என் மலர்
வழிபாடு

63 நாயன்மார்கள் ஊர்வலம்
ஈரோடு மகிமாலீசுவரர் கோவில் திருவிழா: 63 நாயன்மார்கள் ஊர்வலம்
ஈரோடு மகிமாலீசுவரர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் 63 நாயன்மார்களின் சிலைகளை பெண்கள் தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர்.
ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் பிரசித்திபெற்ற மகிமாலீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்று வந்தது. கடந்த 26-ந்தேதி அப்பரடிகளின் (திருநாவுக்கரசர்) தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் 63 நாயன்மார்களின் சிலைகளை பெண்கள் தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர். கோவில் முன்பு புறப்பட்ட ஊர்வலம் மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, டி.வி.எஸ்.வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

Next Story