என் மலர்
ஆரோக்கியம்
எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால் மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.
கொரோனா சுத்தம், சுகாதாரத்தையும் கற்றுத்தந்தது போல சிக்கனத்தின் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் இன்றைக்கும் எப்படி பட்ஜெட் போடுவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். எளிமையான பட்ஜெட் போட்டால் நிச்சயம் கடனில்லாத வாழ்க்கை வாழலாம். இதோ.. அதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம்.
முதலில் திட்டமில் மிக அவசியம். சம்பளத்தை கையில் வாங்கியவுடன் எதற்கு எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. திட்டமிடல் எவ்வளவு முக்கியமோ, அதே போல் அத்தியவசியசெலவுகள் எவை என்பதை அறிந்து பட்ஜெட் போட வேண்டியதும் அவசியம். மளிகை சாமான்கள், காய்கறி, பால் போன்றவற்றுக்கு முதலில் முன்னுரிமை அளித்து பட்ஜெட்களுக்கு முக்கியத்துவம் தரலாம்.
ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுவதற்கு முன் கடந்த காலங்களில் தேவையில்லாமல் செய்த செலவுகள் என்னென்ன? அந்த செலவை இந்த மாதத்தில் எப்படி குறைப்பது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையேற்றம், பட்ஜெட்டில் செலவு எகிறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கடைகளுக்கு செல்லும் போது வாகனங்களில் செல்வதை தவிர்த்து நடந்து செல்லலாம்.
இன்று என்ன சமைக்க போகிறோம் என்பதை சரியாக திட்டமிட்டு அதற்கான பொருட்களை தயார்நிலையில் வைத்துக்கொண்டு சமைக்கத் தொடங்கினால் எரிவாயு வீணாவதை தவிர்க்கலாம்.
அதே போல்தேவைக்கேற்ப மட்டும் மின் சாதனங்களை இயக்குவது நல்லது. உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், மின் சாதனங்களை ஒதுக்கி வைத்து விட்டு சிறுசிறு வேலைகளை செய்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அத்தியாவசியப்பொருட்களை தவிர மற்ற பொருட்களை அவசியம் தேவைப்பட்டால் மட்டும் வாங்குவது நல்லது. தேவையற்ற பொருட்கள் வாங்குவதை குறைத்து செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் பெருமளவில் சேமிக்கலாம். நெருக்கடியான காலகட்டங்களில் உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே. சம்பளம் வாங்கியவுடன் முதலில் அவசரத் தேவைக்காக சிறிதளவு பணம் ஒதுக்கி வைக்க வேண்டும்.
நிகழ்கால வாழ்க்கையில் சிக்கனம் எப்படி தேவையோ அது போல எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் சேமிப்பு கட்டாயம். மாதந்தோறும் சேமிப்பதற்காக குறைந்த பட்சம் 1000 ரூபாய் தனியாக எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இந்த சேமிப்பு பிள்ளைகளின் கல்விச்செலவு மற்றும் பிற தேவைகளுக்கு நிச்சயம் உதவும்.
இதுபோன்று எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால் மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனை மிகவும் வசிகரப்படுத்தியது செல்போனாகத் தான் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறைகள் மிகவும் நேசிக்க கூடிய கையடக்க காதலியாகவும், காதலனாகவும் மாறிவிட்டது எனலாம்.
உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் பேச கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் செல்போன். முன்பு எல்லாம் நாம் ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் தொலைபேசி மூலம் தான் பேச முடியும். முகம் பார்த்து பேச முடிவதில்லை. குரல் ஒலி மட்டும் கேட்கும். ஆனால் இன்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி, கேமரா, வீடியோ, விளையாட்டுகள், முகம் பார்த்து பேசுதல் என இதன் செயல்பாட்டை பெருக்கி கொண்டே போகிறது தயாரிப்பு நிறுவனங்கள்.
