என் மலர்
ஆரோக்கியம்
தினமும் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது நடந்து கால்களின் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.
பெண்கள் நிறைய பேர் கால்வலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். சமையல் அறையில் நின்று கொண்டு உணவு சமைக்கும்போது கால் பாதங்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகும். அதிலும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த உடல் எடையையும் கால்கள் தாங்குவதன் காரணமாக வலியின் அளவு அதிகரிக்கும். தொடர்ச்சியாக நடந்தபடியோ, நின்றபடியோ வேலை செய்பவர்களும் கால்வலி பிரச்சினைக்கு ஆளாவார்கள்.
கால் பாத வலிக்கு தீர்வு தரும் வழிமுறைகள்:
கால்களுக்கு அணியும் காலணிகள் சரியான அளவுகளில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணுக்கால்வலி, பாதங்களில் வீக்கம் போன்ற பாதிப்புகள் நேரும். காலணிகளை இறுக்கமாக அணியும்போது கால்விரல்கள் உராய்ந்து வலியை ஏற்படுத்தும். அதுபோல் தளர்வான காலணிகளை அணிந்தால் நடப்பதற்கு சிரமமாக இருக்கும். காலணிகள் தேர்வில் தவறு செய்வதும் கால்கள், பாதங்களில் வலிகள் தோன்றுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.
உடல் எடை பெருமளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதன் தாக்கம் கால் தசைகளில் வெளிப்படும். கால் தசைகளின் பலவீனமும் வலிக்கு காரணமாக அமையும்.
தொடர்ந்து கால்வலி ஏற்பட்டால் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்போது கால் பாதங்களிலும் அதன் தாக்கம் வெளிப்படும். ஆதலால் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.
உடற்பயிற்சிசெய்யும்போது கால்களுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும். அது ஒட்டுமொத்த உடல் கட்டமைப்புக்கும் நல்லது. கால்களை நன்றாக நீட்டி மடக்கி பயிற்சி செய்ய வேண்டும்.
சிலருடைய கால்களின் அடிப்பாதம் வளைவுகள் ஏதுமின்றி தட்டையாக இருக்கும். சிலருக்கு கால் பாதங்கள் அதிக வளைவுகளுடன் காணப்படும். இத்தகைய பிரச்சினை கொண்டவர்களின் கணுக்காலில் உள்ள தசை நார்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி கால் பாதங்களில் வலியை உருவாக்கும்.
தினமும் ஹைஹீல்ஸ் அணிவதால் கால்களில் சுளுக்கு, வலி, அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 2.5 அங்குலத்திற்கு மேல் ஹைஹீல்ஸ் அணிவது 7 மடங்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் குதிகால் செருப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.
சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல் ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும்.
பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.
அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குமான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும். இதுதான் என் ஆசை!'' என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி.இவர் சேவைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.
இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்கு சென்று வந்த காலத்தில் நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலை என்று வந்ததோ, அதிலிருந்து நேரம் காலம் இல்லாமல் கணினி முன் உட்கார்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
முன்பெல்லாம் உணவு உண்பதற்கு என்று தனியாக அரை மணி நேரம் இருந்தது. ஆனால் இப்போது ஒரு 10 நிமிடம் கிடைத்தாலே பெரிய விஷயம் போல் ஆகிவிட்டது. சிலர் காலையில் எழுந்தது முதல் வேலையில் இறங்கி விடுகின்றனர். மாலை வரை பல் கூட துலக்குவது இல்லை. இப்படியே சென்றால் ஆரோக்கியம் பாதிப்படைவது நிச்சயம்.
பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதை கூறலாம்.
இந்த கட்டியில் நீர் அதிகமாக தேங்கி இருக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும். வெகு நாட்கள் சரி செய்யாமல் இருந்தால் முகத்தில் முடி வளர்ச்சி , உடல் பருமன், முகப்பரு மற்றும் கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும்.
இது போன்ற நோய் பற்றி அதிகம் விழிப்புணர்வு தேவை. அதுவும் வீட்டிலேயே பணிபுரியும் நபருக்கு நிச்சயமாக பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு உண்டு.
இதற்கு முக்கியமான காரணம் சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பது தான். அதிகக்கொழுப்பு சத்துள்ள துரித உணவு உண்பதாலும் இது வரக்கூடும். மாதவிடாய் வராமல் நின்று விட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பல மாதங்கள் வரவில்லையெனில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து இதை உறுதிப்படுத்தலாம்.
தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். சில நேரங்களில் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இதை சுலபமாக குணப்படுத்தலாம். உடல் எடையை குறைத்தல் மற்றும் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ததால் போதுமானது.
இதற்கான மற்றுமொரு காரணம் மன அழுத்தம். இதை நுனியிலேயே கிள்ளிவிட்டால் இந்த நோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் அண்டாது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது இதையெல்லாம் எப்படி சரி செய்வது? இதற்காக எப்படி நேரம் செலவழிப்பது? என்று குழப்பமாக இருந்தால் இதன் பின் விளைவுகளை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்.
வேலையின் இடைவெளிகளில் உடற்பயிற்சி செய்யலாம். பால் சார்ந்த பதப்படுத்திய உணவுப்பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கலாம். முடிந்த வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கிடைத்த நேரத்தில் ஓடி அசைந்து விளையாடுவது போல் ஏதாவது உடல் இயக்கம் சார்ந்த வேலைகளை செய்தால் உடற்பயிற்சி செய்வது போல் கடினமாக தோன்றாது.
எடைக்குறைவு மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால் வெகு விரைவில் மாற்றத்தை உணரலாம்.

மன அழுத்தத்துக்கு நோ சொல்லுங்க. மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
கருகருவென நீண்டு வளர்ந்த கூந்தலுக்காக பெண்கள் ஏங்குவதுண்டு. ஆண்களும் கூட வயதான காலத்தில் தலைமுடியை கருமையாக்க மெனக்கெடுவார்கள். பொதுவாக முகத்துக்கு அழகு தருவதில் துலைமுடியின் பங்கு மிக முககியமானது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க தொடங்கி விட்டால் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே முடியை கருப்பாக்குவதற்காக என்னென்ன மருத்துவம் இருக்கிறதோ அத்தனையையும் தேட ஆரம்பித்து விடுகிறோம். உண்மையில் ஆசிய மக்களுக்கு 25 வயதிலிருந்து முடி நரைக்க தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெலனோசைட்ஸ் என்னும் நிறமியே தலை முடி மற்றும் தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது. தோலில் உள்ள மெலனோசைட்ஸ் குறையத் தொடங்கினால் தலைமுடிய நரைக்கத் தொடங்கும். பரம்பரை இளநரை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றுக்காக நீண்டகாலம் மருந்துகள் சாப்பிடுவது மனஅழுத்தம் ஊதாக்கதிர்களின் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை ஏற்படலாம்.
உண்மையில் இளநரை வந்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்பதே உண்மை. நோய் பாதிப்பின் காரணமாகவோ அல்லது சத்துக்குறைபாடுகளாலோ இளநரை ஏற்பட்டால் அதை சரி செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளநரை வந்தால் மீண்டும் அவர்களது தலைமுடியை கருப்பு நிறமாக மாற்ற வாய்ப்பு இல்லை.
இளநரை வராமல் இருக்க என்ன செய்யலாம்?
வைட்டமின் பி 12 சத்துக்குறைபாடு, இளநரை ஏற்பட மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது, வைட்டமின் பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் இளநரை வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகையால் உணவில் இந்த சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்
* தைராய்டு ஹார்மோன்களின் பிரச்சனை ஏற்பட்டால் அது இளமையிலேயே தலைமுடி நரைக்க ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டு ஹார்மோன் பிரச்சனை அதிகம் ஏற்படும். எனவே அறிகுறிகளை கவனமாக கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான மருத்துவம் மேற்கொண்டால் இளநரை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
* முடி பராமரிப்பு பொருள்களாக லோஷன், கண்டிஷனர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் இளநரை ஏற்படலாம். கலரிங், பிளீச்சிங் மற்றும் ரசாயனப்பொருள்கள் நிறைந்த ஷாம்புக்களை அடிக்கடி தலையில் தேய்த்து குளிப்பதாலும் இளநரை உண்டாகலாம். எனவே முடிந்த வரை தலைமுடியில் பாதிப்பு ஏற்படாதவாறு இயற்கை முறையில் பராமரித்து வர வேண்டும்
* மன அழுத்தத்துக்கு நோ சொல்லுங்க. மன அழுத்தத்துக்கும் இளநரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
கூந்தலை கருமையாக்கும் வழிகள்
இயற்கை முறையில் விளைந்த மருதாணி, அவுரி இலையை காயவைத்த பொடியாக்கி கலரிங் செய்ய பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை, மருதாணி, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வரலாம்.
கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடுவது, கறிவேப்பிலையில் டீ தயாரித்து குடிப்பது போன்றவையும் இளநரை குறைபாட்டை சரிசெய்ய உதவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது நல்லது.

கொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் கோர தாண்டவத்தை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாம் உணர்ந்தும் அறிந்தும் கொண்டிருக்கிறோம். கொரோனா உலகத்திலும், நம் குடும்ப உறவுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் ஏற்படும் பாதிப்பை அறியும் போது நமக்குள் அச்சம் எழுகின்றது. உயிரிழப்புகளும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.
கொரோனா ஊரடங்கின் தொடக்க காலம்
ஊரடங்கு என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான். இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் 25 அன்று முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதன்முதலில் மக்கள் நோயின் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறாமல் பாதுகாப்புடன் வீடுகளில் இருந்தனர். அந்த நாட்களில் பள்ளிக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள், மதவழிபாட்டு தலங்கள், போக்குவரத்து என அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தம் சொந்தங்களோடு, குடும்பங்களோடும் அன்பை பரிமாறி தம் குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு விளையாடி பொழுதை கழித்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களோடு நெருங்கி பழகவும் அவர்களை பற்றி பெற்றோர்கள் நன்கு புரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருந்தது. கொரோனா பரவலும் கட்டுக்குள் இருந்தது.
கொரோனா ஊரடங்கால் களையிழந்த குடும்ப உறவுகள்
கொரோனா ஊரடங்கு சில மாதங்கள் கழித்து இன்பமான சூழ்நிலைகள் அனைத்தும் தலைகீழாக மாறியது. பெற்றோர்களுடன் நேரத்தை செலவழித்த குழந்தைகள் கைப்பேசிக்கு அடிமையாக மாறினார்கள். பப்ஜி, பிரீபையர் போன்ற விளையாட்டுகளில் இரவும், பகலும் மூழ்கி பல மாணவர்கள் தங்கள் உயிரையே இழந்தார்கள். வேலைகள் இல்லாமலும், பணம் இல்லாமலும் ஒவ்வொரு மனிதனும் படும்பாடு சொல்ல முடியாது. இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மக்கள் எண்ணிலடங்கா துன்பங்களுக்கு உள்ளாகினர். சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது மக்கள் தங்களின் தேவைகளுக்காக தனிமனித இடைவெளியின்றி அனைத்து இடங்களுக்கும் செல்ல தொடங்கினர். இதனால் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து கொண்டே சென்றது.
பெருந்தொற்றிலிருந்து மீள பாதுகாப்பு வழிமுறைகள்
கொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காத்து கொள்ள அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நமது நலனை காத்து இவ்வுலகம் நலமுடன் வாழ வழிவகை செய்வோம். முககவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம் மற்றும் முகம், கை சுத்தம் பராமரிப்போம். இவற்றை நாம் கடைபிடித்தால் கொரோனா பெருந்தொற்றிற்கு ஆளாகாமல் நலமோடு வாழலாம். இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்கள் மன உறுதியுடனும், அச்ச உணர்வு இன்றியும் இருந்தால் இத்தொற்றிலிருந்து எளிதில் குணமடைய முடியும். கொரோனா தடுப்பூசிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணையையும் தவறாமல் போட்டு கொள்ள வேண்டும்.
பாதுகாத்து கொள்ளும்...
நாம் ஒவ்வொருவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளையும் அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளையும் அறிந்து செயல்பட வேண்டும். நாம் நலமாக இருந்தால் நம்முடைய குடும்பமும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களும் நலமோடு இருப்பர். கொரோனா பெருந்தொற்றிலிருந்து இவ்வுலகம் மீண்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கும் காலம் விரைவில் வரும்.
ரா.ரீஜா,
முதலாமாண்டு கணிதவியல் துறை,
கிரேஸ் கல்வியியல் கல்லூரி, படந்தாலுமூடு.

எத்தனைதான் பயின்றாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம் தான் வகுப்பறை.
நான்கு சுவர்களுக்கு நடுவில் கிடக்கும் வெற்றிடமென்று பார்க்கத் தெரிந்தாலும், வகுப்பறை என்பது நான்கு திசைகளையும் அளக்கத்துணிந்த இளந்தலைமுறையினரின் பயிற்சிக்கூடம்.
எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம் தான் வகுப்பறை. கரும்பலகையில் எண்ணையும், எழுத்தையும் இன்ன பிறகோடுகளையும், வளைவுகளையும், புள்ளிகளையும் தீட்டிக்காட்டி புரிய வைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாக திகழ்கிறது. பயம் களையப்படுகிற இடத்தில் தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது.
எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று. அதன் செவியிலும், சிந்தையிலும் வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தை திணித்தால் அது திமிறும். மறுதலிக்கும். எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி தெரிந்தவர்கள் ஆசிரியர்கள்.
அதற்கு பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு. எந்த பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்து சொல்லி, அப்பாடம் குறித்த சித்திரத்தை கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசிரியர்கள் பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையை குழந்தைகள் பெறுவது இந்த கணத்தில் தான்.
வறுமை சூழ்ந்த கிராமத்து பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாக பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.
வாழ்வியல் விஷயங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக என்று பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்று தான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளர துணை புரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று. கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. பாடங்களின் கருத்தை எளிதாக கற்றுக்கொடுக்கும் தவச்சாலை.

தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளும் தீரும். இன்று கறிவேப்பிலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 6 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் அவற்றை மிக்சியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பூண்டை போட்டு வதக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அதனுடன் பொடித்த பொடி, சர்க்கரை, மீதமுள்ள வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொதித்ததும் இறக்கி வடிகட்டி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான கறிவேப்பிலை சூப் ரெடி.

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்' உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? என்று பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்' உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? போன்ற பல கேள்விகளுக்கு, சென்னையை சேர்ந்த மலர் மருத்துவ ஆலோசகரான கற்பக ஆனந்தி யூ-டியூப்பில் பதில் அளித்து வருகிறார். நெட்டிசன்களுக்கு மலர் மருத்துவம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வரும் அவரிடம், அதுபற்றி விளக்கமாக பேசினோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
* உடல்நலனிற்கும், மனநலனிற்கும், மலர்களுக்கும் என்ன சம்பந்தம்?
நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தையும் கெடுத்துவிடும். உதாரணத்திற்கு... தொடர் தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படலாம். ஆனால் அதற்கு மன உளைச்சலும் ஒரு காரணமாக அமையலாம். தலைவலி மாத்திரைகள் இதற்கு தற்காலிக தீர்வை தந்தாலும், மனநல ஆரோக்கியம் மட்டுமே நிரந்தர தீர்வை தரும். அத்தகைய மனரீதியான, நிரந்தர தீர்வுகளைதான் மலர் மருத்துவம் தருகிறது.
* மலர்கள் எப்படி மனநலனை மாற்றுகின்றன?
மனிதனுக்கு, 38 வகையான உணர்வுகள் உண்டு. பயம், கோபம், பதற்றம், தனிமை உணர்வு, அதீத சிந்தனை, தோல்வி மனப்பான்மை, கவலை... இப்படி மனித உணர்வுகள் நீண்டு கொண்டே இருக்கும். இவற்றின் தாக்கமாகவே உடலும், உள்ளமும் செயல்படுகிறது. மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆக்ரோஷமாக இருப்பதற்கும் இவையே முக்கிய காரணமாகின்றன. இத்தகைய 38 உணர்வுகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை, சில மலர்களுக்கு உண்டு. இதைதான், இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஆராய்ந்து, அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.
* மனநலனில் மாற்றம் ஏற்பட்டால், உடல்நலனில் மாற்றம் ஏற்படுமா?
நிச்சயமாக...! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம்… போன்ற மன உணர்வுகள் ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இவை, மனிதர்களின் மனநலனை மட்டுமின்றி, உடல்நலனையும் பாதிக்கக்கூடும்.
* மலர்கள் எப்படி மருந்தாகின்றன?
சில நோய்களுக்கு பூக்களை நுகர்வதும், சிலவற்றுக்கு பூக்களை தொட்டு உணர்வதுமே மருந்தாகிறது. மற்ற சில நோய்களுக்கு மலர் மூலிகைகளை உட்கொள்வது தீர்வாகிறது. பூக்களில் இருக்கும் மூலிகைகள்தான், மலர் மருத்துவத்தின் முக்கிய மருந்துகள்.
* என்னென்ன நோய்களுக்கு மலர்கள் மருந்தாகுகின்றன?
