என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைப்பது உறுதி..
அலுவலகத்தில் தொடர்ந்து தொல்லைகள், பதவி உயர்வு மறுப்பு, மதிப்பின்மை அல்லது பல நாட்கள் தேடியும் வேலையே கிடைக்காத தன்மை போன்றவை விலக கீழ்க்கண்ட பரிகாரம் மிகுந்த பலன் தரும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம். இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையாக தேர்ந்தெடுத்து 1 கிலோ கருப்பு உளுந்து மற்றும் 1 கிலோ நிலக்கரி இரண்டையும் 1 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட கருப்பு துணியில் நன்றாக முடிந்து வைத்து, அதை சாதகர் தலை மற்றும் உடலை 21 முறை வலது புறமாக சுற்றி (வேறு நபர் சுற்றலாம்) பின்பு அதை ஓடும் நீரில் (ஆறு, ஏரி, கடல், நீர் நிலைகள்) விட்டு விட வேண்டும்.
பின்பு அங்கேயே நின்று ராம பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டி கொண்டு வீடு திரும்ப, விரைவில் நல்ல செய்தி வரும். இதை சனிக்கிழமை காலை 6-7 அல்லது 1-2 செய்ய மிகுந்த பலன் தரும். முடியாதவர்கள் வேறு நேரங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு முன்பு செய்து விட வேண்டும். மற்றபடி இதற்கு மந்திரம், திசை போன்றவை ஏதும் இல்லை. வீட்டிலேயே சுற்றி விட்டு பின்பு எடுத்து சென்று நீரில் விடலாம்.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற ஆலயங்களில், ஆறு கால பூஜைகள் நடைபெறும். இந்த ஆறு கால பூஜைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற ஆலயங்களில், ஆறு கால பூஜைகள் நடைபெறும். ஆலயங்களின் சிறப்பு, வருமானத்திற்கு ஏற்ப சில கோவில்களில் ஒரு கால பூஜை முதல் ஆறு கால பூஜைகள் வரை நடத்தப்படுகின்றன.
இந்த ஆறு கால பூஜைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு. அதாவது காலை 6 மணிக்கு நடைபெறுவது உஷத் கால பூஜை, 8 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு இராக்கால பூஜை (இரண்டாம் ஜாம பூஜை), இரவு 10 மணிக்கு அர்த்தஜாம பூஜை என்று பெயர்.
இதில் அர்த்தஜாம பூஜைக்குப் பின்னர், இரவு நடை அடைக்கப்பட்டு மறுநாள்தான் நடை திறக்கப்படும். அப்படி மறுநாள் அதிகாலையில் நடை திறக்கப்படும்போது, முதல்நாள் இரவு செய்த அலங்காரத்துடன் இறைவனை தரிசிப்பதற்கு பெயர் ‘நிர்மால்ய தரிசனம்’ ஆகும். இந்த தரிசன முறை தமிழகத்தில் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைதேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் ஆழ்வான் திருசுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றார்.
8-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேருகிறார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையைசென்றடைகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார். இதையடுத்து அதிகாலை 5.30 மணி முதல் அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார்.
தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடையும். சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டுநிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்து வருகின்றனர். நாளை மறுதினம் (சனிக்கிழமை) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும், 1-ந் தேதி இரவுஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 8-ந்தேதி கருட சேவையும், 12-ந்தேதி தேர் திருவிழாவும், 14-ந்தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரமோற்சவ விழா வருகிற 6-ந் தேதி காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழா அன்று உற்சவர் வீரராகவர் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் மே மாதம் 8-ந் தேதி கருட சேவையும், 7-ம் நாள் 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், 9-வது நாள் 14-ந் தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
2019-ம் ஆண்டு தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து தேரை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்து விட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை எல்லாமே பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவி உள்ளன. அதுபோல ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.
1. ஓம் சமார்த்த சத்குரு ஸ்ரீ சாயிநாதாய நமஹ
2.ஓம் குருதேவ தத்தாத்ரேயாய சாயிநாதாய நமஹ
3. ஓம் விஷ்வப் பிரணாய சாயிநாதாய நமஹ
4. ஓம் விக்னநிவாராகாய சாயிநாதாய நமஹ
5. ஓம் ரோக நிவாராகாய சாயிநாதாய நமஹ
6. ஓம் மஹாபய நிவாராகாய சாயிநாதாய நமஹ
7. ஓம் சாபவிமோச்சகாய சாயிநாதாய நமஹ
8. ஓம் அபயப் பிரதாய சாயிநாதாய நமஹ
9. ஓம் சகல தேவத ஸ்வரூபாய சாயிநாதாய நமஹ
10. ஓம் சாரங்கதா வாத்சலாய சாயிநாதாய நமஹ
11. ஓம் ஆயுள் ஆரோக்ய ஐசுவரிய பிரதாய சாயிநாதாய நமஹ
இப்படி பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. தினமும் பாபா படம் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.

