என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
    சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இது இருக்கிறது. இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். கோவிலின் தல விருட்சமாக கொடிமுல்லை இருக்கிறது. கோவிலின் தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, இந்திர தீர்த்தம், பொற்றாமரை என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறது. புராணகாலத்தில் இவ்வூர் கருப்பறியலூர், கர்மநாசபுரம் என அறியப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற சிவதல தலமாக இக்கோவில் இருக்கிறது.

    தல புராணங்களின் படி இலங்கை வேந்தன் இராவணனின் மைந்தன் மேகநாதன் தேவலோக வேந்தனான இந்திரனை வெற்றி கொண்டு மேகநாதன் என்கிற பெயர் பெற்றான். ஒரு முறை படிக விமான பறந்து கொண்டு கொண்டிருந்த போது அந்த விமானம் தடை ஏற்பட்டு யே நின்று விட்டது. இதை கண்ட இந்திரஜித் விமானத்திற்கு கீழே பார்த்தபோது இத்தல சிவபெருமானின் கோபுரத்தின் மீது பறந்ததால் தான் இத்தடை ஏற்பட்டது என எண்ணி வருந்தினான். பிறகு தலத்தில் இறங்கி, இக்கோவிலின் குளத்தில் நீராடி தனது தவறை உணர்ந்து சிவபெருமானை வழிபட அந்த தடை நீங்கியது.

    பிறகு அவனின் விமானம் தடையில்லாமல் பறக்க ஆரம்பித்தது. இக்கோவிலின் சிவலிங்கத்தின் அழகில் மயங்கிய மேகநாதன், இந்த சிவலிங்கத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அந்த முயற்சியில் தோல்வியுற்று மயங்கி விழுந்தான். இதைக் கேள்விப்பட்ட இலங்கை வேந்தன் இராவணன் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானிடம் தன் மகனின் தவறுக்கு வருந்தி அவனை மன்னிக்குமாறு வேண்டினான். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் இந்திரஜித்தின் குற்றத்தை பொறுத்து அருள் புரிந்ததால் “குற்றம் பொறுத்த நாதர்” என்கிற பெயர் இத்தல சிவ பெருமானுக்கு ஏற்பட்டது.

    சித்திராங்கதன் எனும் மன்னன் தனது மனைவி சுசீலை உடன் இத்தலத்திற்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டி வழிபட்டான். அதன்படியே அவனுக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. இத்தலத்தில் சூரிய பகவான் வழிபட்டதால் இத்தலம் தலைஞாயிறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் செய்யப்படும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என பிரம்மதேவன் வசிஷ்டருக்கு கூறினார். இதனால் வசிஷ்டர் இங்கே சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு மெய்ஞ்ஞானம் பெற்றார். 72 ரிஷிகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றது. இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது அவர்கள் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்றும், மீண்டும் பிறவாமை பேறு கிடைத்து விடுவதாக ஐதீகம் அதனால் தான் இத்தலம் கருப்பறியலூர் என அழைக்கப்படுகிறது. அனுமனின் தோஷத்தை நீங்கிய தலம் இதுவாகும்.

    இக்கோவிலின் இறைவன் சிவபெருமானின் லிங்கம் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். சீர்காழி சட்டை நாதர் கோவில் அமைப்பை போலவே இக்கோவிலும் மலைக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இத்தலத்தை மேலைகாழி என அழைக்கின்றனர். கோவிலின் முதல் தளத்தில் உமாமகேஸ்வரர், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் விட்டிருக்கிறார்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் நடை திறப்பு

    காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

    கோவில் முகவரி

    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்
    தலைஞாயிறு
    நாகப்பட்டினம் மாவட்டம் - 614712
    இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
    பார்வதி தேவி தட்சனின் மகளாக தாட்சாயிணி என்ற பெயரில் பிறந்தபொழுது, சிவபெருமானை மணம் புரிந்து கொண்டாள். அது தட்சனுக்குப் பிடிக்கவில்லை.
    இதனால் அவன் நடத்திய யாகத்திற்கு அனைத்து தெய்வங்களையும், தேவர்களையும், முனிவர்களையும் அழைத்திருந்தான். ஆனால் சிவபெருமானையும், தனது மகளையும் அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிய சாபம் கொடுத்ததோடு, தன் உயிரையும் மாய்த்தாள். அவள் உடல் பரத தேசத்தின் பல பகுதிகளில் விழுந்ததாகவும், ஒவ்வொரு அங்கமும் விழுந்த இடத்தில் ஒவ்வொரு சக்தி பீடம் உருவானதாகவும் நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    * காமாட்சி - காஞ்சிபுரம் (காமகோடி பீடம்)

    * மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்)

    * பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் (சேது பீடம்)

    * அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (ஞானபீடம்)

    * அபிதகுஜாம்பாள்- திருவண்ணாமலை (அருணை பீடம்)

    * கமலாம்பாள் - திருவாரூர் (கமலை பீடம்)

    * பகவதி - கன்னியாகுமரி (குமரி பீடம்)

    * மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்திபீடம்)

    * அபிராமி - திருக்கடையூர் (கால பீடம்)

    * மகாகாளி - திருவாலங்காடு (காளி பீடம்)

    * பராசக்தி - திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்)

    * லலிதா - ஈங்கோய் மலை, குளித்தலை (சாயா பீடம்)

    * விமலை, உலகநாயகி - பாபநாசம் (விமலை பீடம்)

    * காந்திமதி - திருநெல்வேலி (காந்தி பீடம்)

    * பிரம்மவித்யா - திருவெண்காடு (பிரணவ பீடம்)

    * தர்மசம்வர்த்தினி - திருவையாறு (தர்ம பீடம்)

    * திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் (இஷீபீடம்)

    * மகிஷமர்த்தினி - தேவிபட்டினம் (வீரசக்தி பீடம்)
    சிலரது கையில் பணம் தங்கவே தங்காது. சிலருக்கு பணம் வரவே வராது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடைபெற்று, செல்வ செழிப்போடு வாழ, பணம் புரள, இந்த அற்புதமான மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
    ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்
    ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
    நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
    சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
    பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
    ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.

    இந்த அற்புதமான மந்திரத்தை கணபதி மந்திரம் என்று கூறுவார்கள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கி, கடன்கள் எல்லாம் நீங்கி, செழிப்பாய் இருப்பீர்.
    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 22-ம் தேதி நித்திய கல்யாண பெருமாள் தேவியருடன் அலங்கார திருத்தேரில் எழுந்தருளி, ராஜ அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா சென்று வந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விழா நடப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
    அனுமனின் திறமையையும், அவரது ராம பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி, அனுமனுக்கு சிறப்பான ஒளி சிந்தும் முத்துமாலை ஒன்றை பரிசாக கொடுத்தார்.
    வனவாசமாக 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து விட்டு, அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றன. 14 ஆண்டுகளாக வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாவிட்டாலும் ராமன் இல்லாததால் எதுவுமே இல்லாதது போல் வாழ்ந்து வந்த மக்களின் முகத்தில் அன்றுதான் உண்மையான ஆனந்தம் தென்பட்டது.

    புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அனைத்தும் சேகரித்து வரப்பட்டன; மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டன; வேதங்கள் முழங்கின; பல இன்னிசை வாத்தியங்கள் இசை மழை பொழிந்தன. சீதையும் ராமரும் சேர்ந்து அரியாசனத்தில் சீதாராமராக அமர்ந்தனர். அவர்களை பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த முனிவர்களும், நாட்டு மக்களும், பெரியவர்களும் பூமாரி பொழிந்தனர்.

