என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
காரப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் அடுத்த மாதம் 15-ந்தேதி (ஞாயிறு) காலையில் படுகள காட்சியும், மாலையில் தீ மிதி திருவிழாவும் நடைபெறுகிறது.
சென்னை சோழிங்க நல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் புகழ் பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை கடந்த 2011-ம் ஆண்டு ஊர் மக்கள் ஒன்று கூடி கோவிலை புதுப்பித்து கட்டி போதிராஜா சிலையும், கொடி மரமும் அமைத்தனர்.
தினமும் திரவுபதியம் மனுக்கும், போதி ராஜாவுக் கும் அபிசேகம் செய்யப்படும். ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, கோவிலின் வடக்கு பக்கம் நவகிரக சிலை, நாகராஜா- ராணி சிலைகள் உள்ளன.
மாதந்தோறும் அமாவாசையின் போது சிறப்பு பூஜையும் நடைபெறும்.
இந்த கோவிலை புதுப்பித்து முதலாம் ஆண்டு அக்னி வசந்தவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 21-ந் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது.
அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறும் விழாவில் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, நாடகம், தீமிதி உலா, படுகள காட்சி, திருமுடி புனைதல், தருமர் பட்டா பிஷேகம் என தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.
தீ மிதிக்கு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். அடுத்த மாதம் 15-ந் தேதி (ஞாயிறு) காலையில் படுகள காட்சியும், மாலையில் தீ மிதி திரு விழாவும் நடைபெறுகிறது. 16-ந் தேதி தருமனுக்கு திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
கோவில் அறங்காவலர் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம் தலைமையில் ஊர் மக்கள் 25 நாட்கள் நடை பெறும் விழாவை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
திருமாலை வழிபடும் சமயத்தினர், ‘வைணவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
இந்த மந்திரத்தில் உள்ள ‘கிருஷ்ணா, ராமா’ என்ற இரண்டு வார்த்தைகளும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும். மேலும் அவை ‘மிக உன்னதமான, ஆனந்தமான’ என்றும் பொருள்படும். ‘ஹரா’ என்பதற்கு சக்தி என்று பொருள். இந்த ‘ஹரா’ என்பதே நாளடைவில் ‘ஹரே’ என்று மாறியதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், பக்தர்களின் வேண்டுதல்கள், இறைவனை சென்றடைய வழியேற்படுகிறது.

இறைவனை ஏன் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு விவேகானந்தர் அளித்த ஒரு விளக்கம் சரியானதாக இருக்கும். எனவே அதை இங்கே பார்க்கலாம்.
‘எங்கும் நிறைந்திருக்கிறார் இறைவன்’ என்றுதான் அனைத்து மதங்களும் சொல்கின்றன. அப்படியிருக்கையில் ஏன் இறைவனை கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு விவேகானந்தர் அளித்த ஒரு விளக்கம் சரியானதாக இருக்கும். எனவே அதை இங்கே பார்க்கலாம்.
ஒரு முறை விவேகானந்தர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து, “நாம் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு போகாமலேயே கடவுளை உணர முடியாதா?” என்று கேட்டார்.
அதற்கு விவேகானந்தர், “தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டார்.
உடனே அந்த நபர் அருகில் இருந்த அறைக்குச் சென்று, அங்கிருந்து சொம்பில் தண்ணீர் பிடித்து வந்து, அதை விவேகானந்தரிடம் கொடுத்தார்.
அதைப் பார்த்த விவேகானந்தர், “நான் உங்களிடம் தண்ணீர் தானே கேட்டேன். எதற்காக சொம்பு” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த நபர், “சொம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்” என்றார்.
இப்போது விவேகானந்தர், “ஆம் சகோதரரே.. தண்ணீர் கொண்டு வர சொம்பு தேவை. அதுபோலவே கடவுளுடன் உறவாடவும், அவரைப் பற்றி சிந்திக்கவும் தனி இடம் வேண்டும். அதுவே கோவில். அதனால்தான் கோவில் வழிபாடு மிகவும் அவசியம் என்கிறேன்” என்று விளக்கினார்.

திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம்.
ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், தன்னுடன் இருந்த அம்பிகைக்கு, உலக உயிர்களின் படைப்புக்கு ஆதாரமாக அமைந்த ‘பிரணவ மந்திர’த் தினை உபதேசித்துக் கொண்டிருந்தார். அதனை குழந்தையாக தாயின் மடியில் அமர்ந்திருந்த முருகப்பெருமானும் கேட்டு ஞானம் பெற்றார். ஆனால் குருவால் உபதேசிக்கப்பட வேண்டிய ரகசியத்தை, மறைமுகமாக அறிந்து கொண்டதன் காரணமாக, முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. இதற்கு பரிகாரம் செய்யும் நோக்கில், பூலோகம் வந்து தவம் செய்தார், சிவ மைந்தன்.
அந்த தவத்தின் முடிவில் முருகப்பெருமானின் பாவம் விலகியது. அதோடு அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். அந்த தலமே ‘பரங்குன்றம்’ ஆகும். இதுவே முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக அமைந்தது. இந்த திருப்பரங்குன்றத்தில்தான், முருகப்பெருமான் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகளான தெய்வானையை மணம் செய்து கொண்டார். இந்த மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம். பவுர்ணமி அன்று, இந்த மலையைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

புதன் கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பது நன்மை தரும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.
ஞாயிறு
சூரிய பகவானின் இன்னொரு பெயர் ஞாயிறு. ஞாயிறு சூரியனுக்கு உகந்த நாள். அதனால், கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்கி வழிபடுவதற்கு ஏதுவான நாள் ஞாயிறு. ஞாயிறு காலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி சூரிய பகவானை வழிபட்டு நலம் பெறலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் பிறந்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறன்றும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று சூரியனை ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஸ்லோகம் சொல்லி வணங்கி வாருங்கள்.
திங்கள்
திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் திங்கட்கிழமைகளில் வழிபடுவது நல்லது.
செவ்வாய்
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த தினம். சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.
புதன்
புதன் கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசி மாடத்திற்கு புதன் கிழமைகளில் பூஜைகள் செய்து வரலாம். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.
வியாழன்
நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். தென்முக கடவுளான தட்சணாமூர்த்தியை விரதம் இருந்து வியாழனன்று வணங்கலாம். கருணையே வடிவான சாய் பாபாவை விரதம் இருந்து வழிபடலாம். ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை விரதம் இருந்து ஆராதனை செய்ய உகந்த கிழமை வியாழன். பகவத் கீதையை அதன் பொருள் உணர்ந்து வியாழன் அன்று படித்து வந்தால் நன்மை கிடைக்கும்.
வெள்ளி
வெள்ளிக்கிழமைகளில், விரதம் இருந்து மஹாலட்சுமியை வழிபாடு செய்வது நன்மை தரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்து விளக்கினை ஏற்றி வைத்து வழிபடுவது இதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வரலாம். மஹாலட்சுமி ஸ்தோத்ரம், மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.
சனி
ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலையை அடைந்த அடியவர்களை விரதம் இருந்து வணங்குவதற்கு உகந்தநாள் சனிக்கிழமை. ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள்.
இவை தவிர, முழு முதற் கடவுளான விநாயகரை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 19-ந்தேதி தேர்த்திருவிழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று தேங்காய் பழக்கடை, புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
முன்னதாக காலை 10 மணி அளவில் அம்மன் மூலஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் சென்றடைந்தார். 12 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மூலஸ்தானம் சென்றடைந்தார். அத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி ஊர்வலம் இன்று காலை நடந்தது. அக்னிச் சட்டிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை கோனியம்மன் கோவில் முன்பு திரண்டனர்.
கோவை அவினாசி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியும், 21-ந் தேதி அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. அக்னிச்சாட்டு கம்பத்துக்கு பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர்.
22, 25-ந் தேதிகளில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மேலும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி ஊர்வலம் இன்று காலை நடந்தது. பல்வேறு இடங்களில் அக்னிச் சட்டிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை கோனியம்மன் கோவில் முன்பு திரண்டனர்.
அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. சக்தி கரகம் முன் செல்ல அதனை தொடர்ந்து வேண்டு தலுக்காக அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் பின் தொடர்ந்து நீண்ட வரிசையில் வந்தனர். அவர்களுடன் பால்குடம் எடுத்த பக்தர்களும் ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, பால்மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக் பாண்ட் ரோடு, அவினாசி ரோடு வழியாக தண்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு அக்னிச்சட்டியை இறக்கி வைத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் காப்பு கயிறை கழற்றி விரதம் முடித்தனர்.
விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நாளை (28-ந் தேதி) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், 11 மணிக்கு மஞ்சள் நீர் நிகழ்வும் நடக்கிறது. மாலை 7 மணிக்கு கொடியிறக்குதல், கம்பம் கலைதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1-ந் தேதி மாலை 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