நடை பாதையாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதிக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் அலிபிரி பூ தேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ் சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
தரிசன டோக்கன் பெறுவதற்காக பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர். அதேபோல் தற்போதும் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடாகாவில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் சென்று தரிசன டிக்கெட் பெற்று திருப்பதியில் வழிபாடு செய்து வந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புயல் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அலிபிரியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்லும் சாலை மற்றும் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் மரங்கள் விழுந்தும் பாறைகள் உருண்டு விழுந்தும் பலத்த சேதமடைந்தன.
சேதமடைந்த அலிபிரி நடைபாதை சீரமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து நடைபாதையாக வரும் தக்கர்கள் தரிசனத்திற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கியதை போல் மீண்டும் தரிசனம் டோக்கன் வழங்க வேண்டும்.
நடை பாதையாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 75,078 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,674 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் பஞ்சமூர்த்திகள அப்பர் பெருமானுக்கு கைலாய காட்சி அளிக்கும் திருவிழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு திருநாவுக்கரசர் சுவாமிகளை வீரட்டானேஸ்வரர் ஆட்கொண்ட புராணத்தில்அருளிய நிகழ்ச்சி 10 நாட்கள் உற்சவமாக சித்திரை மாதம் நடைபெறு வதுவழக்கம்.
அதன்படி கடந்த 17-ந் தேதி திலகவதியார், திருவாளன், திருநீற்றை அளித்தலும், வீரட்டானேஸ்வரர் அருளால் வயிற்றுவலி நோய் நீங்கி நாவரசர் என திருபெயர் பெற்ற நிகழ்ச்சி நடந்தது.
18-ந்தேதி சமணர்கள் திருநாவுக்கரசு பெருமானை நீற்றறையில் இடுதல், நஞ்சூட்டுதல், யானை ஏவுதல் நிகழ்ச்சி நடந்தது. 19-ம்தேதி கடலில் வீழ்த்திய நிகழ்ச்சி, கரையேறிய நிகழ்ச்சி, காடவர்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தை கட்டுவித்தல் நடந்தது. 20ம்தேதி திருபெண்ணாகடத்து திருத்தூங்கானை மாடத்தில் திருவிலகச்சினை பெறுதல், திருச்சத்தி முற்றத்தில் திருவடிசூட்ட விண்ணப்பித்த நிகழ்ச்சி நடந்தது.
21-ந்தேதி திலவகதியார் நந்தவனத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளியது, திங்களூரில் அப்பூதியடிகளின் மகனுக்கு பாம்பின் விஷம் நீக்கிய நிகழ்ச்சி நடந்தது.
22-ந்தேதி திருநாவுக்கரசர் மகேஸ்வர பூஜை செய்தல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி மறை கதவு திறப்பித்தருளிய நிகழ்ச்சியும், 24-ந் தேதி சமணர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்க பெருமானை வெளிபடுத்தி வணங்கிய நிகழ்ச்சியும் நடந்து.
25-ந் தேதி சிவ பெருமாள் பொதி சோறுதந்து வழிகாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று (26-ம்தேதி) இரவு 9 மணிக்கு திருபுகளூரில் திருநாவுக்கரசர்முக்தி அடைதல் நிகழ்ச்சி ஐதீகமுறைப்படி திருக்குளத்தில் நடந்தது.
இதனையொட்டி வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் பஞ்சமூர்த்திகள அப்பர் பெருமானுக்கு கைலாய காட்சி அளிக்கும் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா காட்சியும் அப்பர் பெருமான் இறைவனோடு ஐக்கியமாகும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு ஹர ஹர மகாதேவா, நமச்சிவாயம் வாழ்க, சிவாயநம என விண்ணதிர கோஷம்எழுப்பி இறைவனை வழிபட்டனர்.

