என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவில்
    X
    நெல்லையப்பர் கோவில்

    நெல்லையப்பர் கோவிலில் அப்பர் சதய விழா

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் அப்பர் சதய விழா நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற வசந்த உற்சவ திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 11 நாட்கள் வசந்த உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த திருவிழா முடிவடைய உள்ள நிலையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று அப்பர் சதய திருவிழா நிகழ்வு நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் சதய நட்சத்திர நாளில் இந்த அப்பர் சதய விழா நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று கோவில் பிரகாரத்தில் கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணிக்கு அப்பர் சுவாமிகள் வெள்ளி சப்பரத்தில் வீதிஉலா வருவார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபடுவார்கள். அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் அருகே ஐக்கியமாகும் நிகழ்வு நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×