    அனுமனை ஆரத்தழுவி

    ராமரின் பாதத்தில் ஆஞ்சநேயர் அமர்ந்திருக்க, அங்கதன் உடைவாள் ஏந்தினான். பரதன் தனது அண்ணனுக்கு வெண்கொற்றக் குடைபிடித்தான். லட்சுமணனும், சத்துருக்கனனும் வெண் சாமரம் வீசினர். பெரியவர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, ரகு வம்ச குருவான வசிஷ்ட முனிவர் அதை வாங்கி ராமபிரானுக்கு முடிசூட்டினார். பட்டாபிஷேகம் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நடந்து முடிந்தது.

    அப்போது அனுமனை பார்த்து, ‘வாயுவின் புத்திரனே, இந்த ராமனின் உன்னத பக்தனே மாருதி! உதவி செய்வதில் உனக்கு ஒப்பாக யாரும் இருக்க முடியாது. எனக்கு நீ செய்த பேருதவியானது அளவு கடந்தது. அதற்கு இணையாக நான் உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் அன்பைத் தவிர விலை உயர்ந்தது எதை நான் உனக்கு தரமுடியும்’ என்று கூறி அனுமனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    முத்துமாலை

    அனுமனின் திறமையையும், அவரது ராம பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி, அனுமனுக்கு சிறப்பான ஒளி சிந்தும் முத்துமாலை ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டார் அனுமன். பின்னர் அனைவரும் பார்க்கும் விதமாக அந்த முத்துமாலையை பிய்த்து அதில் ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்க தொடங்கினார்.

    அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சீதாதேவியே ஒரு கணம் அனுமனின் செய்கையைக் கண்டு திகைத்துப் போனார். ஆஞ்சநேயருக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி அனைவரும் பேசத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது ராமருக்கு தெரியாதா என்ன?. அவருக்கு மட்டும் தெரிந்தது அனைவருக்கும் தெரியவேண்டாமா? அதனால் அனுமனை ஏறிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று கேள்வி எழுப்பினார் ராமர்.

    உங்கள் உருவம் இல்லை

    அதற்கு அனுமன், ‘பிரபு! உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள சீதாதேவி கொடுத்த முத்துமாலையில் உங்கள் இருவரின் உருவமும் இருக்கும் என்று எண்ணித்தான் அந்த முத்துக்களை உடைத்து பார்த்தேன். ஆனால் ஒன்றில் கூட உங்களின் திருவுருவம் இல்லை. அது இல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை’ என்று கூறினார்.

    இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள், ‘இவன் முத்துமாலையை மாசுபடுத்தியதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக இப்படி கூறுகிறான். நன்றாக நடிக்கிறான்’ என்று ஆளுக்கொரு விதமாக பேசத் தொடங்கினர். இதனை கேட்டதும் ராமர், ‘அப்படியானால் நீ எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறாய். உனக்குள் நானிருப்பதை அனைவருக்கும் காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

    ஆஞ்சநேயர் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் கருதினர். ஆனால் ஆஞ்சநேயர், அனைவரும் திகைத்துப் போகும் செயலை அங்கு செய்தார். தன் நெஞ்சை பிளந்து காட்டினார். அதில் அந்த ராமர், தனது உள்ளம் கவர்ந்த சீதாதேவியுடன், சீதாராமராக அமர்ந்திருந்தார். ராமரின் மீது அனுமன் வைத்திருந்த அன்பை, அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
    ராம நாமம் சொல்வதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அந்த வகையில் ராம நாமம் சொல்வதால் கிடைத்த பலன்களை கூறும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.
    மன்னன் ஒருவர் தன்னுடைய மந்திரியுடன், வேட்டையாடுவதற்காக அடர்த்தியான காட்டுப் பகுதிக்குச் சென்றார். அந்தக் காடு அவர்களுக்கு புதியது என்பதால் இருவரும் வழி தவறி விட்டார்கள். அடர்ந்த காடு என்பதால் எப்படி வெளியேறுவது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதையைத் தேடி அலைந்து அலைந்தே, இவருக்கும் பசி மயக்கம் ஏற்பட்டு விட்டது. வழியை அறிய முடியாத இயலாமையும், பசியால் ஏற்பட்ட மயக்கமும், மன்னனை கோபத்திற்கு உள்ளாக்கியது.

