈடுபடலாம். பெரிய ஆத்ம திருப்தி மனம் முழுவதும் சூழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் எங்கிட்டு இருந்து எதிர்மறை எண்ணம் நம்மை சூழும், தலைதெறிக்க ஓடி விடும்.

    நேர்மறை எண்ணம் நம்மை சூழும்போது நாம் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடும் சக்தி நமக்கு வந்து விடும். அதன்மூலம் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தம் குறையும். பணி செய்யும் சூழல் மேம்படும். பணியின் தரம் அதிகரிக்கும். அப்போது தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும். எல்லாவித சூழல்களிலும் உற்சாகத்துடன் வலம் வரும் நம்மை பிறர் வரவேற்க தயாராகி விடுவார்கள்.

    கட்டுரை: ஆ. ஆண்டனி ரோஸ்லின்,

    (தொழில் முனைவோர் மற்றும் மனிதவள ஆலோசகர்) மதுரை.
    கறிவேப்பிலை இலையை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது உண்டு காம்பை குப்பையில் போட்டு விடுகிறோம் காரணம் அதன் மகத்துவம் அறிவதில்லை. கறிவேப்பிலை காம்பில் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை:

    கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது - 15 வரை
    துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி - 1/4
    சிறிய வெங்காயம் - 3
    பூண்டு - 2 பல்
    தக்காளி - 1 சிறியது
    கரம் மசால் பொடி-1 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - தேவையான அளவு

    தாளிக்க:

    வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
    சோம்பு/ சீரகம் - 1/4 தேக்கரண்டி
    மிளகு-  3

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.

    விசில் போனவுடன் மத்தால் நன்கு கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வடிகட்டி வைத்துள்ள சூப்பை இதில் ஊற்றி கொதிக்க விடவும்.

    அதனுடன் கரம் மசால் பொடி சேர்க்கவும்.

    கடைசியாக சூப்பை இறக்கி அதில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கறிவேப்பிலை காம்பு சூப் ரெடி.
    பெண்களுக்கு செருப்பின் மீதான ஆவல் சிறு வயதில் அவர்கள் கேட்ட சிண்ட்ரெல்லா கதை முதலே ஆரம்பித்து விடுகிறது. இந்த காலத்து சிண்ட்ரெல்லாக்கள் அணியும் காலணி வகைகள் பற்றியே இந்த தொகுப்பு தெரிவிக்கிறது.
    பெண்களுக்கு செருப்பின் மீதான ஆவல் சிறு வயதில் அவர்கள் கேட்ட சிண்ட்ரெல்லா கதை முதலே ஆரம்பித்து விடுகிறது. அதிலும் உடைகளுக்கு தகுந்தவாறு செருப்பு அணியும் பழக்கம், இந்திய பெண்களிடம் உள்ளது. இந்த காலத்து சிண்ட்ரெல்லாக்கள் அணியும் காலணி வகைகள் பற்றியே இந்த தொகுப்பு தெரிவிக்கிறது.

    இரண்டு பட்டை செருப்பு( டபுள் ஸ்ட்ராப் சான்டல்ஸ்)

    அன்றாடம் பயன்படுத்தும் இந்த செருப்பின் வகையே அனைத்து உடைகளுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும். அவற்றின் எளிய வடிவம் காரணமாக அணிவதற்கு சுலபமாகவும், சவுகரியமாகவும் இருக்கும்.

    ஸ்னிக்கர்ஸ்

    மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட காலசாரத்தில் இந்த வகை காலணிகளை அணிவதும் ஒன்று. பெரும்பாலும் மேற்கத்திய நாகரிக உடைகளுக்கே இவை பொருத்தமாக இருக்கும்.

    பிளாக் ஹீல்ஸ்

    சிறிய சதுரம் போன்ற வடிவம் கொண்ட ஹீல்ஸ் என்ற காரணத்தினால் இந்த வகை காலணிகள் பிளாக் ஹீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை ஃபார்மல் மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

    பிளாட்பாரம் ஹீல்ஸ்

    இவ்வகை காலணிகள் 1990 ஆண்டில் சினிமா கதாநாயகிகளின் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவற்றை ஐஸ்வர்யா ராய் முதல் நமது ஊர் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை  அணியாத நடிகைகளே இல்லை. அனைத்து வகையான உடைகளுக்கும் எடுப்பாக இருக்கும்.

