என் மலர்

  வழிபாடு

  பிரான்மலையில் வெள்ளி தேர் வெள்ளோட்டம்
  X
  பிரான்மலையில் வெள்ளி தேர் வெள்ளோட்டம்

  பிரான்மலையில் வெள்ளி தேர் வெள்ளோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்மலை திருக்கொடுங்குன்றம் நாதர் கோவிலில் இன்று(சனிக்கிழமை) பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு வடுகபைரவர் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
  சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் திருக்கொடுங்குன்றம் நாதர் கோவிலில் ஆகாயம், மத்திமம், பாதளம் என மூன்று நிலைகளில் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார்.பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் குயிலமுத நாயகி அம்மன், மத்திமத்தில் வடுக பைரவர், ஆகாயத்தில் மங்கைபாகர் தேனம்மை ஆகியோர் காட்சி தருகின்றனர்.

  மத்திமத்தில் தெற்கு திசையில் காட்சி தரும் வடுக பைரவர் சுவாமிக்கு ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடைபெறும். குமார சஷ்டி விழா கார்த்திகை மாதத்திலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் ஜெயந்தன் பூஜை விழாவும் நடைபெறுவது வழக்கம். கடந்த காலங்களில் வடுக பைரவர் ஜெயந்தன் விழாவை முன்னிட்டு வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.

  இவ்விழாவிற்கான இந்தாண்டு பிரான்மலை புதுப்பட்டி கிராமத்தார்கள் சார்பில் 60 கிலோ வெள்ளி கொண்டு 15 அடி உயர வெள்ளித்தேர் புதிதாக செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்டம் மற்றும் தேருக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். பிரான்மலை முதல் ஸ்தானிகர் உமாபதி சிவாச்சாரியார்  குழுவினர் தேருக்கு உள்ளே பூஜிக்கப்பட்ட புனித நீர் வைக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னம்பல அடிகளார் வடம் பிடித்து கொடுக்க தேர் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இன்று ஜெயந்தன் பூஜை விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு வடுகபைரவர் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரான்மலை புதுப்பட்டி கிராமத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
  Next Story
  ×