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ நாளான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!
சித்திரை மாத பிரதோஷம் இன்று. வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம் ரொம்பவே மகிமை மிக்கது. மாங்கல்ய தோஷம் முதலான சகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ நாளில், பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்குங்கள். நம்மையும் நம் இல்லத்தாரையும் இனிதே வாழச் செய்வார் சிவனார்!
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!
மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவபெருமானை வேண்டுவதும் ருத்ரம் உள்ளிட்டவற்றைப் பாராயணம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அந்த நாளில்,நம்மால் முடிந்த அளவு, பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்கினால், நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நல்லதுகளை, சத்விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் கல்வி பெருகும். செல்வம் வளரும், நோய்கள் விலகும், கடன், மனக்கவலை அகலும். ஒரு பிரதோஷ பூஜை ஆயிரம் சிவபூஜை செய்தமைக்கு சமம். ஆகவே பலன்களும் அதிகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால், அளவற்ற நன்மைகள் அடையலாம்.

ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ெரங்கநாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும். இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறது.
இதனைத்தொடர்ந்து நாளை, ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. அந்த தேரோட்டத்தின்போது ரெங்கநாதர், ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டு வஸ்திரம் ஒரு கூடையில் வைத்து மாட வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு, பின்னர் ஒரு வாகனத்தில் ஸ்ரீரங்கம் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டுக்கு முன்பு குவிந்தனர்.
பின்னர் காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி அருளை பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையும் படிக்கலாம்...‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்

நாரதர் தங்கி வழிபட்டதன் காரணமாக, சதுர்முகன்புரி என்ற இந்த ஊர் ‘நாரதர் பூண்டி’ என்று வழங்கப்பட்டு, பின்னாளில் ‘நார்த்தாம்பூண்டி’ என்று மாறியிருக்கலாம் என்கிறது ஊர் வரலாறு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.
ஒரு பிரளய காலத்தின்போது, இந்த பிரபஞ்சம் அனைத்தும் அழிந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் திருமால், ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார். மீண்டும் இந்த பிரபஞ்சத்தை உருவாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கமலத்தில் (தொப்புள்) இருந்து பிரம்மனை உருவாக்கினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார். அந்த தொழிலை ஏற்ற பிரம்மா, நாராயணருக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகம் வந்து ஒரு கோவிலை அமைத்து வழிபட்டார். அந்த ஆலயமே ‘திருவுந்திப்பெருமாள்’ திருக்கோவில். ‘உந்தி’ என்பது வயிறைக் குறிக்கும். பிரம்மன் வெளிப்பட்ட பகுதி என்பதால், இந்த பெருமாளுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆரம்ப காலத்தில் இந்த ஊர், பிரம்மனின் நான்கு முகத்தைக் குறிப்பிடும் வகையில் ‘சதுர்முகன்புரி’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகே ‘நார்த்தாம்பூண்டி’ என்ற பெயர் வந்திருக்கிறது. அதற்கான காரணத்தையும் பார்ப்போம்.
ஒரு முறை சாபத்தின் காரணமாக, பிரம்மனின் மகனான நாரத முனிவர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அந்த சாபம் தீர, அவர் திருவுந்திப் பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமால் நாரதருக்கு காட்சிகொடுத்தார். மேலும் அவரது சாபத்தையும் நீக்கி அருளினார். நாரதர் தங்கி வழிபட்டதன் காரணமாக, சதுர்முகன்புரி என்ற இந்த ஊர் ‘நாரதர் பூண்டி’ என்று வழங்கப்பட்டு, பின்னாளில் ‘நார்த்தாம்பூண்டி’ என்று மாறியிருக்கலாம் என்கிறது ஊர் வரலாறு.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட சம்புவராயர் காலத்தில், இங்கு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் சில படையெடுப்பு காரணமாக கோவில் சிதிலமடைந்தது. அதன்பிறகு பெருமாளுக்கு புதிய கோவில் கட்டப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி - பூதேவி உடனாய பெருமாள் சிலை புதியதாக அமைக்கப்பட்டது. அதற்கு கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. இரண்டு பெருமாள்கள் அருளும் இந்த ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.
அமைவிடம்
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.

போளூர் மண்டகொளத்தூர் சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், தென் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது. இதில் சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோவில் போளூர் அருகே உள்ளது. பார்வதிதேவி திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாக காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது.
இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.
தற்போது மண்டகொளத்தூர் கோவிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.