‘உங்களுடைய நோய்க்கு தர்மத்தை கொண்டு நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ உமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: தர்கீப்)
தான தர்மங்கள் பலவிதங்கள். ஒவ்வொரு விதமான தர்மமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அன்னதானம் பசியை போக்குகிறது. நீர் தானம் தாகத்தை தீர்க்கிறது. கண் தானம் பார்வையை கொடுக்கிறது. ரத்த தானம் உயிரை காக்கிறது. தானம் குறித்த நபி மொழிகள் வருமாறு:
‘பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதீபின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி)
ரகசியமாக தானதர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணிக்கிறது. தீய மரணம் சம்பவிப்பதிலிருந்து தடுக்கிறது. ஒருவரின் வலது கை செய்யும் தர்மம், அவரின் இடது கைக்கே தெரியாமல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், அவர் இறைவனின் நிழலில் நிழல் பெறுவார்.
‘தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு நிழல் தருவான். அவர்களில் ஒருவர் யாரெனில், தமது இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக்கரத்தால் ரகசியமாக தர்மம் செய்பவர் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, தானதர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: புகாரி)
‘உங்களுடைய நோய்க்கு தர்மத்தை கொண்டு நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ உமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: தர்கீப்)
இந்த தானங்கள் வரிசையில் நோன்புப் பெருநாளின் தானிய தர்மமும் இடம் பெறுகிறது. நோன்புப் பெருநாளின் அதிகாலையில் பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றப்படும் தானிய அறம் ‘ஸதகதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள் தர்மம்) என்று அழைக்கப்படுகிறது.
ஒருவர் நோன்பு நோற்கும் போது அவர் செய்யும் சிறு சிறு தவறுகளால் அவரின் நோன்புகள் விண்ணை எட்டாமல் மண்ணிற்கும், விண்ணிற்கும் இடையே தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவர் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றும்போது, நோன்பின் குறைகள் நிறைவு செய்யப்பட்டு, அவை விண்ணுலகை வந்தடைகின்றன.
‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். அது நோன்பாளியிடம் இருந்து வெளிப்படக்கூடிய வீண் செயலையும், தீய பேச்சையும் சுத்தம் செய்கிறது; ஏழைகளின் பசியையும் போக்கி விடுகிறது. நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பு அதைக் கொடுப்பது ‘ஸதகதுல் பித்ராக’ (நோன்புப் பெருநாள் தர்மமாக) அங்கீகரிக்கப்படுகிறது. தொழுகைக்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மது அபூதாவூத்)
‘மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என நபி (ஸல்) கட்டளையிட்டார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் உமர் (ரலி), நூல்: முஸ்லிம்)