    ஆனால் மந்திரியோ அடர்ந்த வனத்தின் அழகில் தன்னுடைய மனதை பறிகொடுத்து, இயற்கையை ரசித்தபடியே மன்னனோடு நடைபோட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இறைவனை தியானிக்க வேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. அதன்படியே அங்கு தென்பட்ட ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். தியானத்தின் ஊடே, ‘ராம ராம’ என்று ராம நாமத்தையும் ஜெபிக்கத் தொடங்கிவிட்டார்.

    இதைக் கண்ட மன்னன், “மந்திரியாரே.. பசியால் உயிர்போகிறது. ஏதாவது உணவை சேகரித்து வரலாம்தானே. சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும். பசியாறவும் ஏதாவது கிடைக்கும்” என்று சொன்னார்.

    அதற்கு மந்திரியோ, “மன்னா.. நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் சிறிது தூரம் சென்றால், ஏதாவது கிடைக்கும்தான். என்னுடைய வயிறும் உணவைத்தான் நாடுகிறது. ஆனால் என்னுடைய மனமோ, அமைதியையும், ராம நாமத்தையும், இறைவனையும் நாடுகிறது. நான் என்ன செய்ய முடியும். ஆகையால் நான் இப்போது உணவைத் தேடிச் செல்லும் நிலையில் இல்லை” என்றார்.

    சினம் கொண்ட மன்னன், தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட, அங்கு விரைந்து சென்றார். அந்த வீட்டினரிடம் தான் யார் என்பதைச் சொல்லி, ‘பசியாற ஏதாவது கிடைக்குமா?’ என்று கேட்டார். அவர் மன்னன் என்பதை அறிந்ததும், அவரை வரவேற்று உபசரித்த அந்த வீட்டினர், அவருக்கு தங்கள் வீட்டில் இருக்கும் உணவை அளித்தனர். அங்கிருந்து புறப்படும் முன்பாக, மனம் கேளாமல் தன்னுடைய மந்திரிக்கும் சிறிது உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பினார், மன்னன்.

    மந்திரி இருக்கும் இடத்தை அடைந்த மன்னன், மரத்தடியில் அமர்ந்து ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டித்த மந்திரியை நெருங்கி, “மந்திரியாரே.. இந்தாருங்கள் உணவு. இப்போதாவது தெரிந்ததா.. நான் எடுத்த சரியான முடிவால்தான் இன்று நமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் ராம நாமத்தால் எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறியபடி, மந்திரியை ஏளனத்தோடு பார்த்தார்.

    உணவைப் பெற்றுக்கொண்ட மந்திரி, “மன்னா.. உணவிற்காக மாபெரும் சக்கரவர்த்தியான தாங்கள், இன்று ஒரு சாதாரண பிரஜையிடம் யாசகம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் என்னைப் பாருங்கள்... நான் உச்சரித்த ராம நாமத்தின் வலிமையால், ஒரு மாபெரும் சக்கரவர்த்தியான உங்களின் கையால் எனக்கு உணவு கிடைக்கும்படி இறைவன் செய்திருக்கிறான்” என்றார்.

    அதைக் கேட்டு வாயடைத்துப் போனார் மன்னன்.
    ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    கிரகப்பெயர்ச்சிகளில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிகளுக்குப் பிறகு, அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ராகு-கேது பெயர்ச்சி. இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து, அந்த பலாபலன்களுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கும். ராகு-கேது இரண்டும் ‘நிழல் கிரகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கிச் செல்லும் வழக்கம் கொண்டவை. இந்த ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி 21-3-2022 தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    * வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால், அவர்களின் அடுத்த தலைமுறைக்கு ராகு-கேது தோஷம் ஏற்படும். இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுவதை தடுக்கும்.

