search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொத்தமல்லி பருப்பு கூட்டு
    X
    கொத்தமல்லி பருப்பு கூட்டு

    கொத்தமல்லி பருப்பு கூட்டு

    தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி - 1 கப்,
    வெங்காயம் - 2,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
    வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுந்து - 1 டீஸ்பூன்.

    அரைக்க...

    தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2.

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னா வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    வதங்கிய பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.

    அரைக்க கொடுத்த பொருட்களை நன்கு அரைத்து அதை கொத்தமல்லி கலவையில் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.

    நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

    சூடான சாதத்துடன் பறிமாறவும்.
    Next Story
    ×