என் மலர்

  முக்கிய விரதங்கள்

  சிவலிங்கம் வழிபாடு
  X
  சிவலிங்கம் வழிபாடு

  இன்று சிவபெருமானுக்கு விரதம் அனுஷ்டித்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ நாளான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!
  சித்திரை மாத பிரதோஷம் இன்று. வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம் ரொம்பவே மகிமை மிக்கது. மாங்கல்ய தோஷம் முதலான சகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ நாளில், பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்குங்கள். நம்மையும் நம் இல்லத்தாரையும் இனிதே வாழச் செய்வார் சிவனார்!

  குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!

  மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவபெருமானை வேண்டுவதும் ருத்ரம் உள்ளிட்டவற்றைப் பாராயணம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அந்த நாளில்,நம்மால் முடிந்த அளவு, பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்கினால், நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நல்லதுகளை, சத்விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

  இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் கல்வி பெருகும். செல்வம் வளரும், நோய்கள் விலகும், கடன், மனக்கவலை அகலும். ஒரு பிரதோஷ பூஜை ஆயிரம் சிவபூஜை செய்தமைக்கு சமம். ஆகவே பலன்களும் அதிகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால், அளவற்ற நன்மைகள் அடையலாம்.
  Next Story
  ×