முகம் சுளிக்க வைக்கும்
செல்போன், உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்ததை அற்புத படைப்பு எனலாம். தொலைபேசியை நாம் ஒரு இடத்தில் வைத்து தான் பயன்படுத்த முடியும். ஆனால் செல்போன் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் எடுத்து செல்ல முடியும். அதன் உருவ அளவு, எடை, அமைப்பு மிகவும் குறைவாகவும், அழகாகவும் அமைந்திருக்கும். இவ்வாறெல்லாம் பயன் உள்ளதாக இருக்கும் செல்போனை, நம் இளைய சமுதாயம் நல்வழிகளில் பயன்படுத்தாமல், தீய வழிகளில் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
பொதுவாக இன்று இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகம் செல்போன் பயன்படுத்துகின்றனர். பொது இடங்களிலும், பஸ்களிலும் போட்டிபோட்டு சத்தமாக ஒலிக்க செய்யும் தரம் குறைந்த சினிமா பாடல்கள், மேலும் செல்போனில் தேவையற்ற மற்றும் ஆபாச பேச்சுகளை யாரிடமாவது பேசுவதை இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும்.
உயிர்கொல்லி நோய்
இன்றைய இளம் தலைமுறைகளின் உடலில் ஓர் முக்கிய அங்கமாக மாறி விட்டது செல்போன். 80 சதவீத இன்றைய இளைய தலைமுறையினர் இரவு நேர நீண்ட பேச்சு, மறைந்து இருந்து பேசுவது, பாலியல் படங்களை வைத்திருப்பது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அணுகுண்டை நல்வழியில் பயன்படுத்தவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தீய வழிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதே போல் செல்போனும் தவறான வழிக்கு பயன்படுத்தப்படுகிறது. செல்போனில் தொடர்ந்து விளையாடுவதால் இளைஞர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. கழுத்து வலி, மனநோய், முதுகுவலி, கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஆகவே செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும். சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.
சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும். முகக்கவசம் அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும். முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.
வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரும எரிச்சலையும் போக்கும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல. வெளிப்புற வெப்பநிலையுடன் கலந்திருக்கும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் உதவும். புற ஊதாக்கதிர்கள் படிவதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாகும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்திவிடும். ஆதலால் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.
‘எலாஸ்டிக்’ பிணைக்கப்பட்டிருக்கும் முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. அதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாக அமையும். முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மறைக்க வேண்டும். அதேவேளையில் சுவாசிப்பதற்கு ஏதுவாக முகக்கவசம் சற்று தளர்வாகவும் இருக்க வேண்டும். அதிக தளர்வும் கூடாது. எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம் சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும். சருமத்தின் மென்மையை பாதிக்கும் வகையில் முகக்கவசம் அமைந்துவிடக்கூடாது.
பெண்கள் வெளியே செல்லும்போது ஒப்பனை செய்து கொள்வதற்கு மறக்கமாட்டார்கள். முகக்கவசம் அணியும்போது அதனை தவிர்ப்பதுதான் நல்லது. ஏற்கனவே முகத்தை மூடியிருக்கும்பட்சத்தில் ஒப்பனை பொருட்களும் ஆக்கிரமித்தால் சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்காது. அதன் காரணமாக சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிவிடும்.

ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
மாதவிடாய் கோளாறு பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். அவை கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.

உயரத்திற்கு ஏற்ப உடல் எடையும் இருக்க வேண்டும். அதைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தாலே அதுவும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் காரணமாகிவிடும். தைராய்டு பாதிப்பு, பெண்களின் ஹார்மோனில் சீரற்ற தன்மையை உண்டாக்கிவிடும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுத்துவிடும். தொடர்ந்து மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்பட்டுகொண்டிருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைத்துவிடும்.
மேலும் தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், சிறு வயதிலேயே மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்ட பெண்கள், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் பிறந்தவர்கள் போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை. உடல் இயக்கம் சீராக செயல்படுவதையும் அது உறுதி செய்கிறது. ஆதலால் ஆரம்ப நிலையிலேயே மாதவிடாய் சிக்கல்களுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் பராமரிப்பது எப்படி என்பது குறித்த 10 முத்தான அடிப்படை விதிமுறைகளை இங்கே அறிநது கொள்ளலாம்.
