search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவர் கோவில்
    X
    திருவள்ளூர் வீரராகவர் கோவில்

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 6-ந்தேதி தொடக்கம்

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 8-ந்தேதி கருட சேவையும், 12-ந்தேதி தேர் திருவிழாவும், 14-ந்தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
    திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரமோற்சவ விழா வருகிற 6-ந் தேதி காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழா அன்று உற்சவர் வீரராகவர் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் மே மாதம் 8-ந் தேதி கருட சேவையும், 7-ம் நாள் 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், 9-வது நாள் 14-ந் தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    2019-ம் ஆண்டு தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதையடுத்து தேரை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×