என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன்பாக, அஷ்டபுஜ காளி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இருக்கிறது, திருவலஞ்சுழி என்னும் ஊர். இங்கு சுவேத விநாயகர் எனப்படும் வெள்ளை விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் வடக்குப் பகுதியில் அம்மன் சன்னிதி ஒன்று உள்ளது.
சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன்பாக, இந்த அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அம்மனின் முன்பாக வாள், ஈட்டி, கேடயம் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் அனைத்தையும் வைத்து பூஜை நடத்தி, அம்மனின் உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் புகுந்துள்ளனர். அப்போது அவர்களின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை சோழர்களிடம் நிலவியிருக்கிறது.
இந்த அன்னை ‘ஏகவீரி’ என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு ‘அஷ்டபுஜ காளி’ என்று பெயர் மாற்றம் பெற்று கோவிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள். தற்போது இந்த ஆலயத்திற்கு வரும் பலரும், இந்த அன்னையை கோவிலில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் என்ற வகையிலேயே பார்த்து வணங்கிச் செல்கின்றனர். ஆனால் இந்த அன்னை, அந்த காலத்தில் எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கிறாள் என்பது, அங்குள்ள கல்வெட்டுகளுக்கு மட்டுமே தெரியும். இந்த அன்னையின் புன்னகைக்கு ஈடாக எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு இந்த அஷ்டபுஜ காளியின் சிரிப்பு சிறப்பு வாய்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கும் தங்கச்சிமடம் என்ற ஊரில் ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கிறது, தங்கச்சிமடம் என்ற ஊர். ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது. இங்கே திரயம்பகேஸ்வரர் என்ற பெயரில் சிவன் சன்னிதி அமைந்திருக்கிறது.
இந்த இடத்தில் கடலுக்குள் அமைந்திருக்கும் வில்லூன்றி தீர்த்தம் என்னும் இந்த புனித நீரூற்று, பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது. சீதையை சிறைபிடித்துச் சென்ற ராவணனுடன் போரிட்டார், ராமபிரான். போரின் முடிவில் ராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு, இந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. உடனே ராமபிரான், தன்னுடைய கையில் இருந்த வில் ஒன்றை கடலின் ஒரு பகுதியில் ஊன்றினார். அதில் இருந்து நன்னீர் வெளிப்பட்டது.
அதை அருந்தி தாகத்தைத் தணித்தார், சீதாதேவி. ராமாயணக் காலத்தில் தோன்றிய அந்த புனித நீரூற்றுதான், ‘வில்லூன்றி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்தம், கிணறு வடிவில் கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரம் கடலுக்குள் அமைந்திருக்கிறது. இதனை சென்றடைய நீண்ட பாலம் ஒன்று, கிணறோடு முடியும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

புராணங்களில் சொல்லப்படும் ‘காலராத்திரி’ என்பதைத்தான் இங்கே காலதேவியாக, பெண் வடிவில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது, சிலார்பட்டி. இங்கு காலத்தின் அதிபதியாக, நேரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அம்மனுக்கு தனிக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் மூலவராக ‘காலதேவி அம்மன்’ வீற்றிருக்கிறார். இந்த ஆலயத்தின் கோபுரத்தில், ‘நேரமே உலகம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
புராணங்களில் சொல்லப்படும் ‘காலராத்திரி’ என்பதைத்தான் இங்கே காலதேவியாக, பெண் வடிவில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்த காலதேவியின் இயக்கத்தில்தான் பிரபஞ்சம் முழுவதும் இயங்குவதாகவும், படைத்தல், காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி இந்த காலதேவிக்கு உண்டு.

மறவபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மாமன், மைத்துனர் உறவுமுறை நீடிக்க இதுபோல் துடைப்பத்தால் ஒருவரையொருவர் அடித்து கொள்வது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி அம்மன் சிலையை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக சாம்பல் அடித்து கொள்ளுதல், துடைப்பத்தால் அடித்தல் ஆகியவை கோவில் முன்பு நடைபெற்றது. மாமன், மைத்துனர் உறவுமுறை நீடிக்க இதுபோல் துடைப்பத்தால் ஒருவரையொருவர் அடித்து கொள்வது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
மாமன்மைத்துனர் உறவு கொண்டவர்கள் கோவில் முன்பு சகதியில் புரண்டு எழுந்தனர். நீண்ட கயிறுகளால் தங்களை இணைத்துக்கொண்டு துடைப்பத்தை சகதியில் நனைத்து ஒருவரையொருவர் அடித்து கொண்டனர். பின்னர் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி சென்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கோவில் திருவிழாவில் சகதியில் நனைத்து துடைப்பத்தால் மாமன் மற்றும் மைத்துனரை அடித்து கொள்ளும் நிகழ்வு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் குடும்பத்தில் சந்தோசம் நிலவும், மேலும் பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் இணையும் என நம்பப்படுகிறது.
இதன்மூலம் நட்பு மற்றும் உறவு நீண்ட காலமாக ஒற்றுமையாக இருந்து வருகிறது என்றனர்.

வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11-ம் இடங்கள் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும், கேதுவோடு சம்பந்தப்பட்டாலும், இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த பெண் சாபம், தோஷமாகி பரம் பரையாகத் தொடரும்.
பரிகாரங்கள்
வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். கடுமையான பெண் சாபத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள் சுவாசினிகள் பூஜை செய்ய வேண்டும் அல்லது கோ பூஜை செய்ய வேண்டும்.
வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
ஒரு சில குடும்பத்தில் அப்பா, அம்மா திருமணமான பிறகு பிரிந்திருப்பார்கள். அவர்கள் மகன் அல்லது மகளும் திருமணத்திற்கு பின் பிரிந்திருப்பார்கள். பெண் சாபம் பெற்றவர்களின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் அல்லது ஏழாம் அதிபதியோடு கேது சேர்க்கை பெற்றிருக்கும். பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பலமற்ற தன்மையில் இருக்கும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம் பெறாமல் இருப்பதும் முற்பிறவி சாபம்.
வம்சாவழியாக தலைமுறை தலைமுறையாக தொடரும் பெண் சாபத்தால் விருத்தி இல்லாத குடும்பத்தினர் செய்ய வேண்டிய பரிகாரம். மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பிற பெண்கள் அழாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதார பற்றாக் குறையால் திருமணம் செய்ய முடியாத ஏழைப் பெண்ணுக்கு மாங்கல்யத்திற்குப் பொன், புடவைக்கு பணஉதவி செய்யலாம். ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்ட பெண்களின் ஆசிகளைப் பெறச் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதை வருடத்திற்கு ஒருமுறையாவது செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். இந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு சுமங்கலிப் பெண்களை அல்லது சிறு பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு தாம்பூலம் வழங்கி அவர்களை மூதாதையர் ரூபமாக நினைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
அல்லது தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களின் படத்திற்கு முன்பு தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.
மேலும் புடவை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி, மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும். சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி இறந்த சுமங்கலியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும். பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.
இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும். படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை வீட்டுப் பெண்கள் பயன்படுத்தலாம் அல்லது தானம் தரலாம் அல்லது துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாடு தை மாதங்களில் செய்வது சிறப்பு.
சுமங்கலி தெய்வங்களை வழிபட்டால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