1. பொருட்களை வகைப்படுத்தி ஒழுங்காக வைக்க வேண்டுமென்றால் முதலில் தேவையற்றவற்றை நிராகரிக்க வேண்டும். உதாரணமாக ஆடைகள், புத்தகங்களை வகைப்படுத்த வேண்டும். எதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமோ அந்த வகையில் அமைக்க வேண்டும்.
2. வகைப்படுத்தலின் போது தேவைப்படடால் துணைப்பிரிவு செய்யுங்கள். அதாவது ஆடைகளாக இருந்தால் மேலாடை, கீழாடை, உள்ளாடை எனப்பிரித்து வையுங்கள்.
3.உங்களுக்கு எந்தபொருளை வைத்திருந்தால் மகிழ்ச்சியளிக்கிறதே அதை மட்டும் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக பழைய துணி ஏதேனும் பிடிக்கவில்லையென்றால் அதை அகற்றி விடுங்கள். அது அளவில் சிறிதாகி உங்களது எடையை நினைவூட்டி உங்களை சோகமாக்கும்.
4. எல்லாப்பொருட்களையும் அப்புறப்படுத்திய பிறகு, காலியான இடத்தை ஒழுங்கமைக்க ஆரம்பியுங்கள். எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். மாறாக திணித்து வைக்கக்கூடாது.
5. வீட்டை சுத்தம் செய்யும் போது சோம்பேறித்தனமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் வேலையை ஒத்திவைக்காமல் உடனுக்குடன் முடிப்பது நல்லது.
6. பொருட்களை சிறியது பெரியது என அடுக்க வேண்டும். ஒரே அளவில் இருக்கும் பொருட்களை சேர்த்து அடுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும். மேலும் இப்படி செய்வதால் பொருட்களும் தொலைந்து போகாமலிக்கும். அவை இருக்கும் இடத்தையும் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
7.அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை கைக்கு எட்டும் தூரத்தில் வைப்பது நல்லது. அரிதாக பயன்படுத்தும் பொருள்களை அவற்றுக்கு பின்னாலோ அல்லது கடைசியிலோ வைக்கலாம்.
8. எந்த வகையில் பொருட்களை அடுக்க ஆரம்பித்தீர்களோ அதிலிருக்கும் பொருட்கள் வீட்டில் எங்கே இருந்தாலும் எடுத்து வந்து ஒரே இடத்தில் வைக்க வேண்டும். எது வேண்டும் எது தேவையில்லை என்று வகைப்படுத்த மிகவும் முக்கியமான கட்டம் இது. ஐந்து விதமாக ஒரே பொருளை வைத்திருந்தால் அதில் ஒன்றை மட்டும் வைத்து விட்டு மற்றவற்றை நிராகரிக்கலாம்.
9. உங்கள் வீட்டுக்கு ஒருமுறை நன்றி கூறுங்கள். இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு பயிற்சிதான். உங்கள் வீடு உங்களை பாதுகாத்து இத்தனை பொருட்களை வைக்க இடம் தந்ததற்காக நன்றி கூறுங்கள். நீங்கள் நிராகரிக்கப்போகும் பொருட்களுக்கும் அவை செய்த சேவைக்கும் கூட நன்றி கூறலாம்.
உங்களுக்கு தேவையில்லாத பொருட்கள் வேறொருவருக்கு மகிழ்ச்சியளிக்கலாம். அவற்றை யாருக்காவது அன்பளிப்பாக கொடுத்து விடுவது மிகவும் மகிழ்ச்சி தரும்.

தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 1 கப்,
வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்.
அரைக்க...
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2.
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னா வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை நன்கு அரைத்து அதை கொத்தமல்லி கலவையில் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
சூடான சாதத்துடன் பறிமாறவும்.

ஆண்கள் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.
இளைஞர்கள் நிறைய பேர் தாடி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை அழகாக அலங்கரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.
தாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாடி வளர்க்கலாம்.
நன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தனது வாழ்க்கை துணை தாடி வளர்ப்பவராக இருக்கும் பட்சத்தில் அவருடனான இல்லற பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கும் என்றும் ஒருபகுதி பெண்கள் கருதுகிறார்கள். தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.