    * ஆலயத்திற்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வாழ்பவர்களின் சந்ததியினருக்கும் இந்த தோஷம் ஏற்படலாம்.

    * நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளுக்குள், ஏதாவது ஒரு பகையின் காரணமாக பிரிவினையை ஏற்படுத்தினால், அந்த நபரின் மூன்றாம் தலைமுறையினருக்கு ராகு-கேது தோஷம் உண்டாகும்.

    * சிறுவர்- சிறுமிகளை, துன்புறுத்தினாலோ, கொடுமைப்படுத்தினாலோ, அந்தப் பிள்ளைகளின் கண்ணீர், துன்புறுத்திய நபரின் அடுத்தடுத்த தலைமுறைகளில் ராகு-கேது தோஷமாக உருவெடுக்கும்.

    * ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களைப் பிரித்து, குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் சாபத்தை வாங்கினால், அந்த நபரின் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து, இல்வாழ்க்கையை நிம்மதி அற்றதாக மாற்றிவிடுவார்கள்.

    * சகோதரர்களை மதிக்காமல், அவர்களின் உண்மை பாசத்தை உதறித் தள்ளுவதோடு, அவர்களை ஏமாற்றினால், அந்த நபரின் தலைமுறை பிள்ளைகளின் ஜாதகத்தில் சகோதர வீடான 3-ம் இடத்தில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமான 9-ம் இடத்தில் கேதுவும் இருந்து தொல்லை தருவார்கள்.

    * நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தல் போன்ற விஷயங்களை முன் ஜென்மத்தில் செய்திருந்தால், அவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது, பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்து தண்டனை வழங்குவார்கள்.

    * வேலை செய்தவர்களுக்கு அதற்கான சரியான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றினாலோ, அல்லது மற்றவர்களுக்கான வேலையை பறித்துக் கொண்டாலோ, அந்த பாவம் சம்பந்தப்பட்ட நபரின் தலைமுறை பிள்ளைகளின் ஜீவன ஸ்தானத்தில் ராகு-கேதுவாக அமர்ந்து, தொழிலில் முன்னேற்றம் ஏற்படவிடாமல் தடுக்கும்.

    இதுபோன்று இன்னும் பல வழிகளில் ஒருவருக்கு ராகு-கேது தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷத்தால் அவதிப்படுபவர்கள், ராகு காலத்தில் துர்க்கை தேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தினமும் ராகுவுக்குரிய சுலோகத்தை பாராயணம் செய்து வருவது நன்மையளிக்கும்.

    நாகத் துவாஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹே

    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    அச்வ த்வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தந்நோ கேது ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
    குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். இதற்காக நகரத்தார் மக்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று காலை இங்கு வந்து சேர்ந்தனர்.

    குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் மேற்பார்வையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபட்டது.

    வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி செயல் அலுவலர் மருதுபாண்டியன் உத்தரவின்படி குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    இன்றைய சூழலில் நினைப்பவை அனைத்தையும் பேசி விட வேண்டும், நினைப்பவை அனைத்தையும் அடைந்து விட வேண்டும் என்ற சூழலில் பல தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறி போய் நிற்கிறது.
    ‘தூய்மையானவற்றை தூய்மையாய் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர். தூய்மையானவற்றை கற்றுக்கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்’ (சீ.ஞா.6:10)

    ‘மன அடக்கம்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் பலரும் அது சன்னியாசிகளுக்கும், ஞானிகளுக்கும் சம்மந்தம் உடையது, தங்களுக்கு சம்பந்தம் இல்லாதது என்று நினைக்கிறார்கள். சன்னியாசிகள் துறவு மேற்கொள்வதால் மன அடக்கத்தின் அளவு மிக மிக அதிகம் தேவைப்படும் அவ்வளவுதான். ஆனால் மன அடக்கம் ஏதோ தத்துவம் பேசுகிறவர்களை சார்ந்தது என ஒதுக்கப்பட்ட விஷயமல்ல. அன்றாட வாழ்வுக்கு மன அடக்கம் மிக அவசியம்.

    இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனப்பக்குவத்தை சோதிக்கும் சவால்களும், சோதனைகளும் நிறையவே உண்டு. பல மனிதர்களோடு பழகுவதும், தொடர்பு கொள்வதும் மனிதர்களுக்கு தவிர்க்க முடியாதவை. மேலும் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கஷ்டங்களும், பிரச்சினைகளும் வருகிறது. மன அடக்கம் இருந்தால் சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். பொறுமையும், சகிப்புத் தன்மையும் மன அடக்கத்தால் தான் கிடைக்கும். மன அடக்கம் உள்ளவர்கள்தான் வாய் அடக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். யோசிக்காமல் பேசுவதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு உறவு பிளவு படுகிறது. சமுதாயத்தில் தவறுகள் நடப்பதற்கு தனி மனித மன அடக்கம் பற்றிய விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஒரு காரணம் ஆகும். மனிதன் தன் மனம் போன போக்கில் செயல்படுவதால் பல நேரங்களில் குழப்பத்திற்கு உள்ளாகிறான். மன அடக்கம் இல்லாதவர்கள் நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே நமது வெற்றிக்கு தேவை மன அடக்கம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

    இன்றைய சூழலில் நினைப்பவை அனைத்தையும் பேசி விட வேண்டும், நினைப்பவை அனைத்தையும் அடைந்து விட வேண்டும் என்ற சூழலில் பல தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறி போய் நிற்கிறது. எனவே நாமும் அடக்க உணர்வோடு பல நல்லதை செய்ய இந்த நன்னாளில் கற்றுக் கொள்வோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஆயகால பூஜை செய்து தேர் அலங்கரிக்கும் பணி தொடங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 12-ந்தேதி தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்று சிறப்புடையதாக உள்ளது. இக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று  பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை ஏற்பட்டதால் இந்த வருடம் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

    எனவே வழக்கம்போல் தேருக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிக்காக ஆயகால பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வருகிற 5-ந் தேதி காலை கொடியேற்ற நிகழ்ச்சியும், 6-ந்தேதி சூரிய, சந்திர வாசன காட்சி, 7-ந் தேதி அதிகார நந்தி, கிளி, பூத அன்ன வாகன காட்சிகள், 8-ந் தேதி கைலாசவாகன, புஸ்பவிமான காட்சிகள் நடைபெற உள்ளது. 9-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் ஆகியவை நடக்க உள்ளது. 10-ந் தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது. 11-ந் தேதி காலை 5.30 மணியளவில் பூர நட்சத்திரத்தில சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 12-ந் தேதி காலை 9 மணியளவில் தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு தேர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்படும். பின்னர் 13-ந் தேதி தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட உள்ளது. 14-ந் தேதி காலை அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 15-ந் தேதி தெப்ப தேரோட்டம் நடக்கிறது. 17-ந் தேதி நடராசப்பெருமான் தரிசனம் நடக்க உள்ளது. 18-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் நிறைவடைகிறது.
    விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.
    யுதிஷ்டிர மஹாராஜா, “ஓ பகவான் கிருஷ்ணரே, ஏகாதசியை எனக்கு விவரிக்கவும்” என்றார்.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார்.

    “இந்த புனித ஏகாதசியின் பண்டைய வரலாற்றை நான் கூறுவேன், இது ஒருமுறை வசிஷ்ட முனி பகவான் ராமச்சந்திராவின் கொள்ளுத்தாத்தாவான திலீப மன்னனிடம் கூறிய வரலாறு.

    திலீப மன்னன் வசிஷ்ட முனிவரிடம், ‘சைத்ரா மாதத்தின் ஒளிப் பகுதியில் வரும் ஏகாதசியைப் பற்றி நான் கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து அதை எனக்கு விவரியுங்கள்.

