search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாறைகளில் ராமாயணம்
    X
    பாறைகளில் ராமாயணம்

    பாறைகளில் ராமாயணம்

    இந்தோனேசியாவில் உபுத்பாலி என்ற இடத்தில் பாயும் நதியில் ஒன்று, ‘ஆயுங் நதி.’ இந்த நதி பாயும் வழியில் உள்ள பாறைகளில் ராமாயணக் கதை, சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
    இந்தோனேசியாவில் உபுத்பாலி என்ற இடத்தில் பாயும் நதியில் ஒன்று, ‘ஆயுங் நதி.’ இது வடக்கு மலைத் தொடர்களில் இருந்து சுமார் 68 கிலோமீட்டர் தொலைவுக்கு பாய்கிறது. பாங்கிலி, படுங், கியான்யார், டென்பசார் போன்ற நகரங்கள் வழியாக கடக்கும் இந்த நதி, சனூரில் உள்ள படுங் ஜலசந்தியில் இணைகிறது. இந்த நதி பாயும் வழியில் உள்ள பாறைகளில் ராமாயணக் கதை, சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.

    இதில் ராமரின் 14 ஆண்டுகால வன வாழ்க்கை, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், சீதையை மீட்பதற்காக ராமர் படை திரட்டுதல், ராமருக்கும், ராவணனுக்குமான போர், சீதையின் அக்னி பரீட்சை போன்றவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நதிக்கரையில் ஆங்காங்கே மிக உயர்ந்த பிரமிக்க வைக்கும் சிற்பங்கள் தனித்தனியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. ஆயுங் நதியின் கரையோர பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், உள் படத்தில் கும்பகர்ணனோடு வானர வீரர்கள் மோதும் பிரமாண்ட சிலையையும் காணலாம்.
    Next Story
    ×