என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இருப்பு பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று செடல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது.
    கம்மாபுரம் அருகே இருப்பு பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று செடல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், உடம்பில் அலகு குத்தியும் கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் இருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஏப்ரல் மாதம் 26-ம் தேதியில் இருந்து மே மாதம் 2-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    26-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
    * வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

    27-ம் தேதி புதன் கிழமை :

    * தேய்பிறை துவாதசி
    * வீரபாண்டி கௌமாரியம்மன் வீதிவுலா
    * சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

    28-ம் தேதி வியாழக்கிழமை:

    * பிரதோஷம்
    * கரிநாள்
    * சித்தயோகம்
    * மத்ஸிய ஜெயந்தி
    * ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி
    * சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

    29-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * தேய்பிறை சதுர்த்தசி
    * அமிர்தயோகம்
    * மாதசிவராத்திரி
    * சுபமுகூர்த்தநாள்
    * ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம்: மகம், பூரம்

    30-ம் தேதி சனிக்கிழமை:

    * அமாவாசை
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்: பூரம். உத்திரம்

    1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று
    * அம்மன் கோவிலில் வழிபட நன்று
    * திருப்போரூர் முருக பெருமான் சிறப்பு அபிஷேகம்
    * சூரிய வழிபாடு
    * சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

    2-ம் தேதி திங்கட்கிழமை:

    * கார்த்திகை விரதம்
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வருக்கு திருமஞ்சனம்
    * சந்திராஷ்டமம்: சித்திரை 
    திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நித்திய கல்யாண பெருமாள் தேவியருடன் அலங்கார திருத்தேரில் எழுந்தருளி, ராஜ அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா சென்று வந்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விழா நடப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று (25-ந்தேதி) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
    கும்பாபிஷேகத்தை காண அதிகாலை முதலே சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.
    பூந்தமல்லி :

    குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி முழுமை அடைந்தது. தொடர்ந்து கடந்த 20-ந்தேதி கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சிவஞான பாலையாசுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு நடைபெற்றது.

    சிறப்பு பூஜைகளுடன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கோவில் கோபுரத்தின் அருகே 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    கும்பாபிஷேகத்தை காண அதிகாலை முதலே சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் ‘அரோகரா’ கோ‌ஷம் எழுப்பினர்.

    இவ்விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம், கலெக்டர் ஆர்த்தி, தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    தாம்பரம், பூந்தமல்லி, ஐய்யப்பன்தாங்கல் பணிமனையிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்கள் தப்பிப்பதற்காக கோவில் படிக்கட்டுகளில் சிவப்பு நிற கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்ததோடு ஆங்காங்கே டேங்குகள் மூலமாகவும், கேன்களிலும் குடிநீர் வைக்கப்பட்டு இருந்தன.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவில் பின்புறம் 6 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதியும், 5 இடங்களில் மொபைல் டாய்லெட்டும் வைக்கப்பட்டு இருந்தது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மா.அமுதா, விழா குழு தலைவர் அ.செந்தாமரைகண்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    இதையும் படிக்கலாம்....சீதா தேவியின் விரதம் எதற்காக?
    ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.
    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தலைஞாயிறு என்ற ஊர். இங்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ திருக்கோவில் அமைந்துள்ளது. இந்திரன், தான் செய்த குற்றம் ஒன்றை பொறுத்தருள வேண்டும் என்று, இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றான். இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்ற பெயர் வந்தது.

    சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படுபவர், வசிஷ்டர். அவர் ஒரு முறை ஞானம் பெறுவதற்காக, பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரை சந்தித்த பிரம்மன், “தர்மம் ஒன்று செய்தால், அதன் பலன் பத்து மடங்காக கிடைக்கும் ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு சென்று சிவபூஜை செய்தால், ஞானம் பெறலாம்” என்று, இத்தல பெருமையைக் கூறி அனுப்பினார். வசிஷ்டரும் இந்த திருத்தலம் உள்ள பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்டதன் மூலம் ஞானம் பெற்றார்.

    இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    சித்திரை மாதத்தையொட்டி சிதம்பரம் நடராஜருக்கு மகா ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி ஆகிய 6 மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி சித்திரை மாத மகா ருத்ர அபிஷேகம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு கனக சபையில் வைத்து விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக மகா அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை, கால சந்தியில் விசேஷ ரகசிய பூஜை, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்திக்கு லட்சார்ச்சனை, கடஸ்தாபனம், மஹா ருத்ர ஜபம், மஹா தீபாராதனை ஆகியவை நடந்தது.

