என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
மதுரை மாநகரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும்.
மிகப்பெரிய கோவிலாக கருதப்படும் இந்த கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த கோவில் 17 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ளது. கோவிலின் மொத்த நீளம் 847 அடி. அகலம் 792 அடி ஆகும்.
ஆடி வீதியில் அமைந்துள்ள பிரகார சுவர்கிழக்கு மேற்காக 830 அடியிலும், வடக்கு கிழக்காக 730 அடியிலும் அமையப்பெற்றுள்ளது.மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரைக்கு அழகு சேர்ப்பது அதன் கோபுரங்களும், அதில் உள்ள கலாசார சிற்பங்களும்தான்.மொத்தம் 12 கோபுரங்கள், தங்கத்திலானகோபுரங்கள் 2 என 14 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசைக்கும் ஏற்றாற்போல் 4 பிரம்மாண்ட வெளிப்புற கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன.
இவை அனைத்தும் 9 நிலைகள் கொண்டவை ஆகும். இந்த 4 கோபுரங்களும் ராஜகோபுரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் “மீனாட்சி சுந்தரேசுவரர்” கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் சிலை மரகதத்தால் ஆனது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவர் கடம்ப வனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்ததாக கருதப்படுகிறது.
மீனாட்சி வரலாறு
மதுரையை ஆண்டு வந்த மலயத்துவச பாண்டியனும் அவரது மனைவி காஞ்சன மாலையும் மகப்பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். பல்வேறு யாகங்களை செய்தனர். பிறகு பிரம்மன் உபதேசித்ததன் பேரில் புத்திரகாமேட்டி யாகம் மேற்கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு அருளும் பொருட்டு இவ்வுலகையே ஈன்ற அன்னையான உமாதேவியார் அந்த யாக குண்டத்தில் மூன்று தனங்களை உடைய பெண் குழந்தையாக தோன்றினார். குழந்தை உருக்கண்டு பேரானந்தம் பெற்ற அரசனும், அரசியும் அக்குழந்தையின் உருவிலே இருக்கும் மாற்றம் கண்டு மனம் வருந்தினர். அப்போது சிவபெருமான் அசரீரியாக “மன்னா மனம் வருந்தாதே இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு கல்வி கேள்விகளில் சிறப்பு பெறுமாறு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடு.
தனக்கேற்ற கணவனை இக்குழந்தை காணும்போது மிகுதியாக உள்ள ஒரு தனம் மறைந்துவிடும் என கூறினார். அரசனும் மன அமைதி பெற்றான். (ஒருவன் பிறக்கின்றபோது பரஞானம், அபர ஞானம், தன் முனைப்பு என்ற ஆணவம் ஆகிய 3 தனங்களோடு பிறக்கின்றான். தடாதகைக்கு இறைவனை பார்த்தவுடன் 3-வது தனம் மறைந்ததை போல மனிதன் இறைவனை நினைப்பதால் ஆணவம் என்ற 3-வதுதனம் மறையும் என்பது தத்துவம்) தடாதகை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து வீரம் மிக்கவளாக வளர்ந்தாள்.
பாண்டிய நாட்டின் அரசியானாள். செங்கோல் வழுவாமல் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தினாள். பாண்டிய நாடு பெருவளம் பெற்று பொன்னாடாக பொலிவு பெற்றது. தடாதகை தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி பல குறுநில மன்னர்களின் மீது படையெடுத்து சென்று வென்றாள். பிறகு பெரும்படையுடன் சென்று கயிலையம்பதியை அடைந்து போர் முரசு கொட்டினாள். அவளை எதிர்த்த பூதப்படைகளும், நந்திதேவரின் படைகளும் தோல்வியை தழுவின. இதனை அறிந்த இறைவன் போர்க்கோலத்துடன் அங்கே எழுந்தருளினார்.