‘டேட்டிங்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றில், தாடி வளர்ப்பவர்களை கவர்ச்சிகரமான நபர்களாக 60 சதவீத பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தாடி, மீசையுடன் கூடிய ஆண்களை தங்களின் சிறந்த பார்ட்னராக தேர்வு செய்தார்கள்.
ஷேவிங் செய்யும்போது சருமம் எரிச்சலுக்குள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். ஆனால் தாடி வளர்த்து கொண்டிருந்தால் முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது. முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டால் தாடி வளர்க்க தொடங்கிவிடலாம்.
ஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
தாடி வளர்ப்பது பெரிய விஷயமல்ல. அதனை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அதில்தான் தாடியின் அழகு வெளிப்படும்.

பயம், வெளிப்படுத்த முடியாத கவலைக்கு ஆளாகும் குழந்தைகளும் விரல் சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள். குழந்தைகள் விளையாடும்போது தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அவைகளின் கைகளில் படியும்.
குழந்தைகள் விரல் சப்பும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். விரல் சப்பும்போது அவைகள் பாதுகாப்பாக இருப்பதுபோல் உணர்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பயம், வெளிப்படுத்த முடியாத கவலைக்கு ஆளாகும் குழந்தைகளும் விரல் சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.
குழந்தைகள் விளையாடும்போது தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அவைகளின் கைகளில் படியும். அந்த சூழலில் அவைகள் விரலை சப்புவது சுகாதார பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். குழந்தை பருவத்தில் அவைகளின் ஈறுகள் மென்மையாக இருக்கும். தொடர்ச்சியாக கட்டை விரலை சப்பிக்கொண்டிருந்தால் அது ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தி பற்களின் கட்டமைப்பை சிதைத்துவிடும். தொடர்ந்து விரலை சூப்பும்போது விரல் எலும்புகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்திற்கு தீர்வு என்ன?
விரலை சப்ப தொடங்கும்போதெல்லாம் அவைகளின் கவனத்தை திசைத்திருப்பும் விதமாக பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். சுவாரசியமான கதைகளை சொல்லுங்கள். விரல் சப்புவதால் ஏற்படும் பாதிப்புகளை கதைகள் வழியாகவும் புரியவைக்கலாம். விரலை சப்பாமல் இருக்கும் சமயத்தில் அவர்களை பாராட்டலாம்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் உருவத்தில் பலகாரங்களும் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ந்து விரல் சப்பிக்கொண்டிருந்தால் அப்படி மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை கொடுத்து, விரல் சப்புவதை தவிர்க்கச் செய்யலாம்.
விரல் சப்பும் பழக்கத்தில் இருந்துவிடுபட்டு விட்டு, மீண்டும் அந்த பழக்கம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தில் இருக்கும்போதும், தங்களுக்கு சவுகரியமான சூழல் இல்லாத போதும் குழந்தைகள் விரல் சப்புகின்றன. அதனால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு பெற்றோர் செயல்பட வேண்டியது அவசியமானது.
தங்க நகைகளை காட்டிலும் உடையின் நிறத்துக்கு ஏற்றபடி பொருத்தமாக அணிவதற்கு ஃபேஷன் ஜுவல்லரிதான் இன்றைக்கு அலுவலகம் செல்லும் பெண்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளது.
டீன் ஏஜ் பெண்கள் மட்டும் தான் ஃபேஷன் ஜுவல்லரியை அணிவார்கள் என்கிற காலம் இப்போது மலையேறி போய்விட்டது. தங்க நகைகளை காட்டிலும் உடையின் நிறத்துக்கு ஏற்றபடி பொருத்தமாக அணிவதற்கு ஃபேஷன் ஜுவல்லரிதான் இன்றைக்கு அலுவலகம் செல்லும் பெண்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளது. மாடர்ன் லுக்கும் பாரம்பரிய லுக்கும் சேர்ந்து கலவையாக காட்சியளிக்கும் மணிமாலைகளை நீங்களே செய்து அசத்தலாம். சற்றே விலைஉயர்ந்த மணிகளை பயன்படுத்தினால் நீண்ட காலத்துக்கு இவற்றை பாதுகாக்கலாம்.
