என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.
தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.
ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.
உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.
எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.
நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.
வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.
சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் கிடைக்கும்.
குழந்தைகளை சூரிய உதய காலத்தில் நீராடச் செய்து, அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக் குறி (திருநீறு அல்லது திருமண்) இடச் செய்து, மூன்று முறை திரியம்பகம் - மாம்ருதாத் மந்திரத்தைச் சொல்லச் சொல்லி, பிறகு துளசி தீர்த்தத்தைப் பருகக் கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக... ஸ்ரீஞானசரஸ்வதி மற்றும் ஸ்ரீயாக்ஞவல்கியரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, பூஜையறையில் கிழக்குமுகமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் 'ஸ்ரீவித்யா கணபதயே நம’ என்று மூன்று முறைச் சொல்லி அருகம்புல் சமர்ப்பித்து பிள்ளையாரை வழிபட வேண்டும்.
பின்னர் கலைவாணி குறித்த துதிப்பாடல்கள் சொல்லி வழிபடுவதுடன், 'ஸ்ரீயாக்ஞவல்கியர் வித்யா துதி’யையும், மூன்று முறைச் சொல்லி வணங்கவேண்டும். பிறகு, தூப-தீப காட்டி, தேங்காய் - பழம் தாம்பூலம் மற்றும் பால் சாதம் சமர்ப்பித்து, மீண்டும் கற்பூர ஆரத்தி காட்டவேன்டும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.
ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.
ஸ்துதி
ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:
விஸர்க்க பிந்து மாத்ரேஷ§ யததிஷ்டான மேவஹா
ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:
வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே
கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:
ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:
க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்
யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே
(ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)
பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும்,
கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேரட்டும்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 14-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்தஆண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பின்னர் கொடியேற்றப்பட்டது.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங் காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி சிம்மவாகனம், அனுமார் வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
வருகிற 10-ந்தேதி அன்று வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்க தோளுக்கினியாள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14-ந்தேதி காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.50 மணி முதல் 5.25 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
15-ந்தேதி புஷ்பயாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தான எழுந்தருளல் நிகழ்ச்சியும் மறுநாள் பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் மழையால் சேதமடைந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் கடந்த 7 மாதங்களாக சீரமைப்பு பணி நடைபெற்றது. ரூ.3.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை திறக்கப்பட்டது.
திருப்பதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புயல் சின்னம் ஆந்திராவில் கரை கடந்தது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
பலத்த மழையினால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்தது. பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதனால் பக்தர்கள் நடைபாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு மலை பாதை சீரமைக்கும் பணி நடந்தது. முதலில் அலிபிரி நடைபாதை திறக்கப்பட்டது.
நடைபாதையில் கடந்த 7 மாதங்களாக சீரமைப்பு பணி நடைபெற்றது. ரூ.3.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை நேற்று திறக்கப்பட்டது.
ஏற்கனவே அலிபிரி நடைபாதை பயன்பாட்டில் உள்ளது. ஸ்ரீவாரி மெட்டுபாதை திறக்கப்பட்டதால் கூடுதலாக நடைபாதை பக்தர்கள் வரும் வசதி ஏற்பட்டுள்ளது. நேற்று இந்த பாதையில் 5 ஆயிரம் பக்தர்கள் சென்றனர்.
திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து சந்திரகிரி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வரை செல்ல திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபாதையாக தரிசனத்திற்கு வர விருப்பமுள்ள பக்தர்கள் இலவச பஸ்சில் சந்திரகிரி வரை சென்று அங்கிருந்து ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3.91 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதியில் நேற்று 59,528 பேர் தரிசனம் செய்தனர். 29,995 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.91 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

தாயுமான சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் உச்சிபிள்ளையாருக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை கடக லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. இரவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
வருகிற 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
வருகிற 12-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கில் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம் நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
14-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. இரவில் கொடியிறக்கம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மூலவர்: வடபத்ரசாயி, ரெங்கமன்னார்
தாயார்:ஆண்டாள், கோதைநாச்சி
தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடி தீர்த்தம்
* ரெங்கமன்னார் இங்கு சுயம்புவாக இருக்கிறார். வலது கையில் தற்காப்பு கோல், இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் செருப்பு அணிந்து ராஜகோலத்தில் அருள்கிறார்.
* ஆண்டாளின் அவதாரத் தலம் இது. ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் மகளாக இத்தலத்தில் ஆண்டாள் அவதரித்தார்.
* புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவத்திற்கு, ஆண்டாள் மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அனுப்பப்படும்.
* ஆண்டாள் திருக்கல்யாணத்திற்கு, திருப்பதியில் இருந்து பட்டுப்புடவை கொண்டுவரப்படும்.
* மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவார்.
* மார்கழியில் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு ஆண்டாள் செல்வார். அப்போது கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் சேர்த்து திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியம் படைக்கப்படும்.
* விருதுநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகாசியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, ஸ்ரீவில்லிபுத்தூர்.
உற்சவங்கள்
10 நாட்கள் ஆடிப்பூரம், புரட்டாசியில் பெரிய பெருமாள் உற்சவம் 10 நாட்கள், பங்குனியில் 10 நாள் திருக்கல்யாண உற்சவம், மார்கழியில் எண்ணெய் காப்பு, கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
108 கம்பளி
கார்த்திகை மாதம் வரும் கவுசிக ஏகாதசி அன்று, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடன் ஆகியோருக்கு 108 கம்பளிகள் போர்த்தப்படுகிறது. குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கின்றனர்.
தட்டொளி
அந்தக் காலத்தில் கண்ணாடியை ‘தட்டொளி’ என்று அழைத்துள்ளனர். ஆண்டாள் சன்னிதிக்கு எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி உள்ளது. இதில்தான் ஆண்டாள், தன்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டாராம்.
மஞ்சள் கயிறு
திருமணம் ஆகாத பெண்கள், இங்குள்ள கண்ணாடி தீர்த்த கிணற்றை சுற்றி வந்து, ஆண்டாளை வணங்கி வழிபடுகிறார்கள். அவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த வழிபாட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழாவில் வருகிற 9-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடிமரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நான்கு வீதிகளில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இதில், தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோவில் திருவிழா வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
விழாவையொட்டி, வருகிற 9-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களை சேர்ந்த சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் எழுந்தருளி சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் வருகிறார்.
அதைத்தொடர்ந்து 16-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறுகிறது.
மறுநாள் 17-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடி கொடியை பவனியாக எடுத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை திருத்தல அதிபர் தேவசகாயராஜ் கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மலர் தூவி வழிபட்டனர். தொடர்ந்து பாத்திமா அன்னை ஆலய பங்குதந்தை பால்ராஜ் குமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
பெருவிழாவையொட்டி வருகிற 12-ந்தேதி வரை சிறிய தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உடையவர் சன்னதியில் நடைபெற்று வந்த ஸ்ரீமத் ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர பெருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) இயற்பாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உடையவர் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர பெருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. ராமானுஜரின் 1,005-வது திருநட்சத்திர தினமான நேற்று காலை 4 சித்திரை வீதிகளில் உற்சவர் ராமானுஜர் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுளினார்.
மதியம் 1 மணியளவில் பெருமாளிடம் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோஷ்டி நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று(வெள்ளிக்கிழமை) இயற்பாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு ஆழித்தேரோட்ட விழா கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி நடைபெற்றது. இதனுடன் மற்றொரு சிறப்பம்சமாக தெப்பத்திருவிழா நடைபெறும்.
தியாகராஜர் கோவில் எதிரே உள்ள கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும். குளமே ஆலயமாக போற்றப்படும் கமலாலய குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது.
இந்த குளத்தில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 8 மணிக்கு தொடங்கி 3 முறை குளத்தை தெப்பம் வலம் வரும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடியும், உயரம் 18 அடியும் உடையதாகும். இதில் 800 பேர் வரை அமர முடியும். விழாவையொட்டி தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி குளக்கரையில் காலி பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த பேரலில் காற்று நிரப்பி முதலில் நன்றாக சோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மரப்பலகையுடன் காற்று நிரப்பிய பேரல்களை கட்டி, அவற்றை குளத்தில் மிதக்க விட்டு, அதன் மீது பிரமாண்டமான தெப்பம் கட்டப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி மீது மங்கள வாத்தியங்கள் முழங்க பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.
முதல் நாள் விழாவான நேற்று இரவு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள மகிழ மரம் அருகில் பன்னீர் மண்டபத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அப்போது சாமி மீது மங்கள வாத்தியங்கள் முழங்க பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
வெள்ளிக்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு சுத்தமான உடையை உடுத்தி நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதையெல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்திரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும்.
படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காமல், சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு செம்பு வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வெச்சு, சுற்றிலும் மாவிலையைச் சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் எல்லாவற்றையும் கலசத்துக்கு முன்பு வையுங்கள்.
மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிறகு படம், யந்திரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூ, மாலை போடவும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும். பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும் எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப் படவேண்டாம். மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும்.
பின்பு தூப, தீபம் காட்டி வாழைப்பழம், பசும் பால், பாயாசம் என்று உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும் தட்சணை பணத்தை ஏழைகளுக்கும் கொடுக்கவும்.
நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.