அப்பெருமானை தன்னெதிரே கண்டதும் தடாதகை பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறியில் நாணி தலைக்குனிந்தாள். அவரது 3-வது தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்பதை உணர்ந்தாள். இறைவன், நீ மதுரைக்கு செல். இன்றைக்கு 8-ம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம் என்று கூறினார். அதன்படியே தடாதகை மதுரையை அடைந்து மகளிர் அட்டமங்கலத்தோடு எதிர்கொள்ள அரண்மனைக்குள் புகுந்தாள்.
இறைவனுக்கும், தடாதகைக்குமான திருமண நாள் குறித்து பல நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. வீதிகளும், மாளிகைகளும் அலங்கரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும்,திருமாலும் வந்திருந்தனர். மேலும்பல நாட்டு மன்னர்களும் திரண்டு வந்திருந்தனர்.
பங்குனி உத்திர பெருநாளில் திருமணத்திற்குரிய நல்லவேளையில் இறைவன் தடாதகையை மணந்தார். சுந்தரபாண்டியன் எனும் பெயருடன் மதுரையை ஆண்டு வந்தார். அதன் பின்பு முருகனின் அவதாரமாக வந்து தோன்றியஉக்கிரகுமார பாண்டியனுக்கு முடி சூட்டி விட்டு மீனாட்சி-சுந்தரேசுவரராக இறைவடிவாயினர் என்பது இத்தல வரலாறு. (மீனை ஒத்த கண்களை உடைய தடாதகை பிராட்டியே மீனாட்சியம்மை என்ற பெயருடன் கோவில் கொண்டு விளங்குகின்றாள்.)
தன்னை வேண்டிய பக்தர்களுக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.
இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர்.மீனாட்சி என்பது மீன் போன்ற அழகிய கண்களை உடையவர் என்று பொருள்படும். மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயேகுஞ்சு பொறிக்கும். அதுபோல உலகத்து மக்களுக்கு தன் அருள் பார்வையால் மீனாட்சி நலம் தருபவள் என புராணங்கள் போற்றுகின்றன.
மீன்களின் கண்கள் இமை இல்லாமல் இரவு பகலும் விழித்து கொண்டிருப்பதுபோல, தேவியும் கண்ணை இமைக்காமல் உயிர்களை காத்து வருகிறார் என்று ஹீராஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கருவறையில் மீனாட்சி அம்மன் இரு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியுடன் செண்டு ஏந்தியபடி காட்சி தருகிறார். கருணை பொழியும் கண்களுடன் அகிலம் எல்லாம் அருள் பாலிக்கும் அன்னையை காண கண் கோடி வேண்டும். இவரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன்கூடிய வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் கை ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் மீனாட்சி ஆட்சி நடக்கிறதா? என்ற பேச்சு வழக்கில் உள்ளது. அந்த அளவுக்கு மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

ஈரோடு மகிமாலீசுவரர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் 63 நாயன்மார்களின் சிலைகளை பெண்கள் தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர்.
ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் பிரசித்திபெற்ற மகிமாலீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்று வந்தது. கடந்த 26-ந்தேதி அப்பரடிகளின் (திருநாவுக்கரசர்) தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் 63 நாயன்மார்களின் சிலைகளை பெண்கள் தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர். கோவில் முன்பு புறப்பட்ட ஊர்வலம் மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, டி.வி.எஸ்.வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீராத வியாதி உள்ளவர்கள், நோய்வாய் பட்டவர்கள் அதில் இருந்து பூரண குணம் பெற மீனாட்சி அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்யலாம். இந்த குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தார், நெருங்கிய சொந்தங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத குங்குமத்தை நோயாளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் மூலம் நோய்கள் குணமாகி வருவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பிரான்மலை திருக்கொடுங்குன்றம் நாதர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு வடுகபைரவர் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் திருக்கொடுங்குன்றம் நாதர் கோவிலில் ஆகாயம், மத்திமம், பாதளம் என மூன்று நிலைகளில் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார்.பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் குயிலமுத நாயகி அம்மன், மத்திமத்தில் வடுக பைரவர், ஆகாயத்தில் மங்கைபாகர் தேனம்மை ஆகியோர் காட்சி தருகின்றனர்.