    அதற்கு வசிஷ்ட முனி,

    “அரசே, சைத்ராவின் ஒளி பதினைந்து நாட்களில் வரும் ஏகாதசிக்கு கமதா ஏகாதசி என்று பெயர். அது எல்லா பாவங்களையும் அழிக்கிறது. இது மிகவும் சுத்திகரிப்பு மற்றும் அதை உண்மையாக கடைபிடிப்பவருக்கு மிக உயர்ந்த தகுதியை அளிக்கிறது. இப்போது ஒரு பழங்கால வரலாற்றைக் கேளுங்கள், அது மிகவும் புண்ணியமானது, அது ஒருவரின் அனைத்து பாவங்களையும் கேட்பதன் மூலம் நீக்குகிறது.

    “ரொம்ப காலத்திற்கு முன்பு, இரத்தினபுரி என்ற பெயருடைய ஒரு ராஜ்யம் இருந்தது, அதில் தங்கம் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் கூர்மையான பாம்புகள் போதையை அனுபவிக்கும். கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்சரஸ்கள் எனப் பல குடிமக்களைக் கொண்ட இந்த அழகிய ராஜ்ஜியத்தின் ஆட்சியாளன் மன்னன் புண்டரிகா.

    கந்தர்வர்களில் லலிதா மற்றும் அவரது மனைவி லலிதா, ஒரு விதிவிலக்கான நடனக் கலைஞர். லலிதா தன் கணவனை மிகவும் நேசித்தாள், அதேபோல அவனும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

    ஒருமுறை மன்னன் புண்டரீக அரசவையில், பல கந்தர்வர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர், லலிதா அவரது மனைவி இல்லாமல் தனியாகப் பாடிக்கொண்டிருந்தார். அவர் பாடும்போது அவளைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை, இந்த கவனச்சிதறல் காரணமாக, அவர் பாடலின் மெல்லிசையை இழந்தார். பொறாமை கொண்ட பாம்பு ஒன்று, லலிதா தனது இறையாண்மைக்கு பதிலாக தனது மனைவியை நினைத்து மூழ்கிவிட்டதாக ராஜாவிடம் புகார் அளித்தது. இதைக் கேட்ட மன்னன் ஆத்திரமடைந்து, ‘நீ உன் அரசவைக் கடமைகளைச் செய்தபோது, ​​உன் அரசனைப் பயபக்தியுடன் நினைத்துப் பார்க்காமல், ஒரு பெண்ணை ஆசையுடன் நினைத்துக் கொண்டிருந்ததால், உன்னை ஒரேயடியாக நரமாமிசம் உண்பவளாக மாறச் சபிக்கிறேன்!’ என்று கத்தினான்.

    லலிதா உடனடியாக ஒரு பயங்கரமான நரமாமிசத்தை உண்பவளாகவும், ஒரு பெரிய மனிதனை உண்ணும் அரக்கனாகவும் மாறினாள், அதன் தோற்றம் அனைவரையும் பயமுறுத்தியது. இதனால் அன்பான கந்தர்வப் பாடகியான ஏழை லலிதா, மன்னன் புண்டரிகாவுக்கு எதிரான குற்றத்தின் எதிர்வினையை அனுபவிக்க வேண்டியிருந்தது. தன் கணவன் கொடூரமான நரமாமிசமாக அவதிப்படுவதைக் கண்டு, லலிதா துக்கத்தில் மூழ்கினாள். கந்தர்வரின் மனைவியாக வாழ்க்கையை அனுபவிக்காமல், கொடூரமான கணவனுடன் அடர்ந்த காட்டில் எங்கும் அலைய வேண்டியிருந்தது.

    இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, லலிதா ஒரு நாள் சிருங்கி முனிவரின் மீது வந்தாள். புகழ்பெற்ற விந்தியாசல மலையின் உச்சியில் அமர்ந்திருந்தார். அவளைக் கவனித்த முனிவர், ‘நீ யாருடைய மகள், ஏன் இங்கு வந்தாய்?’ என்று கேட்டார்.