    பீப் டோ ஹீல்ஸ்

    பாயின்ட் ஹீல்ஸ் வகையில் கால் விரல்கள் வெளியில் தெரியும் வகையில் இருப்பதே பீப் டோ ஹீல்ஸின் தனித்துவமான வடிவமைப்பாகும். பெரும்பாலும் பென்சில் கட் பேண்ட், ஸ்கர்ட் மற்றும் ஜம்சூட் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

    வெட்ஜஸ்

    இத்தாலியில் 1930-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு 1980-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த காலணி வகை வெட்ஜஸ் ஆகும். ஒரே விதமான மூலப்பொருளை கொண்டு தயார் செய்யப்படுகின்றன. பலாசோ, ஜீன்ஸ போன்ற உடைகளுக்கு இவை பொருத்தமாக இருக்கும்.

    ஜூட்டிஸ்

    ஜூட்டிஸ் மிகவும் பழமை வாய்ந்தது. இவை நமது பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

    படுகாஸ்

    நாகரீகம் வளர்ந்த நிலையில் இந்தியாவில் இவ்வகை மாடல் உருவாக்கப்பட்டது. இவ்வகை காலணிகள் சேலை, சல்வார் என பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
    ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள்.
    ஈப்போதெல்லாம் என்ன குழந்தை பிறந்துள்ளது? என்பதற்கு அடுத்த கேள்வியாக குழந்தை என்ன நிறத்தில் பிறந்துள்ளது? என்று தான் பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு நிறத்தின் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. நிறம் பற்றிய கேள்வி வரும் போது தான் சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் குங்குமப்பூ பற்றிய பேச்சும் எழுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என நம்பப்படுகிறது.

    ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள். சீமந்த விழாவில் குங்குமப்பூவை கொடுக்கும் அளவிற்கு இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்துள்ளது. உண்மையில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். இதற்கு மருத்துவர்களின் பதில் நோ என்பதே.

    உண்மையில் குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களும், மெலனில் சுரப்பியும் தான். சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது இந்த லெமனில் தான். யாருக்கு உடலில் லெமனில் அதிகமாக சுரக்கிறதோ அவர்களுக்கு கருப்பாகவும், மெலமனின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு சிவப்பாகவும் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.

    ஆகவே நிறத்திற்கும், குங்குமப்பூவிற்கும் ஒரு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்பதே உண்மை. ஆனால் கர்ப்பிணிகளுக்கு பல வகைகளில் இந்த குங்குமப்பூ மருத்துவ ரீதியில் உதவியாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால் அதன் மணமும் சுவையும் வாந்தி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. மேலும் பசியையும் தூண்டுகிறது. ஐந்தாம் மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட தொடங்கலாம்.

    உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப்பொருளாகவும் இது உள்ளது.

    குங்குமப்பூவின் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. ஆகவே கர்ப்பிணிகளுக்கு இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை.

    குங்குமப்பூக்கும் குழந்தையின் நிறத்துக்கும் தான் தொடர்பில்லையே தவிர இவற்றில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளன.

    சிலர் தங்கள் குழந்தை நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை அதிகளவில் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு ஆபத்தானது. நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல் குங்குமப்பூ எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவரின் அறிவுரையின் படி உட்கொள்வதே சிறந்தது.
    நீரிழிவு நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது. இதற்கு நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.
    கோடை காலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாம்பழ சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சாப்பிட்டால் சர்க்கரையில் அளவு அதிகரித்து விடுமோ என்ற பயம் இருக்கும்.

