search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முகக்கவச ‘அலர்ஜி’
    X
    முகக்கவச ‘அலர்ஜி’

    முகக்கவச ‘அலர்ஜி’... தடுக்கும் வழிமுறைகள்

    முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
    கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும். சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.

    சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும். முகக்கவசம்
    அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும். முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.

    வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
    சரும
    எரிச்சலையும் போக்கும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல. வெளிப்புற வெப்பநிலையுடன் கலந்திருக்கும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் உதவும். புற ஊதாக்கதிர்கள் படிவதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாகும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்திவிடும். ஆதலால் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.

    ‘எலாஸ்டிக்’ பிணைக்கப்பட்டிருக்கும் முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. அதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாக அமையும்.
    முகக்கவசம்
    அணியும்போது மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மறைக்க வேண்டும். அதேவேளையில் சுவாசிப்பதற்கு ஏதுவாக முகக்கவசம் சற்று தளர்வாகவும் இருக்க வேண்டும். அதிக தளர்வும் கூடாது. எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம் சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும். சருமத்தின் மென்மையை பாதிக்கும் வகையில் முகக்கவசம் அமைந்துவிடக்கூடாது.

    பெண்கள் வெளியே செல்லும்போது ஒப்பனை செய்து கொள்வதற்கு மறக்கமாட்டார்கள். முகக்கவசம் அணியும்போது அதனை தவிர்ப்பதுதான் நல்லது. ஏற்கனவே முகத்தை மூடியிருக்கும்பட்சத்தில் ஒப்பனை பொருட்களும் ஆக்கிரமித்தால் சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்காது. அதன் காரணமாக சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிவிடும்.
    Next Story
    ×