    அதற்கு அவள், ‘நான் மகா கந்தர்வ விரதன்வனின் மகள், என் பெயர் லலிதா. புண்டரீக மன்னன் மனிதனை உண்ணும் அரக்கனாக மாறச் சபித்த என் அன்பான கணவனுடன் நான் காடுகளிலும் சமவெளிகளிலும் சுற்றித் திரிகிறேன். இந்த அசுர ரூபத்தில் இருந்து விடுபட என் கணவரின் சார்பாக நான் எப்படி பிராயச்சித்தம் செய்ய முடியும் என்று சொல்லுங்கள்?’

    அதற்கு முனிவர், ‘காமதா என்ற பெயரில் ஒரு ஏகாதசி உள்ளது, அது சைத்ரா மாதத்தின் பதினைந்து நாட்களில் வருகிறது. இந்த ஏகாதசி விரதத்தை அதன் விதிகள் மற்றும் விதிகளின்படி கடைப்பிடித்து, நீங்கள் செய்யும் புண்ணியத்தை உங்கள் கணவருக்கு வழங்கினால், அவர் உடனடியாக சாபத்திலிருந்து விடுபடுவார்.

    சிருங்கி முனிவரின் அறிவுறுத்தலின்படி லலிதா காமத ஏகாதசி விரதத்தை உண்மையாகக் கடைப்பிடித்தார், மேலும் துவாதசி அன்று அவர் மற்றும் வாசுதேவரின் கடவுளின் முன் தோன்றி, ‘காமத ஏகாதசி விரதத்தை நான் உண்மையாகக் கடைப்பிடித்தேன். இவ்வாறு நான் பெற்ற புண்ணியம் என் கணவரை அவரது துன்பத்திலிருந்து விடுவிக்கட்டும்.’

    லலிதா பேசி முடித்ததும், அவளது கணவன் அரசனின் சாபத்திலிருந்து உடனடியாக விடுபட்டான். அவர் உடனடியாக கந்தர்வ லலிதாவாக தனது அசல் வடிவத்தை மீண்டும் பெற்றார். இப்போது, ​​அவரது மனைவி லலிதாவுடன், அவர் முன்பை விட அதிக செழுமையை அனுபவிக்க முடிந்தது. இவை அனைத்தும் காமத ஏகாதசியின் சக்தி மற்றும் மகிமையால் நிறைவேற்றப்பட்டது.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்தார்.

    ‘ஓ யுதிஷ்டிரா, இந்த அற்புதமான வர்ணனையைக் கேட்கும் எவரும் நிச்சயமாக இந்த ஏகாதசியை தனது இயன்றவரை அனுசரிக்க வேண்டும். எனவே அனைத்து மனிதகுலத்தின் நன்மைக்காக அதன் பெருமைகளை உங்களுக்கு விவரித்தேன். காமத ஏகாதசியை விட சிறந்த ஏகாதசி இல்லை.

    அது சாபங்களை நீக்கி, நனவைத் தூய்மைப்படுத்தும். மூன்று உலகங்களிலும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களில், சிறந்த நாள் இல்லை.

    விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
    ஆடல் வல்லான் நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்கள் ஆறு அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.

    சித்திரை திருவோணம் நாளான நேற்று திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு இந்த ஆண்டின் முதல் மகாஅபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

    தொடர்ந்து சிறப்புமலர் அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. தீபாராதனையின்போது அப்பர் பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர் மண்டபத்தில் எழுந்தருளி தரிசன காட்சி நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், டாக்டர் ராம்பிரசாத் கவுன்சிலர்கள் ராமலிங்கம், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனிவாசன், சித்திரை திருவோண உபயதாரர் ஜெயஸ்ரீதர் மற்றும் சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள் ஆலய அர்ச்சகர்கள் சிறப்பாக செய்தனர்.
    ×