மத்திமத்தில் தெற்கு திசையில் காட்சி தரும் வடுக பைரவர் சுவாமிக்கு ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடைபெறும். குமார சஷ்டி விழா கார்த்திகை மாதத்திலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் ஜெயந்தன் பூஜை விழாவும் நடைபெறுவது வழக்கம். கடந்த காலங்களில் வடுக பைரவர் ஜெயந்தன் விழாவை முன்னிட்டு வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.
இவ்விழாவிற்கான இந்தாண்டு பிரான்மலை புதுப்பட்டி கிராமத்தார்கள் சார்பில் 60 கிலோ வெள்ளி கொண்டு 15 அடி உயர வெள்ளித்தேர் புதிதாக செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்டம் மற்றும் தேருக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். பிரான்மலை முதல் ஸ்தானிகர் உமாபதி சிவாச்சாரியார் குழுவினர் தேருக்கு உள்ளே பூஜிக்கப்பட்ட புனித நீர் வைக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னம்பல அடிகளார் வடம் பிடித்து கொடுக்க தேர் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று ஜெயந்தன் பூஜை விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு வடுகபைரவர் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரான்மலை புதுப்பட்டி கிராமத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

சுவாமிமலையை சேர்ந்த சிற்பி ஒருவர் 10 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து 53 அடி உயர வெண்கல அடைக்கல அன்னை சிலையை வடிவமைத்து உள்ளார்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள அருள் நிறை அடைக்கல அன்னை திருத்தலத்துக்கு 53 அடி உயரத்தில் வெண்கலத்திலான அடைக்கல அன்னை சிலை அமைத்து தர வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு திருத்தல நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அன்று முதல் கடந்த 10 ஆண்டுகளாக அடைக்கல அன்னை திருத்தலத்தில் வைத்து அடைக்கல அன்னையின் 53 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணியில் சிற்பி ஈடுபட்டு வந்தார்.
சுவாமிமலையில் உள்ள தனது சிற்ப கூடத்தில் இருந்து சிலைக்கான வார்ப்புகளை தயார் செய்து ஏலாக்குறிச்சி அருள்நிறை அடைக்கல அன்னை திருத்தலத்திற்கு கொண்டு சென்றார். அங்குள்ள ஜெபமாலை பூங்காவில் 53 அடி முழு உருவ அடைக்கல அன்னையின் சிலையை கடந்த 10 ஆண்டுகளாக சிற்பி வடிவமைத்து உள்ளார்.
பித்தளை, வெண்கலம், ஐம்பொன் உள்ளிட்ட உலோக பொருட்கள் கலந்து செய்து நிறைவாக 53 அடி உயர அடைக்கல அன்னையின் முழு உருவ வெண்கல சிலை 19 டன் எடையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலை வைப்பதற்கு பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் முழு உருவ சிலை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலையை வடிவமைக்க ரூ.1 கோடியே 60 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையை மின்னல் தாக்காமல் இருக்க இடி தாங்கியும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தங்கத்தோளுக்கினியானில் சுவாமி வீதி உலா, தங்கமசகிரியில் திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி, சிம்ம மற்றும் சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா மற்றும் கருட சேவையும் நடந்தது.
9-ஆம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா கோபாலா’ என்ற பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின்போது சிலம்பம், கரகாட்டம், குச்சுப்பிடி, பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகள் நடந்தது. பெருமாள்-தாயார் போன்று வேடமிட்ட இருவர் நடனமாடிச் சென்று பக்தர்களை கவர்ந்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமுத்து, சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தீபாராதணை வழிபாடு, சிறப்பு பூஜை வழிபாடு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வாகனம் மூலம் வந்து குவிந்தனர்.