ராக் ரோஸ், இம்பேடென்ஸ், கிளிமாடிஸ், ஸ்டார் ஆப் பெத்லெஹம் மற்றும் செர்ரி பிளம் போன்ற மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை போன்றவற்றைப் போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும். அதே போல் மன உளைச்சல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அக்ரிமனி என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலனை தரும். அதே போல் நல்ல உறக்கம், ரத்த சுத்திகரிப்பு, சகிப்புத்தன்மை... என அனைத்து மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மலர் மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒரு மருந்துள்ளது. நம்முடைய பிரச்சினை என்னவோ அதற்கான மருந்துகளை தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இந்தியாவிலும், தமிழகத்திலும் மலர் மருத்துவத்தின் புரிதல் எந்தளவிற்கு இருக்கிறது?
நான் 15 வருடங்களுக்கு முன்பே மலர் மருத்துவத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு, அதில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒருசில மலர் மருத்துவத்தை, அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன். ஆகவே, இந்தியாவிலும், தமிழகத்திலும் பல வருடங்களாக மலர் மருத்துவம் இலை மறை காயாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் பெரியளவில் பிரபலமாகவில்லை. சமீபகாலமாக யூ-டியூப் மூலமாக பிரபலமாகி இருக்கிறது.

இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும்.
மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகமாக தாக்கும் நோய் பட்டியலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இடம் பிடித்துள்ளது. வாழ்நாளில் 53 பேரில் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பப்பையில் உள்ள செல்கள் அபரிமிதமாக வளர ஆரம்பிப்பது புற்றுநோய்க்கு காரணமாகிவிடுகிறது.
இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.
இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்கும். அது பச்சிளம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் நீரிழப்பை பற்றி புரிந்துகொள்வது கடினம். குழந்தையின் சுபாவத்தையும், செயல்பாடுகளையும் கொண்டே அதை அறிந்துகொள்ள முடியும். பச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரையில் சிறுநீர், மலம் இவை இரண்டும் சீராக வெளியேறுகிறதா? என கவனிக்க வேண்டும். குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.
நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

தற்போது எண்ணிலடங்கா செயற்கை பூச்சு கிரீம்கள் விற்பனைக்கு வருகிறது. ஆனாலும் பெண்கள் வயது பேதமில்லாமல் முதத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது. இயற்கை அழகோடு மஞ்சள் அழகும் இணைந்து பெண்கள் ஆரோக்கிய அழகை பெற்றிருந்தார்கள்.
தற்போது எண்ணிலடங்கா செயற்கை பூச்சு கிரீம்கள் விற்பனைக்கு வருகிறது. ஆனாலும் பெண்கள் வயது பேதமில்லாமல் முதத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மஞ்சளை உபயோகப்படுத்தினால் குறைந்த நாட்களில் பயன்பாடு தெரியும். கஸ்தூரி மஞ்சளை குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.
மாதவிடாய்க் காலங்களுக்கு முன் சிலருக்கு முகத்தில் சிறு சிறு பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகக் கூடும்.பகல் நேரங்களில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் மஞ்சளைக் குழைத்து பூசி வந்தால் பருக்கள் வருவது தடைபடும்.
அம்மை, தழும்பு, கரும்புள்ளி போன்றவை மறைய மஞ்சளுடன் சோற்றுக்கற்றாழை நுங்கை (ஜெல்லை) குழைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் அவை மறைந்து சருமம் இயல்பாகும்.
சேற்றுப்புண், பாத எரிச்சல், பாத வெடிப்பு போன்றவை இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூசலாம். பாத வெடிப்புகள் நீங்கி பாதம் அழகாகும்.
சரும சுருக்கத்தைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கும் மஞ்சள், எண்ணெய் வழிந்த முகத்தைக் கொண்டிருக்கும் பெண்க ளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விலை மதிப்புள்ள க்ரீம்கள் செய்யவேண்டிய வேலையைப் பால், தேன் உடன் கலந்து பூசும் மஞ்சள் எளிதாக செய்து விடுகிறது.
தினமும் முகத்திற்கு மஞ்சளுடன் சிறிது கடலை மாவு மற்றும் பால் ஆடை சேர்த்து தடவி வந்தால் முகம் பள பளப்பதோடு முகத்தில் கருமை மற்றும் காயங்கள் நீங்கிவிடும்.
மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால் ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை (Neem) அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.
சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. கறிவேப்பிலை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும். தினமும் கறிவேப்பிலைகளை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.
பின்னர் நன்கு கழுவிய கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
சிறிய துண்டு புளி கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.