என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனிதச் சின்னமாக கருதப்படும் சிறப்புமிக்க திருநீற்றை, தலை முதல் கால் வரை, உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும் என்று வரைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. சிறப்புமிக்க அந்தத் திருநீற்றை, தலை முதல் கால் வரை, உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும் என்று வரைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த திருநீறானது, ‘கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்’ என்று நான்கு வகைப்படும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
* கன்றுடன் ஆரோக்கியமாக வாழும் பசுவின் சாணம், கீழே விழும் முன்பாக, தாமரை இலையில் பிடித்து, வேதமந்திரங்கள் ஓதி, முறைப்படி தயாரிக்கப்படுவது ‘கல்ப திருநீறு.’
* பசுமை நிறைந்த புற்களை மட்டுமே மேயும், பசுக்களின் சாணத்தில் இருந்து தயாரிக்கப் படுவது ‘அனுகல்ப திருநீறு’ ஆகும்.
* ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சாணத்தை, அக்னியில் எரித்துக் கிடைப்பதுவே ‘உபகல்ப திருநீறு.’
* வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு தயார் செய்யப்படுவது, ‘அகல்ப திருநீறு.’

ஆண்டவர் உபத்திரவங்களையும், சோதனைகளையும் ஜெயிக்க உங்களுக்கு பெலன் தருவார். நிச்சயமாகவே ஆண்டவர் உபத்திரவ நேரத்தில் உங்களுக்கு உதவி செய்து தாங்க வல்லவராயிருக்கிறார்.
“ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்” (எபி.2:18)
நீங்கள் சோதனையின் மத்தியிலே, உபத்திரவத்தின் மத்தியிலே கடந்து போகும் போது, மிகவும் துக்கப்பட்டு, ஏன் இந்த சோதனை என்று அழுது புலம்புகிறீர்கள்.
ஆனால் ஒரு சத்தியத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழுகிற வரைக்கும், நீங்கள் உபத்திரவங்களையும், பாடுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்.
இயேசு சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33).
“பிரியமானவர்களே, உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சநதோஷப்படுங்கள்” (1 பேது. 4:12,13) என்று வேத வசனம் சொல்லுகிறது.
உங்களுடைய வாழ்க்கையிலே, உபத்திரவங்களும் பாடுகளும் வரும்போது, இது ஏதோ புதுமை என்று எண்ணி நீங்கள் திகைக்க வேண்டாம். இந்தச் சோதனையானது உங்களுடைய தரத்தை நிரூபிப்பதற்காக, சோதிப்பதற்காக வருகிறது.
உதாரணமாக, ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டுமென்றால், அவன் தேர்வு எழுதிதான் ஆகவேண்டும். அவன் தேர்வு எழுதும்போது ஏன் இந்தச் சோதனை, ஏன் இந்தத் தேர்வு, ஏன் படிக்கக்கூடிய போராட்டம் என்று நினைக்கலாம். ஆனால் அந்தத் தேர்விலே அவன் தேர்ச்சியடையும்போதுதான் அவன் உயர் வகுப்பிற்கு செல்லுகிற மகிழ்ச்சி அவனுக்கு வருகிறது.
அதுபோலத்தான் நீங்கள் அடுத்த நிலைக்கு, அதாவது உயர்ந்த நிலைமைக்கு செல்ல வேண்டுமென்றால், உங்களுடைய வாழ்க்கையிலே, குணாதிசயத்திலே, விசுவாசத்திலே நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் சோதிக்கப்பட வேண்டியது அவசியம். அந்தச் சோதனையையும், உபத்திரவங்களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.
ஆகவே, நீங்கள் சோதனையின் மத்தியிலும், உபத்திரவத்தின் மத்தியிலும் கடந்து போகும்போது சோர்ந்து போகாதிருங்கள். ஆண்டவருடைய வார்த்தைகளை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்.
அவர் உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்ற வார்த்தையோடு நிறுத்திவிடவில்லை. ‘திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். நீங்களும் இந்த உலகத்தை ஜெயிக்கும்படி உங்களுக்கு உதவிச் செய்வேன்’ என்றார்.
“நான்போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).
பிரியமானவர்களே, திடன் கொள்ளுங்கள். கலங்காதிருங்கள். ஆண்டவர் உபத்திரவங்களையும், சோதனைகளையும் ஜெயிக்க உங்களுக்கு பெலன் தருவார். நிச்சயமாகவே ஆண்டவர் உபத்திரவ நேரத்தில் உங்களுக்கு உதவி செய்து தாங்க வல்லவராயிருக்கிறார்.
போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை

வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.
மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கர்ம வினைப் பயனை அனுபவிக்க வேண்டியது இருந்தால்தான், மனிதப் பிறவியும் ஏற்படுகிறது. எனவே மனிதனும், அவனுக்கான துன்பமும் பிரிக்க முடியாதவை. ஆனால் அந்த துன்பங்களை குறைத்துக் கொள்வதற்கான எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.
கணவன்- மனைவி ஒற்றுமையாக வாழ, இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30- 12), மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு நெய் தீபமும் ஏற்றுங்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மகரிஷிகளால் சொல்லப்பட்ட எளிமையான பரிகாரங்களில் ஒன்று.
பெரும் துன்பத்தைத் தரக்கூடிய கடன் தொல்லையில் இருந்து விடுபட, யோக நரசிம்மரையும், சிறிய கடன் தொல்லைகளுக்கு லட்சுமிநரசிம்மரையும் வணங்குங்கள். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகும்.
கோவிலில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்கும பொட்டு வைத்து, எலுமிச்சைப் பழத்தை திரிசூலத்தில் குத்தி வைத்து வழிபட்டால், திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில், கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏவல், பில்லி, சூனியம் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
பைரவர் சன்னிதியில் தொடர்ச்சியாக 8 செவ்வாய்க் கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்தாலும், கொடுத்த கடன் வசூலாகும்.
உங்கள் வாழ்க்கையில் சனி பகவானின் பாதிப்பு குறைவதற்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களுக்குச் சென்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க வேண்டும். சனிக்கிழமைகளில், சனி பகவானுக்கு தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றினாலும் பலன் கிடைக்கும்.
சிவன் கோவிலில் உள்ள வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங் களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.
பிரதோஷகாலத்தில், பார்வதியுடன் ரிஷபாரூட மூர்த்தியாய் காட்சி தரும் ஈசனை வழிபடுபவர்களுக்கு, ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் அன்று, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால், திருமணம் விரைவில் நடந்தேறும்.

மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர், ராமானுஜர். இவர் சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்து, வைணவ சமயத்திற்காக தொண்டாற்றியவர். ராமானுஜரின் மூன்று திருமேனிகள் சிறப்புக்குரியவை. அவை
மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர், ராமானுஜர். இவர் சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்து, வைணவ சமயத்திற்காக தொண்டாற்றியவர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே, அவருக்கு கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு, அவர் மீது பற்று கொண்டவர்கள் இருந்தனா். அந்த காலத்திலேயே மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் இவர். ராமானுஜரின் மூன்று திருமேனிகள் சிறப்புக்குரியவை.
அவை:- தமர் உகந்த திருமேனி, தான் உகந்த திருமேனி, தானான திருமேனி. இந்த மூன்று திருமேனிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தமர் உகந்த திருமேனி
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ளது, மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம். இங்கு சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து சேவை புரிந்து வந்தார், ராமானுஜர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, ராமானுஜர் புரட்சி செய்ததும் இந்த திருத்தலத்தில்தான். தன்னுடைய 80-வது வயதில், தன்னை ஏற்றுக்கொண்ட அடியவர்களுக்காக, தானே ஒரு சிற்பியைக் கொண்டு ஒரு சிலையை வடிக்கச் சொன்னார். ராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையில் தன்னுடைய தெய்வீக சக்தியை செலுத்தி, அதைத் தன்னுடைய சீடர்களிடம் ஒப்படைத்தார். அதன்பிறகே திருநாராயணபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவரங்கம் சென்றார். இந்தச் சிலையை ‘தமர் உகந்த திருமேனி’ என்பர். இன்றும் மேல்கோட்டையில் இந்தத் திருவுருவச் சிலையை வழிபாடு செய்யலாம்.
தான் உகந்த திருமேனி
இந்தத் திருமேனி நிறுவப்பட்டிருக்கும் திருத்தலம், காஞ்சிபுரம் அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதூர் ஆகும். ராமானுஜப் பெருமாள், தன்னுடைய இறுதிக் காலங்களில், அதாவது 120-வது வயதில் திருவரங்கத்தில் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்த ராமானுஜரின் அடியவர்கள், அவரது திருவுருவச் சிலையை, ஸ்ரீபெரும்புதூரில் நிறுவ ஆசைப்பட்டனர். இதற்காக ராமானுஜரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. பின்னர் ராமானுஜரின் ஆலோசனைப்படி, அவர் உருவம் தாங்கிய செப்புச் சிலை ஒன்று செதுக்கப்பட்டது. அந்த சிலையை தன் மார்போடு அரவணைத்து, அந்தச் சிலைக்குள் தன்னுடைய தெய்வீக ஆற்றலை செலுத்தினார், ராமானுஜர். இந்தச் சிலையே ‘தான் உகந்த திருமேனி’ என்று அழைக்கப்படுகிறது.
அந்தச் சிலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் தனிச் சன்னிதியில் உள்ளது. இந்தச் சிலையில் உள்ள விலா எலும்பு, காது மடல் போன்றவை, ராமானுஜரின் 120 வயது தோற்றத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது.
தானான திருமேனி
ராமானுஜர் தன்னுடைய 120-வது வயதில் பரமபத நிலையை எய்தினார். கி.பி. 1137-ம் ஆண்டு, தான் பிறந்த அதே பிங்கள வருடத்தில் மாசி மாதம் வளர்பிறை தசமியில், ஒரு சனிக்கிழமை நண்பகல் வேளையில் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி திருவரங்கத்தில் சமாதியானார். அந்த இடம் ‘உடையவர் சன்னிதி’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமானுஜரின் பூத உடலை, இன்றும் நாம் தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாக காண இயலும். திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள இந்த திருமேனியைத் தான் ‘தானான திருமேனி’ என்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து ராமானுஜரின் திருமேனியில் சாற்றுவார்கள். ஆயிரம் ஆண்டுகளாக ராமா னுஜர் திருமேனி பாதுகாக்கப்படுவது, இந்த முறையில்தான் என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ராமானுஜரை வணங்கினால், அந்த இறைவனின் அருளையும் சேர்த்தே பெறலாம்.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தின் நுழைவு வாசலில் நந்தி சிலையின் அருகே அமைந்துள்ள பலிபீடத்தின் படிகள்தான், இசை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் திருக்கோவில், கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விருபாட்சீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் இசை எழுப்பும் கற்தூண்கள் இருப்பதைக் காண முடியும்.
அந்த வகையில் அமைந்ததுதான், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள ‘இசைப் படிக்கட்டுகள்.’ ஐராவதீஸ்வரர் ஆலயத்தின் நுழைவு வாசலில் நந்தி சிலையின் அருகே அமைந்துள்ள பலிபீடத்தின் படிகள்தான், இசை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரம் என, ‘சரிகமபதநி’ என்னும் ஏழு ஸ்வரங்களையும் வெளிப்படுத்துகின்றன.

ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருவிகையில் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.
8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்க விலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் மேஷ லக்னத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
கீழச்சித்திரை வீதியில் இறந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.
தேரோட்டத்தையொட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பர் சுவாமிகோவில் தேரோட்டத்தின்போது தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதன் எதிரொலியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்தில் கொள்ளப்பட்டன.
இதையடுத்து தேர் செல்லும் வழிநெடுகிலும் உள்ள மின் வயர்கள் மற்றும் மரக்கிளைகள் ஏதேனும் இடையூறாக இருக்கிறதா? என ஆய்வு செய்ய மின்வாரியம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தனி சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அதே போல் தேரோட்டம் தொடங்கும் முன்பாக காலை 6 மணி முதல் 11 மணி வரை அந்த பகுதியில் மின் தடை அமல்படுத்தப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சித்திரை தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அச்சமின்றி அலை கடலென திரண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
நாளை (சனிக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தா வரணம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை மறுநாள் (1-ந்தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிக்கலாம்...சித்திரை மாத சிவராத்திரியான இன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