‘ரமலானின் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்களான அடிமை-சுதந்திரமானவர், சிறியவர் - பெரியவர், ஆண்-பெண் ஆகியோர் மீது தீட்டாத கோதுமை, அல்லது பேரீச்சம்பழம் இவைகளிலிருந்து ஒரு ஸாஉ அளவை (சுமார் 2½ கிலோ) நபி (ஸல்) நிர்ணயித்தார்கள். பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்பு அதை வழங்கிடும்படி ஏவினார்கள்’.
(அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் கடந்த 21-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு மங்களாசாசனம், சேஷ வாகனத்தில் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 5-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சுவாமி கள்ளர்பிரான், காசினி வேந்தபெருமாள், விஜயாசன பெருமாள், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. 10.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடும், மாலை 4 மணிக்கு திருமஞ்சனம் தீர்த்த வினியோக கோஷ்டியும் நடந்தது.
தொடர்ந்து கோவிலில் இருந்து 4 கருட வாகனங்களில் சுவாமி கள்ளர்பிரான், ஸ்ரீபொலிந்துநின்றபிரான், காசினி வேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் எழுந்தருளி வீதிஉலா புறப்பட்டனர். பின்னர் இரவு 1 மணிக்கு மேடை பிள்ளையார் கோவில் எதிரே 4 பெருமாள்களுக்கும், ஹம்ச வாகனத்தில் வந்த நம்மாழ்வாருக்கும் எதிர்சேவை நடைபெற்றது. அப்போது சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ என கூறியபடி சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் அப்பர் சதய விழா நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற வசந்த உற்சவ திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 11 நாட்கள் வசந்த உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த திருவிழா முடிவடைய உள்ள நிலையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
நேற்று அப்பர் சதய திருவிழா நிகழ்வு நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் சதய நட்சத்திர நாளில் இந்த அப்பர் சதய விழா நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று கோவில் பிரகாரத்தில் கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணிக்கு அப்பர் சுவாமிகள் வெள்ளி சப்பரத்தில் வீதிஉலா வருவார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபடுவார்கள். அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் அருகே ஐக்கியமாகும் நிகழ்வு நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

143-வது பாஸ்கு விழாவை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயாளிகளை குணமடைய செய்தல் உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்துகாட்டப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் 143-வது ஆண்டு பாஸ்கு விழா 2 நாட்கள் நடைபெற்றது. இடைகாட்டூர் உலகபுகழ் பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைசித்தரிக்கும் வகையில் பாஸ்கு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு தேவாலயத்தின் முன்புள்ள அலங்கரிக்ப்பட்ட அரங்கில் “இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு” நாடகமாக நடித்துகாட்டப்பட்டது.
முதன் முறையாக டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயாளிகளை குணமடைய செய்தல் உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்துகாட்டப்பட்டன.
2-ம் நாள் பார்வை இல்லாவதருக்கு பார்வை வழங்குதல், இறந்த சீடரை உயிர் பித்தல், தொழு நோயாளிகளை குணமடைய செய்தல், யூத அரசு ஏசுவை கொடுமை செய்து தலையில் முள்கிரிடம் அணிவித்து சிலுவையில் அறையும் காட்சிகளையும், சிலுவையில் இருந்து உயிர்தெழும் காட்சி களையும் நடித்து காட்டினர். இந்த நாடகத்தில்100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விரதமிருந்து நடித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் செய்திருந் தது. முன்னதாக சிறப்பு திருப்பலி பூஜைகளைதிருத்தல அருட்பணியாளர் இமானுவேல் தாசன் செய்தார்.
மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து பாஸ்கு விழாவை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.

வள்ளிமலை கோவிலில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் சரவணபொய்கை தெப்பகுளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் வள்ளி மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தனிச்சிறப்பு உடையது. கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சரவண பொய்கை தெப்பகுளம் 1978-ம் ஆண்டு அப்போதைய தமிழக கவர்னரால் திறக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்-துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தெப்பகுளத்தில் உள்ள தண்ணீர் காகிதக் குப்பை கூளங்களுடன் மஞ்சள் நிறத்தில் சாக்கடை நீர் போல் காணப்படுகிறது.
மேலும் குளத்தில் மீன்கள் 25 நாட்களுக்கு முன்பு செத்து மிதந்ததை அப்பகுதி மக்கள் அப்பு றப்படுத்-தியுள்ளனர். வள்ளிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரவண பொய்கை குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இப்போது குளத்தில் மஞ் சள் நிறத்தில் தண்ணீர் இருப்பது கண்டு முகம் சுளித்து விட்டு குழாயடியை தேடிச் செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதற்கு அக்கறை காட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் 45 நாட்களுக்கும் மேலாக சாக்கடை தண்ணீர்போல் உள்ள கோவில் குளத்தை துர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர அக்கறை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-
வள்ளிமலை சரவணப் பொய்கை தெப்பக்கு ளம் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார் வந்துள்ளது. தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு போர்வெல் மூலம் குளத்துக்கு புதியதாக தண்ணீர் நிரப்பி மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு-வர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.