இப்போது எளிமையான டிசைன் மணிமாலை ஒன்றை எப்படி செய்யலாம் எனப்பார்ப்போம். இதற்கு பயன்படுத்தும் பொருட்கள் சாதாரணமாக கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். பிளைன் செயினை, கவரிங் நகைகள் விற்கும் கடைகளில் அல்லது ஃபேன்ஸி ஸ்டோர்களில் வாங்கலாம்.
தேவையான பொருட்கள்
சிறிய சைஸிலான மணிகள், இணைப்பான், கம்பிகள், பிளைன் செயின், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர்.
பிளைன் செயினின் கொக்கி மாட்டும் பகுதியை விட்டுவிட்டு தொங்கும் பகுதியை பாதியாக வெட்டுங்கள்.
கம்பி இணைப்பானின் கழுத்துக்கு மாலை எவ்வளவு நீளம் தேவையோ அவ்வளவு நீளத்துக்கு மூன்று கம்பிகளை வெட்டி அதில் இப்படி மணிகளை கோர்த்து முடிச்சிடுங்கள்.
இரண்டாக வெட்டி வைத்திருக்கும் பிளைன் செயின் ஒரு முனையில் கோர்த்து வைத்திருக்கும் மணிமாலைகளின் ஒவ்வொரு முனையையும் பீட் ஸ்பேசர் வைத்து இணையுங்கள். அதாவது பிளைன் செயின் வளையத்துக்குள் சிறிய அளவிலான கோல்டன் கலர் பீட் ஸ்பேசர் கோர்த்த மணிமாலை கம்பியை விடுங்கள். வளையத்துக்குள் விட்ட கம்பியை மீண்டும் பீட் ஸ்பேசருக்குள் விட்டால் ஒரு முடிச்சு உருவாகும். இந்த முடிச்சை பிளையர் கொண்டு அழுத்திவிட்டால் பிளைன் செயினில் மணிமாலை அவிழ்ந்து விடாமல் செட் ஆகிவிடும்.
அடுத்ததாக இரண்டு மணி கோர்த்த கம்பியையும் இணைத்துவிட்டு மறுமுனையில் மணிகள் அவிழ்ந்துவிடாதபடி முனையில் முடிச்சிட்ட பின்னல் போல பின்னுங்கள்.
பின்னி முடிந்ததும் செயினின் மற்றொரு முனையில் மூன்று மணிமாலைகளையும் பீட் ஸ்பேசரால் செயினின் மற்றொரு முனையில் இணையுங்கள். இதோ அணியத் தயாராகிவிட்டது பின்னல் மணிமாலை.

கொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கு, உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாக செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கூறினர்.
உடல் பருமன் நோய் தொடர்பாக ஆன்லைன் மூலம் நடந்த கருத்தரங்கத்தில், செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர்கள் பி.கே.ரெட்டி, கவுர்தாஸ் சவுத்திரி, வி.பாலசுப்பிரமணியன், பி.பிரமநாயகம் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஒரு காலகட்டத்தில் உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும் அறிகுறியாகக் காணப்பட்டது. ஆனால் உடல் பருமன் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்க்கு ஆளாக வேண்டியதாகிவிடுகிறது.
போர்கள், பஞ்சம் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் நோயை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் இன்று 3 வேளை உணவு மற்றும் பீட்சா, பர்கர் என்ற கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.
ஏழைகள் அதிகம் வாழும் ஆப்ரிக்காவில் உடல் பருமன் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு. உடல் பருமன் நோயினால், 49 சதவீதம் இருதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகின்றன.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கும் அதே அளவுக்கு ஆபத்து உள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பரம்பரை பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல் பருமனுக்கு மிகுந்த தொடர்புடையவையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதோடு, சோம்பேறித்தனம் அதிகமுள்ள நாடாக விளங்குகிறது. அதிக கொழுப்புள்ள உணவுதான் உடல் பருமனுக்கு காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் முதல் எதிரி சர்க்கரைதான். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்குகள் உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன.
உடல் பருமனில் இருந்து விடுபட விரதம் இருக்கலாம். சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கலோரி குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அறிவுரை வழங்கினர்.