சித்திரை மாத சிவராத்திரியான இன்று ஈசனின் அருளை முழுமையாகப் பெற, சிவபெருமானை நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம்.
மாதம்தோறும் வரும் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சிவராத்திரி அன்று சிவ பெருமானை மனதார வழிபடும்போது நோய் நொடியற்ற வாழ்க்கையையும், சுபிட்சமான வாழ்க்கையையும் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். சிவராத்திரி அன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.
‘ஓம் சிவசிவ சங்கரா போற்றி!’
இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. காலையில் 108 முறை உச்சரிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை 108 முறை உச்சரித்து உங்களது சிவராத்திரி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள சுலபமான மந்திரம் இது. நம்பிக்கையோடு உச்சரித்துப் பாருங்கள். வளமான வாழ்க்கையை பெறுங்கள்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலில் அதிநவீன மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கோவில் விளக்கணி மாடத்தின் இறுதி கட்ட பணிகள், தரை சீரமைக்கும் பணிகள் மற்றும் மியூரல் ஓவியப்பணிகள் போன்றவை நடக்கிறது.
மேலும், கோவில் பிரகாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதிநவீன மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. உள்பிரகாரத்தில் 10 விளக்குகள் பொருத்தும் பணி முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து இந்த விளக்குகள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. தற்போது வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் மொத்தம் 58 விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
மேலும் கோவிலுக்கு வருபவர்களை கண்காணிக்கும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு வாயில் உள்பட அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவிலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டபோது கும்பாபிஷேகம் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மிருத்துஞ்சய ஹோமமும், காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் நடத்தப்படுகிறது.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

வீரட்டானேஸ்வரர் பெரியநாயகி அம்பாளுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் மூலவரான வீரட்டானேஸ்வரர் பெரியநாயகி அம்பாளுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் பிரதோஷ நாயகர் வாகனத்தில் மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல் புவனகிரி அருகே எறும்பூர் கிராமத்தில் உள்ள கல்யாண சுந்தர சமேத கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும், சிவலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாரானை காண்பிக்கப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் பஞ்சலோக ஐந்து தலை நாகம் சிலை புதிதாக வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சிவராத்திரி வழிபாடு செய்வதனால் கிட்டும் பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. சிவனடியார் பலர் சிவராத்திரியை மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.
சிவராத்திரி வழிபாடு செய்வதனால் கிட்டும் பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. சிவனுக்கு உரிய சிவராத்திரியை நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியை மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.
சித்திரை மாதம்: இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.
வைகாசி மாதம்: வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.
ஆனி மாதம்: வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.
ஆடி மாதம்: தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
ஆவணி மாதம்: வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
புரட்டாசி மாதம்: வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
ஐப்பசி மாதம்: வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
கார்த்திகை மாதம்: இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
மார்கழி மாதம்: வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
தை மாதம்: வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
மாசி மாதம்: தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
பங்குனி மாதம்: வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’’ என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார் “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?, முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி’’ என்றார்.
உலகிலுள்ள நம் நண்பர் உறக்கத்தில் இருக்கிறார், நம் தேவையை அறிந்தும் உதவி செய்யவில்லை, தொல்லையைத் தாங்கமுடியாமல் உதவுகிறார். ஆனால் இறைவன் உறங்குவதில்லை, கேட்குமுன்னரே நம் தேவையை அறிவார். ஆனால், நாம் கதவைத் தட்டவேண்டும், இறைவனைத் தேடவேண்டும், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றே இயேசு கூறுகிறார்.
அதேபோல கேளுங்கள் தரப்படும் என்பது வாக்கு மட்டுமல்ல, அது நம் நம்பிக்கையை குறிக்கிறது.
நமது நம்பிக்கையை அழிக்கும் சோதனைகளும், பெரும் துன்பங்களும் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. இந்நேரங்களில், இறைவேண்டல் நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிகாட்டுதலையும் தருகிறது. நற்செய்தியைக் கைக்கொண்டு, இறையாட்சியின்படி செயல்பட இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டும். தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

வெள்ளிங்கிரியில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வந்தனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மழை ஓயும் வரை பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் மழை குறைந்ததும் பக்தர்கள் மழை ஏற அனுமதிக்கப்பட்டு மழை ஏற தொடங்கினர். தற்போது சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி போன்ற திருவிழா காலங்கள் முடிவுற்றதாலும் வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்து ள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது திருவிழா காலங்கள் முடிவடைந்து விட்டது. மேலும் கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும்.
இதையடுத்து வரும் மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். பொது மக்களும், பக்தர்களும் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மலைக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர பலன்தரும் பரிகாரம்