search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    அமாவாசை வழிபாடு
    X
    அமாவாசை வழிபாடு

    சனிக்கிழமையும்... சித்திரை அமாவாசை விரதமும்...

    சனிக்கிழமை அமாவாசை கூடுதல் விசேஷம் நிறைந்த நாள். எனவே, முன்னோரை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுங்கள். இன்று சித்திரை அமாவாசை தர்ப்பணக் கடமையை மறக்காமல் நிறைவேற்றுங்கள்.
    மறைந்த முன்னோர்களை ஆராதனை செய்வது ரொம்பவே முக்கியமானது. சனிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வருவது, மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆகவே, இன்று மறக்காமல் பித்ருக் கடமையை நிறைவேற்றுங்கள்.

    அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து, அவர்களை வணங்குவதும், அவர்களை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் நம்மையும் நம் சந்ததியையும் செம்மையுற வாழச் செய்யும்; உயரச் செய்யும் என்பது ஐதீகம். தவறவிடாதீர்

    அமாவாசை நாளில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கச் சொல்கிறது சாஸ்திரம். வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    அதேபோல், மாதந்தோறும் வருகிற அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து, பித்ருக்கடனைத் தீர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். இன்று சனிக்கிழமை சித்திரை மாத அமாவாசை. ஆகவே, இன்றைய தினம், தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள்.

    இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவியுங்கள். அவருக்குப் பிடித்த உணவை, நைவேத்தியம் செய்யுங்கள். நம்மால் முடிந்த அளவு, நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம்.

    அமாவாசை என்பது முன்னோருக்கு உரிய நாள். எனவே, இந்த நாளில், பித்ருக்களை நினைத்துச் செய்யும் எந்தத் தர்ம காரியங்களாக இருந்தாலும், அதில் மகிழ்ந்த முன்னோர்கள், நம் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள். எண்ணிலடங்காப் பலன்களை வழங்குவார்கள்.

    தடைப்பட்ட பிள்ளை பாக்கியம், கிடைக்கப்பெறுவது உறுதி. தடைப்பட்ட காரியங்கள் நடக்கப்போவது சத்தியம். வீட்டில் தரித்திரம் விலகி, ஐஸ்வரியம் பெருகும். நம் சந்ததி சிறந்து விளங்குவார்கள். அவர்களால், மொத்தப் பரம்பரைக்குமே மரியாதையும் கெளரவமும் கிடைக்கப் பெறலாம். தீயசக்திகள், துஷ்ட தேவதைகள் நம்மை நெருங்காது. சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி.
    Next Story
    ×