இவர்கள் அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள், உள்பட சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில்அமைந்துள்ள 22 புனித தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன் பின்னர் ராமநாதசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமி சன்னதியில் மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற தீபாராதணை வழிபாடு, சிறப்பு பூஜை வழிபாடு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை ஒட்டி பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சனிக்கிழமை அமாவாசை கூடுதல் விசேஷம் நிறைந்த நாள். எனவே, முன்னோரை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுங்கள். இன்று சித்திரை அமாவாசை தர்ப்பணக் கடமையை மறக்காமல் நிறைவேற்றுங்கள்.
மறைந்த முன்னோர்களை ஆராதனை செய்வது ரொம்பவே முக்கியமானது. சனிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வருவது, மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆகவே, இன்று மறக்காமல் பித்ருக் கடமையை நிறைவேற்றுங்கள்.
அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து, அவர்களை வணங்குவதும், அவர்களை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் நம்மையும் நம் சந்ததியையும் செம்மையுற வாழச் செய்யும்; உயரச் செய்யும் என்பது ஐதீகம். தவறவிடாதீர்
அமாவாசை நாளில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கச் சொல்கிறது சாஸ்திரம். வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
அதேபோல், மாதந்தோறும் வருகிற அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து, பித்ருக்கடனைத் தீர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். இன்று சனிக்கிழமை சித்திரை மாத அமாவாசை. ஆகவே, இன்றைய தினம், தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள்.
இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவியுங்கள். அவருக்குப் பிடித்த உணவை, நைவேத்தியம் செய்யுங்கள். நம்மால் முடிந்த அளவு, நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம்.
அமாவாசை என்பது முன்னோருக்கு உரிய நாள். எனவே, இந்த நாளில், பித்ருக்களை நினைத்துச் செய்யும் எந்தத் தர்ம காரியங்களாக இருந்தாலும், அதில் மகிழ்ந்த முன்னோர்கள், நம் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள். எண்ணிலடங்காப் பலன்களை வழங்குவார்கள்.
தடைப்பட்ட பிள்ளை பாக்கியம், கிடைக்கப்பெறுவது உறுதி. தடைப்பட்ட காரியங்கள் நடக்கப்போவது சத்தியம். வீட்டில் தரித்திரம் விலகி, ஐஸ்வரியம் பெருகும். நம் சந்ததி சிறந்து விளங்குவார்கள். அவர்களால், மொத்தப் பரம்பரைக்குமே மரியாதையும் கெளரவமும் கிடைக்கப் பெறலாம். தீயசக்திகள், துஷ்ட தேவதைகள் நம்மை நெருங்காது. சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி.

திருமலையை தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த பிராட்டியை வழிபட்டுவிட்டு திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஆன்மிக நியதி இருக்கிறது.
திருமலை திருப்பதியில் அருளும் வெங்கடாஜலபதியின் வலதுபக்க மார்பில் மகாலட்சுமியும், இடது மார்பில் பத்மாவதியும் உறைவதாக ஐதீகம். ‘திருச்சானூர்’ என்னும் அலமேலுமங்காபுரத்தில் இருந்து அருள்பாலித்து வரும் தாயாருக்கு பத்மாவதி என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
திருமலையை தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த பிராட்டியை வழிபட்டுவிட்டு திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஆன்மிக நியதி இருக்கிறது.
கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமி, அதாவது வளர்பிறை ஐந்தாவது நாளன்று இங்கு தொடங்கும் பிரம்மோற்சவம் தொடர்ந்து பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்தோனேசியாவில் உபுத்பாலி என்ற இடத்தில் பாயும் நதியில் ஒன்று, ‘ஆயுங் நதி.’ இந்த நதி பாயும் வழியில் உள்ள பாறைகளில் ராமாயணக் கதை, சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உபுத்பாலி என்ற இடத்தில் பாயும் நதியில் ஒன்று, ‘ஆயுங் நதி.’ இது வடக்கு மலைத் தொடர்களில் இருந்து சுமார் 68 கிலோமீட்டர் தொலைவுக்கு பாய்கிறது. பாங்கிலி, படுங், கியான்யார், டென்பசார் போன்ற நகரங்கள் வழியாக கடக்கும் இந்த நதி, சனூரில் உள்ள படுங் ஜலசந்தியில் இணைகிறது. இந்த நதி பாயும் வழியில் உள்ள பாறைகளில் ராமாயணக் கதை, சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
இதில் ராமரின் 14 ஆண்டுகால வன வாழ்க்கை, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், சீதையை மீட்பதற்காக ராமர் படை திரட்டுதல், ராமருக்கும், ராவணனுக்குமான போர், சீதையின் அக்னி பரீட்சை போன்றவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நதிக்கரையில் ஆங்காங்கே மிக உயர்ந்த பிரமிக்க வைக்கும் சிற்பங்கள் தனித்தனியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. ஆயுங் நதியின் கரையோர பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், உள் படத்தில் கும்பகர்ணனோடு வானர வீரர்கள் மோதும் பிரமாண்ட சிலையையும் காணலாம்.

இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.
மூலவர்: பகவதி அம்மன்
தல விருட்சம்: வேம்பு
புராணப் பெயர்: மந்தைக்காடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கேரள பாணியில் ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் கூடிய எளிமையான ஆலயம் இதுவாகும்.
இந்த ஆலயத்தை கேரளப் பகுதியை ஆட்சி செய்த மார்த்தாண்டவர்மன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.
இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.
கருவறைக்குள் தரையில் பதிக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மேல்தான் புற்று வளர்ந்திருக்கிறது. இது தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்வதாக சொல்லப்படுகிறது.
கருவறையில் 15 அடி உயரம் வளர்ந்து, மேற்கூரையை முட்டி நிற்கும் புற்றுதான், பகவதி அம்மனாக வழிபடப்படுகிறது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் மூலவர் முன்பாக, வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதி அம்மன் அருள்கிறார்.
இத்தல அம்பாளுக்கு, காலை வேளையில் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்னைக்கு புட்டமுது பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு ‘மண்டையப்பம்’ செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்தால் தலைவலி குணமாகும் அதிசயம் நிகழ்கிறது.
இங்கு நடைபெறும் மாசி மாத திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கன்னியாகுமரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கிறது.

இறைவனை முழுமையாக சரணடைந்தால், விதிப்படி நடக்கும் பெரும் தீமை கூட, நம்மை விட்டு நீங்க இறைவன் அருள்புரிவார் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.
ஒரு குருவும், சீடனும் தல யாத்திரை மேற்கொண்டிருந்தனர். ஒருநாள் இரவு பயணத்தை முடித்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் தங்கி ஓய்வெடுத்தனர். மறுநாள் அதிகாலை கண் விழித்த சீடன், அருகில் இருந்த நதியில் நீராடிவிட்டு வந்து, குருவை எழுப்பினான். அவரும் உடனடியாக எழுந்து நீராடி வருவதாக கூறிச் சென்றார். அவர் நீராடும்போது, சூரிய பகவானை நினைத்து வழிபட்டார். அப்போது அவர் முன்பு தோன்றிய சூரிய பகவான், “உன்னுடைய சீடன் இன்று ஒரு ராட்சதனால் கொல்லப்படுவான். முடிந்தால் காப்பாற்றிக் கொள்” என்று எச்சரிக்கை செய்து மறைந்தார்.
நீராடி விட்டு தங்கியிருந்த இடத்திற்கு வந்த குரு, தன்னுடைய சீடனை கவலையோடு பார்த்தார். பின்னர் அவர்கள் இருவரும் வேறு ஒரு தலத்தை நோக்கி பயணப்பட்டனர். அன்று இரவும் ஒரு இடத்தில் தங்கினர். சீடன் நன்றாக கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் சீடனின் நிலை என்னாகுமோ என்ற கவலையில், குருவிற்கு தூக்கம் வரவில்லை.