    இது குறித்து கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண்நீரிழிவு நோயாளிகள் எந்த அளவில் மாம்பழத்தை எடுத்து கொள்ளலாம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

    நீரிழிவு நோயாளிகள் அவர்களின் சர்க்கரையின் அளவு, கண்ட்ரோலில் இருந்தால் மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் மாம்பழம் சாப்பிடும் அளவை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை சாப்பிடலாம் என்றும், காலை டிபனுக்கும் மதியம் லஞ்சுக்கும் நடுவில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டால் மிகவும் நல்லது என்றும், இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

    இது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
    சாலட், சாண்ட்விச், பீட்சா போன்ற ஏராளமான உணவு பதார்த்தங்களில் காளான் பயன்படுத்தப்படுகிறது. காளானில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.
    காளான், பூஞ்சை குடும்பத்தை சேர்ந்தது. ஆனால் அது பூஞ்சையை போல் நோய்த் தொற்றை உருவாக்குவதில்லை. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடியது. வெவ்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்ட பல வகையான காளான்கள் இருக்கின்றன. ஈரப்பத தன்மை மற்றும் உலர்ந்த தன்மை கொண்ட காளான்கள் அதிகமாக மக்களால் விரும்பப்படுகின்றன.

    சாலட், சாண்ட்விச், பீட்சா போன்ற ஏராளமான உணவு பதார்த்தங்களில் காளான் பயன்படுத்தப்படுகிறது. காளானில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. காளான்களை சாப்பிடுவதன் அவசியம் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்

    காளானில் உள்ள நார்ச்சத்து நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வாரத்திற்கு இரண்டு முறையாவது காளான்களை உட்கொண்டால் ரத்தம் மற்றும் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதற்கு பதில் காளான்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

    புற்றுநோய்

    காளான்களில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்.

    இதய ஆரோக்கியம்

    காளான்களில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். மற்றும் இதய நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ள வழிவகுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விடுபடவும் துணைபுரியும்.

    சில காளான்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. எந்த வகையான காளான்களை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து காளான்களின் ஊட்டச்சத்து மதிப்பு அமைந்திருக்கும்.

    கர்ப்ப காலம்

    தாயின் வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்-சேய் இருவரும் உடலளவில் வலிமையாக இருக்கவும் கர்ப்ப காலத்தில் போலிக் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் தேவையை பூர்த்தி செய்யும் தன்மை காளானுக்கு இருக்கிறது. மேலும் காளான்களில் இருக்கும் தியாமின் (பி 1), ரைபோப்ளேவின் (பி 2), நியாசின் (பி 3) மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் (பி 5) உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் ஊட்டச்சத்துக்கள் தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. ஆதலால் கர்ப்ப காலத்தில் காளானை தவறாமல் சாப்பிடலாம்.
    மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!
    கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!

    பள்ளிக்கு செல்ல முடியாதது, குழந்தைகளின் மனோநிலையை பாதித்திருக்கிறதா?

    பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்ப தில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.

    பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை. பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர் களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது. முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.

    கொரோனா, பெண்களிடம் எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

    கொரோனாவால் பெண்களிடம்தான் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. வருமானம் குறைந்துவிட்டதால் எதிர்காலத்தை பற்றிய கவலை. பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடப்பதால் பிள்ளைகளின் கல்வியை பற்றிய அச்சம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் எழும் சிக்கல் போன்ற அனைத்தும் சேர்ந்து பெண்களை அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் அது தேவையற்றது.

    கோபத்திற்கும்- கொரோனாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

    கொரோனா சிகிச்சைக்கு உள்ளாகியிருப்பவர்களில் 58 சதவீதம் பேர் அதிகமாக கோபம்கொள்ளும் வழக்கம்கொண்டவர்கள் என்பது ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. கொரோனா பாதித்தவர்களின் சுபாவத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ‘பாசிட்டிவ்’ ஆனவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சுபாவங்களிலும் மாற்றம் உருவாகியுள்ளது. சில மாதங்கள் கழித்துதான் அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இயல்புக்கு வருகிறார்கள்.

    முழுமையான இலவச சிகிச்சை மற்றும் எளிதாக குணமடையும் சூழ்நிலை இருந்தும் கொரோனா பாதித்த ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வது ஏன்?

    கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இதுவரை முழுநிலையில் தயாராகவில்லை. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நோய் பாதித்தவர்களில் சிலர் பெரும் அச்சம் கொள்கிறார்கள். இப்போது பயத்தில் இருந்து அனைவரும் அகலவேண்டும். கொரோனா வந்தாலும் அதில் இருந்து மீளமுடியும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கை கொண்டால் தற்கொலை எண்ணம் தோன்றாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.
    ×