search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை
    X
    சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்
    சர்க்கரை வள்ளிக்கிழங்கு -1
    பச்சை மிளகாய் - 1 (நறுக்கவும்)
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.

    அரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதைத்தொடர்ந்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.

    இதனை சூரணமாக வைத்துக்கொள்ளவும்.

    சிறிதளவு பிசைந்து வைத்த அரிசி மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் சூரணத்தை வைத்து விரும்பிய வடிவில் கொழுக்கட்டையாக்கி, வேகவைத்து சாப்பிடவும்.
    Next Story
    ×