    பின்னர் மதியம் 2.30 மணிக்கு, கிழக்கு கோபுரம் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு மகா ருத்ர யாகத்தை தீட்சிதா்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    தொடா்ந்து ஹோமம், மஹா ருத்ர ஹோமம், வசோதாரா ஹோமம், மஹா ருத்ர மஹாபூர்ணாகுதி, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, தச தானங்கள், பஞ்ச தானங்கள், கடயாத்ராதானம் ஆகியவை நடந்து முடிந்த உடன், இரவு 7 மணிக்கு மேல் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மகா ருத்ர அபிஷேகம் இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
    திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான, ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால், இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
    'நான் என்னுடைய கணவருடன்தான் இருப்பேன். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்து ஒன்றாக வாழ்வோம், அந்நியோன்யமாக இருப்போம்' என்று  ஒரு பெண் உறுதி மேற்கொள்ளவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சீதா ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்த நாள், வைஷாகா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் போது நவமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான, ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால், இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணம் தள்ளிப்போகும் கன்னிப்பெண்களும் இவ்விரதத்தை மேற்கொண்டால், ராமபிரானைப் போல அழகும் பண்பும் நிறைந்த கணவன் கிடைப்பான்.

    பூஜை செய்யும் முறை :

    விடியற்காலையில் எழுந்து, குளித்து  முடித்ததும் பூஜையறையை சுத்தம் செய்யவேண்டும்.ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் சேர்ந்து இருக்கும் படத்துக்கு சந்தனம், குங்குமம்  வைத்து, மலர்கள் சூட்டி ஒரு சிறிய பலகை மீது வைக்க வேண்டும்.விளக்கை ஏற்றி, சீதா சஹஸ்ரநாமத்தை கூறி மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அன்னைக்குப் பிரசாதமாக பழம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபடலாம்.பின்பு சீதா தேவியின் வாழ்க்கைக் கதையை பக்தியோடு படிக்க அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

    விரதம் இருக்கும் காலங்களில் திட உணவுகளைத் தவிர்த்து பழம்,பால், மோர், தண்ணீர் , இளநீர் போன்ற திரவஉணவுகளையே எடுத்துக்கொள்ளவேண்டும். அன்று அருகில் இருக்கும் ராமர் ஆலயத்திற்குச் சென்று ராமபெருமானையும், சீதா தேவியையும் தரிசித்து மகா அபிஷேகம், ஆரத்தி ஆகியவற்றைக் காணலாம். வீட்டில் ராமாயணம் படிக்க இயலாதவர்கள், கோயில்களில் நடக்கும் கதாகாலட்சேபத்தை கேட்கலாம்.

    சீதா தேவி விரத பலன்கள் :

    வம்புப் பேச்சுக்களை குறைத்து அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, தாய்மை உணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னை அருள்வாள். அதோடு கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன், சீரும் சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அருள்புரிவாள்.
    தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
    திருப்பதி :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், நாளை வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,347 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,440 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    வைகுண்ட காம்ப்ளக்ஸ்சில் 3 அறைகளில் இலவச தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். 4 மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    இதையும் படிக்கலாம்....திருச்சூர் பூரம் விழாவுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: வாண வேடிக்கை நடத்தவும் அனுமதி
    இந்த ஸ்தோத்திரம் தினமும் சொல்லி சீதாராமரை வழிபாடு செய்து வந்தால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.
    அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுர நாயிகாம்
    ராகவாணாம் அலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம்
    ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்
    ஸுர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்
    புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
    வஸிஷ்டா நுமதாசாரம் ஸதாநந்தமதாநுகாம்
    கௌஸல்யாகர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
    புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்
    சந்த்ரகாந்தாந நாம்போஜம் சந்த்ரபிம்போமாநநாம்
    மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்
    சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ரபுஜஸ்தலீம்
    சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்ருதபாணிகாம்
    ஸரணாகதகோப்தாரம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
    காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம்
    திவ்யஸிம் ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்
    அநுக்ஷணம் கடாக்ஷப்யாம் அந்யோந்யேக்ஷண காங்க்ஷிணௌ
    அந்யோந்யஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ
    இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்
    அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
    தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:
    ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விஸேஷத:
    க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமந்அவாப் நுயாத்
    ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூரணம்

    கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழா மே மாதம் 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. விழாவில் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்கு நாதன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழாவில் உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    விழாவின் போது நடைபெறும் யானைகள் அணிவகுப்பு மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை காணவும் பலர் கோவிலுக்கு வருவார்கள்.

    கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்சூர் பூரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த ஆண்டுக்கான திருச்சூர் பூரம் விழா மே மாதம் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கேரள தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் மே மாதம் 10-ந் தேதி நடைபெறும் பூரம் விழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்பு மந்திரி ராதா கிருஷ்ணன் கூறும்போது, பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து விழாவில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.

    மேலும் கோவிலில் மே 11-ந் தேதி வாண வேடிக்கை நடத்தவும், இது தொடர்பான மாதிரி வாண வேடிக்கையை மே 8-ந் தேதி நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து கோவிலில் பூரம் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையும் படிக்கலாம்...அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்- மாமல்லபுரம்
    ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே மாதம் 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.

    அங்கிருந்து மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இன்று(திங்கட்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 26-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    27-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 28-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. 30-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே மாதம் 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ராஜகோபுரம், கருவறை கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது.
    குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது.

    இப்பகுதியில் வரலாற்று ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில், பல நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டது.

    இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ராஜகோபுரம், கருவறை கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில்,

    ‘சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவிலை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்களிப்புடன் மராமத்து பணி மட்டும் குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்பட்டு வருகிறது. கோவிலை முழுமையாக புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    கோவில் தேரோட்டம் மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ×