search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு தேவை நீர்ச்சத்து
    X
    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு தேவை நீர்ச்சத்து

    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு தேவை நீர்ச்சத்து

    நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.
    வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்கும். அது பச்சிளம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் நீரிழப்பை பற்றி புரிந்துகொள்வது கடினம். குழந்தையின் சுபாவத்தையும், செயல்பாடுகளையும் கொண்டே அதை அறிந்துகொள்ள முடியும். பச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரையில் சிறுநீர், மலம் இவை இரண்டும் சீராக வெளியேறுகிறதா? என கவனிக்க வேண்டும். குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.

    குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.

    நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
    Next Story
    ×