search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பின்னல் மணிமாலை
    X
    பின்னல் மணிமாலை

    பெண்கள் விரும்பும் ஃபேஷன் ஜுவல்லரி.. பின்னல் மணிமாலை

    தங்க நகைகளை காட்டிலும் உடையின் நிறத்துக்கு ஏற்றபடி பொருத்தமாக அணிவதற்கு ஃபேஷன் ஜுவல்லரிதான் இன்றைக்கு அலுவலகம் செல்லும் பெண்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளது.
    டீன் ஏஜ் பெண்கள் மட்டும் தான் ஃபேஷன் ஜுவல்லரியை அணிவார்கள் என்கிற காலம் இப்போது மலையேறி போய்விட்டது. தங்க நகைகளை காட்டிலும் உடையின் நிறத்துக்கு ஏற்றபடி பொருத்தமாக அணிவதற்கு ஃபேஷன் ஜுவல்லரிதான் இன்றைக்கு அலுவலகம் செல்லும் பெண்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளது. மாடர்ன் லுக்கும் பாரம்பரிய லுக்கும் சேர்ந்து கலவையாக காட்சியளிக்கும் மணிமாலைகளை நீங்களே செய்து அசத்தலாம். சற்றே விலைஉயர்ந்த மணிகளை பயன்படுத்தினால் நீண்ட காலத்துக்கு இவற்றை பாதுகாக்கலாம்.

    இப்போது எளிமையான டிசைன் மணிமாலை ஒன்றை எப்படி செய்யலாம் எனப்பார்ப்போம். இதற்கு பயன்படுத்தும் பொருட்கள் சாதாரணமாக கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். பிளைன் செயினை, கவரிங் நகைகள் விற்கும் கடைகளில் அல்லது ஃபேன்ஸி ஸ்டோர்களில் வாங்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறிய சைஸிலான மணிகள், இணைப்பான், கம்பிகள், பிளைன் செயின், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர்.

    பிளைன் செயினின் கொக்கி மாட்டும் பகுதியை விட்டுவிட்டு தொங்கும் பகுதியை பாதியாக வெட்டுங்கள்.

    கம்பி இணைப்பானின் கழுத்துக்கு மாலை எவ்வளவு நீளம் தேவையோ அவ்வளவு நீளத்துக்கு மூன்று கம்பிகளை வெட்டி அதில் இப்படி மணிகளை கோர்த்து முடிச்சிடுங்கள்.

    இரண்டாக வெட்டி வைத்திருக்கும் பிளைன் செயின் ஒரு முனையில் கோர்த்து வைத்திருக்கும் மணிமாலைகளின் ஒவ்வொரு முனையையும் பீட் ஸ்பேசர் வைத்து இணையுங்கள். அதாவது பிளைன் செயின் வளையத்துக்குள் சிறிய அளவிலான கோல்டன் கலர் பீட் ஸ்பேசர் கோர்த்த மணிமாலை கம்பியை விடுங்கள். வளையத்துக்குள் விட்ட கம்பியை மீண்டும் பீட் ஸ்பேசருக்குள் விட்டால் ஒரு முடிச்சு உருவாகும். இந்த முடிச்சை பிளையர் கொண்டு அழுத்திவிட்டால் பிளைன் செயினில் மணிமாலை அவிழ்ந்து விடாமல் செட் ஆகிவிடும்.

    அடுத்ததாக இரண்டு மணி கோர்த்த கம்பியையும் இணைத்துவிட்டு மறுமுனையில் மணிகள் அவிழ்ந்துவிடாதபடி முனையில் முடிச்சிட்ட பின்னல் போல பின்னுங்கள்.

    பின்னி முடிந்ததும் செயினின் மற்றொரு முனையில் மூன்று மணிமாலைகளையும் பீட் ஸ்பேசரால் செயினின் மற்றொரு முனையில் இணையுங்கள். இதோ அணியத் தயாராகிவிட்டது பின்னல் மணிமாலை.
    Next Story
    ×