உங்களை நீங்களே அழகாக்கிக்கொள்ள செல்ப் க்ரூமிங் என்ற பயிற்சி உதவியாக இருக்கும். சுயமாக சீர்படுத்தும் இந்த பயிற்சியை மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
ஒருவரது முகத்தை மட்டும் வைத்து அழகை மதிப்பிட்டுவிட முடியாது. தலை முதல் கால் வரையிலான ஒவ்வொரு உறுப்பையும் எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாவும் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே அழகு அமைகிறது. அதை தான் க்ரூமிங் என்கிறோம். நடை, உடை, பாவனை என அனைத்தையும் உள்ளடக்கிய இது உங்களை தொழிலிலும் மிளிர வைக்கக்கூடியது. உங்களை நீங்களே அழகாக்கிக்கொள்ள செல்ப் க்ரூமிங் என்ற பயிற்சி உதவியாக இருக்கும் .
சுயமாக சீர்படுத்தும் இந்த பயிற்சியை மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம். எதிர்காலத்தில் அனைத்து வகையிலும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும். அதுகுறித்து பார்ப்போம்
சுத்தம் என்பது
தினமும் குளிப்பதுடன் நன்றாக அயர்ன் செய்த உடையை உடுத்தி அழகுசாதனப்பொருட்களை அணிந்தால் போதுமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சிலர் கை, கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. உடல் அவயங்கள் பற்றி பலர் கவலைப்படுவதில்லை.
அடிக்கடி மெனிக்யூர் செய்து விரல் நகங்களை சுத்தமாக வைத்து கொள்ளலாம். கண்ணை உறுத்தும் நிறங்களை நகங்களின் மீது பூசுவதற்கு பதிலாக மென்மையான நிறங்களை பயன்படுத்துவது நல்லது.
வாசனை திரவியம்பூசுதல்..
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சிலர் அடர் வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். அதை தவிர்ப்பது நல்லது. ஆண்களை விட பெண்கள் பயன்படுத்தும் சில மென்மையான வாசனை திரவியங்கள்பலரையும் ஈர்க்கும்.
மேக்கப் வேண்டாமே
முகத்தை அழகாக காண்பிக்க அதிகமாக மேக்கப் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மிகக்குறைவான மேக்கப்புடனோ அல்லது மேக்கப்பே இல்லாமல் இருந்தாலே போதும். நிம்மதியான உறக்கம் மற்றும் கவலையை புறந்தள்ளி மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் பயிற்சியை செய்தாலே முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும். அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு அடுத்தவரை முகம் சுழிக்க வைக்காமல் இருப்பதும் நலமே. எளிமை பல இடங்களில் பாராட்டை பெற்றுத்தரும்.
உடை, காலணி, நகை தேர்வில் கவனம்...
இடத்துக்கு ஏற்ப நகை, உடைகளை தேர்வு செய்ய வேண்டும். பார்ப்போர் கண்களை உறுத்தும் விதமாக அதிக நகையும், கண்களை கூசும் ஆடைகளையும் அணிந்தால் நம் மீதான மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அதே போல் உடைக்கேற்ப காலணிகளை தேர்வு செய்வது முக்கியம்.
உடற்பயிற்சி உதவும்.
உடற்பயிற்சி செய்வது உடலை அழகாகவும், கட்டுகோப்புடனும் வைத்து கொள்ள உதவும். எளிமையான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி தியானம் ஆகியவற்றை தினமும் மேற்கொண்டால் மனம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்
சருமப்பராமரிப்பு
சருமத்தை ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம். வெயில் காலத்தில் சருமத்தை பாதிக்காத கிரீம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் கலந்த அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
வீண்பேச்சு தவிர்ப்போம்
என்ன பேசுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். நாம் சொல்வதை சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும். தேவையில்லாமல் நீட்டி முழக்கினால் மற்றவர்கள் முகம் சுளிக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை.
இவை அனைத்தையும் முறையாக பின்பற்றினால் எந்த இடத்திலும் நீங்கள் நட்சத்திரமே...

கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 2 கப்,
எண்ணெய் - சிறிது.
அரைக்க...
கொத்தமல்லி - 3/4 கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1/2
இஞ்ச் துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி, தேவையான அளவு இட்லி மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சூடாக சாம்பாருடன் பரிமாறவும்.