அப்போது அங்கு ஒரு ராட்சதன் தோன்றினான். அவன், சீடனை தன் கூரிய பற்களால் கடிக்க முற்பட்டான். அவனைத் தடுத்த குரு, “நீ என் சீடனின் உயிரை எடுக்க வந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். குருவின் மீது பக்தி கொண்ட ஒரு சீடனை காப்பாற்றுவது, அந்த குருவின் கடமை. எனவே என்னுடைய சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன். என்னை மீறி நீ அந்த காரியத்தைச் செய்வதாக இருந்தால், என் தவப்பலனால், உன்னை கடுமையான துன்பத்திற்கு நான் ஆளாக்குவேன்” என்றார்.
ராட்சதன் இப்போது பேசினான். “சுவாமி.. உங்களுடைய சீடனை காப்பாற்றுவது உங்களுடைய கடமை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து அவருடைய ரத்தத்தை குடிக்க வேண்டும் என்பது எனக்கு எமதர்மன் இட்டிருக்கும் கட்டளை. அந்த கடமையை செய்யவிடாமல் நீங்கள் தடுப்பது எந்த வகையில் நியாயம்” என்று கேட்டான்.
அதைக் கேட்ட குரு, “சற்று பொறுமையாக இரு.. நீ என்னுடைய சீடனின் ரத்தத்தை குடிக்க வேண்டும், அவ்வளவுதானே. நானே அதற்கு வழி செய்கிறேன்” என்று கூறி, தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து, சீடனின் கழுத்தை ரத்தம் வரும்படியான ஆழத்திற்கு அறுத்தார். அப்போது கண்விழித்த சீடனின் முன்பாக, கத்தியோடு தன் கழுத்தை அறுக்கும் குரு காணப்பட்டார். ஆனால் அதன்பிறகு எந்த மறுமொழியும் கூறாமல், சீடன் மீண்டும் படுத்து உறங்கத் தொடங்கிவிட்டான்.
குருவும், தன்னுடைய சீடனின் கழுத்தை லேசாக அறுத்து அதில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தை ராட்சதன் குடிக்கும்படி செய்தார். இதனால் அவனது கடமை நிறைவேற்றப்பட்டு விட்டதை எண்ணி மகிழ்ந்தபடி, ராட்சதன் அங்கிருந்து அகன்றான். அவன் போனதும், தான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த மூலிகைகளைக் கொண்டு, சீடனின் காயத்திற்கு மருந்து போட்டார் குரு.
மறுநாள் காலை எழுந்த சீடனிடம், “நான் உன்னுடைய கழுத்தை அறுப்பதை கண்கொண்டு பார்த்தபிறகும் எப்படி அத்தனை தைரியமாக மீண்டும் உறங்கினாய்? உனக்கு பயம் தோன்றவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு சீடன், “குருவே.. என் கழுத்தில் ஏதோ ஊறுவதை உணாந்துதான் விழித்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை பார்த்தேன். ஆனால் என் குருநாதராகிய உங்களால் எனக்கு எந்தக் கெடுதலும் வராது என்பதை நான் அறிவேன். அதனால்தான் நிம்மதியாக தூங்கினேன். காலையில் எழுந்ததும் என் கழுத்தில் இருந்த மூலிகை பற்றைப் பார்த்தேன். நான் நினைத்தது சரிதான் என்று தோன்றியது. என் குருநாதராகிய உங்களுக்கு, என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். நீங்கள் எது செய்தாலும் அது என் நன்மைக்கே என்றறிவேன்” என்றான்.
இந்த கதையில் வரும் சீடன்தான் நாம். குரு நம்முடைய கடவுள். ராட்சதன் தான் நம் வாழ்வோடு விளையாடும் விதி. அனைத்தும் விதிப்படிதான் நடக்கும். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு. அவனை முழுமையாக சரணடைந்தால், விதிப்படி நடக்கும் பெரும் தீமை கூட, நம்மை விட்டு நீங்க இறைவன் அருள்புரிவார்.