search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eyes beauty"

    • லாவெண்டர் எண்ணெய் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.
    • ஆமணக்கு எண்ணெய் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

    காபித்தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

    தேவையான பொருட்கள்

    காபி தூள் - 1/4 கப்,

    இனிப்பு பாதாம் எண்ணெய் 1/2 கப்,

    ஆமணக்கு எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

    சருமத்தில் ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரோஸ்மேரி எண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை ஆற்றவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. இதனால் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை விரைவில் குறைக்க உதவும். எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெயில் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாக்கின்றன. லாவெண்டர் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    ரோஸ்மேரி - 12 சொட்டு,

    லாவெண்டர் - 6 சொட்டு, எலுமிச்சை சாறு - 6 சொட்டு,

    பாதாம் எண்ணெய் - 5 மில்லி

    ஆகியவற்றைப் பாட்டிலில் ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்து 2 முதல் 3 மணி நேரம் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம்.

    • ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
    • ஐ மேக்கப்பை இரவில் முழுமையாக நீக்கி விட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.

    கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, ஒவ்வொரு பாகமாகப் பிரித்துப் பிரித்து வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்னு பார்க்கலாம்.

    கண், புருவம்: தலையில் பொடுகு இருந்தால், அது உதிரும்போது புருவமுடிகளின் இடையில் சிக்கிக்கொள்ளும். இதேபோல முக பவுடர், தூசு போன்றவையும் புருவங்களில் சிக்கிவிடும். இதைச் சுத்தம் செய்யாதபட்சத்தில், இயற்கையாக அடர்ந்த புருவம் உள்ளவர்களுக்குக்கூட நாளடைவில் முடிகள் உதிர்ந்து, புருவம் மெல்லியதாகிவிடும். இதைத் தவிர்க்க, தினமும் குளிக்கும்போது விரல் நகங்களால் புருவத்தை மென்மையாக சுரண்டிவிட்டு, பின் சோப்பு போட்டு அலசுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ஐபுரோ பென்சிலின் நுனி மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் இரவு, புருவ முடி வளர்ந்துள்ள திசையிலேயே, இந்த பென்சிலைக் கொண்டு அழுத்தமாக வரைந்து, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். ஐபுரோ பென்சிலில் உள்ள லனொலின் மற்றும் விளக்கெண்ணெய் இவை இரண்டும் இணைந்து, மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்கவும், உதிர்ந்த புருவ முடியை திரும்ப வளரவைக்கவும் உதவும்.

    குறிப்பு: தினமும் புருவத்துக்கு ஐபுரோ பென்சில் போடும்போது, முடிகளில் மட்டும் இல்லாமல், சருமத்திலும் மை பட்டு, சருமத் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். இதற்கு காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் டிரான்ஸ்பரன்ட் மஸ்காராவை ஐபுரோவின் மேல் போட்டால், முடியைத் தவிர சருமத்தில் பட்டுள்ள மையை நீக்கிவிடும்.

    இமை முடி: ஐஸ்க்ரீம் செய்யத் தேவைப்படும் ஜெலட்டினை (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டால், ஜெல் போல் மாறிவிடும். இதில் பத்து கிராம் எடுத்து, இதனுடன் விளக்கெண்ணெய் ஒரு பத்து கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் இந்தக் கலவையை காட்டனில் தொட்டு கண்களில் ஒற்றி எடுத்து, பத்து நிமிடங்கள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதை, தொடர்ந்து செய்தால், இமையில் முடிகள் வளர்வதுடன் கண்களும் பிரகாசமாக ஒளிரும்.

    கண் இமைகளின் மேல்தோலில் கருமையும், சுருக்கமும் ஏற்படுவதைத் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐ மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருந்தால், இரவு அதை முழுமையா அலசிவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.

    கருவளையம்: கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

    நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம்.
    நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

    1. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு,  நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    2. வெள்ளரிக்காய் - 1/2, உருளைக்கிழங்கு - 1/2, மஞ்சள் தூள் - சிறிதளவு, எலுமிச்சை - 1. வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் துருவிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளவும். பின்னர், கண்களின் மேல் ஒரு காட்டன் துணியை வைத்துக்கொண்டு அதன்மேல் இந்தக் கலவையை பூசிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து கண்களைக் கழுவவும். (இவை, நேரடியாகக் கண்களின் மேல் படக்கூடாது). இவ்வாறு பயன்படுத்துவதால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.



    3. ஸ்டிராபெர்ரி பழத்தை மெல்லியதாக ஸ்லைஸ் செய்து, கண்களின் மேல் நேரடியாக வைத்துக்கொள்ளவும். இது, கருமையை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.

    4. காட்டன் பந்துகளை எடுத்து, அவற்றைக் குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.

    5. ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    6. ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.
    ×