கள்ளழகர் அபரஞ்சி தங்கத்தினால் உருவானது. எத்தனை முறை பார்த்து வணங்கினாலும் மறுபடியும் பார்த்து வணங்க வைக்கும் அபூர்வமான பெருமாள் ஆகும்.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவில் மிகவும் பழமையும் பெருமையும் புகழும் பெற்றதாகும். இத்திருத்தலமானது பக்தர்களின் வேண்டிய வரங்களை வேண்டியபடி அருள்தரும் கள்ளழகர் பெருமாள் ஸ்தலமாகும்.
இக்கோவிலின் இராஜகோபுரமாக பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலாகும். சுமார் 112 அடி உயரம் கொண்டதாகும் இது. இங்குள்ள கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது மதுரை வண்டியூர் வந்து திரும்பும் வரை ஒவ்வொரு மண்டகபடிகளிலும் குவிந்துள்ள பக்தர்கள் மீண்டும் மீண்டும் அழகரை பார்த்து தரிசனம் செய்ய தூண்டும். இந்த கள்ளழகர் அபரஞ்சி தங்கத்தினால் உருவானது. எத்தனை முறை பார்த்து வணங்கினாலும் மறுபடியும் பார்த்து வணங்க வைக்கும் அபூர்வமான பெருமாள் ஆகும்.
இத்தனை சிறப்புடைய பெருமாளை மலையாள தேசத்தை சேர்ந்த ஒரு அரசன் அழகர்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவரது அழகில் மயங்கி எப்படியாவது அழகரை தனது நாட்டிற்கு கொண்டுபோய் வழிபட எண்ணினார். அதற்காக மந்திரத்தாலும், தந்திரத்தாலும் சிறந்து விளங்கிய 18 பேர்களை அனுப்பி கள்ளழகர் விக்கிரகத்தை எடுத்து வர கட்டளையிட்டார். வந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் சிலையை எடுத்துச்செல்ல முடியவில்லை. அதனால் அவர்களுக்கு துணையாக ஒரு தெய்வத்தை அனுப்பினார். ஆனால் சகல சாஸ்திரங்களை கற்ற நிபுணர்களான பட்டர்கள் பெருமாளின் அனுகிரகத்தால் முன்கூட்டியே இந்த சூழ்ச்சியை கண்டுபிடித்து விட்டார்கள். உடனடியாக வந்திருந்த 18 மாயாவிகளையும் பிடித்து கோவில் வாசலிலே உயிரோடு பூமியில் மூடிவிட்டனர்.
இவர்களுக்கு துணையாக வந்த தெய்வமும் தானும் கோபுர வாசலிலேயே இருக்க வேண்டி கேட்டுக் கொண்டது. அதன்படி அழகரின் அர்த்த ஷாம நிர்மால்ய நைவேத்தியங்கள் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதுவே அழகரின் காவல்தெய்வம் 18-ம் படி கருப்பணசுவாமி கோவிலாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. இங்கு 18 சித்தர் களின் சக்திகளும் நிலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அழகர்மலை உச்சியில் இராமதேவர் ஐக்கியமானதாக கூறப்படுகிறது. இவர் 18 சித்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

தமிழகத்தின் பழமை வாய்ந்த விழாக்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன
தமிழகத்தின் பழமை வாய்ந்த விழாக்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். சுமார் 1 லட்சம் பக்தர்கள் கண்டு மகிழும் இந்த திருநாள், மதுரையில் பழம் பெருமையை விளக்கும் விழாவாகும். இருசமயங்கள் தொடர்புடைய விழாவாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் விளங்குகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
துர்வாச முனிவரால் தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ் முனிவருக்கும் (மண்டுக முனிவர்) நாரைக்கும் சாபவிமோசனம் கொடுக்கவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டும் கள்ளழகராக மதுரை வரும் சுந்தர்ராஜ பெருமான் வைகை ஆற்றில் எழுந்தருளினார் என்பது கோவில் வரலாறு கூறும் தகவல்.
தன் தங்கையான மீனாட்சியின் திருமணத்தைக் சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. அதனால் இன்றளவும், சித்திரை மாதம் பிறந்ததுமே மதுரைக்காரர்களை மற்றவர்கள் கேட்கும் கேள்வி. மீனாட்சி திருக்கல்யாணம் எப்போது? அழகர் எப்போது ஆற்றில் இறங்குகிறார் என்பதுதான். இந்த கேள்விக்கான பெருமை திருமலை நாயக்கரையே சாரும்.

ஜூவாலா மாலினி நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.
இந்த நித்யா தேவி, நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில், நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜனை அகலமும், முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையை உருவாக்கியவள். அக்னியையே மாலையாக அணிந்தவள். இந்த அம்பிகையின் வித்யை, அறுபது அட்சரங்களைக் கொண்டது.
வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜூவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கி அருள்பாலிக்கிறாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும், முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சூழ்ந்துள்ளனர். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.
வழிபட வேண்டிய திதிகள்:-
வளர்பிறை சதுர்த்தசி, தேய்பிறை துவிதியை.
மந்திரம்:-
ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி அளிக்கும் வைபவம் மற்றும் புறப்பாடு 9-ந்தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
கொங்கேழு சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பூஜைகளுக்கு பின் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நாளை சூரிய சந்திர மண்டல காட்சிகள், 7-ந்தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் மற்றும் அன்னம் வாகன காட்சிகள், 8-ந்தேதி கைலாச வாகனம், புஷ்பக விமானம் காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி அளிக்கும் வைபவம் மற்றும் புறப்பாடு 9-ந்தேதி இரவு 7 மணி முதல் தொடங்கி நடக்கிறது. 10ந்தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவம் வெள்ளை யானை வாகன காட்சி நடக்கிறது.
11-ந் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 12, 13-ந்தேதி காலை 8 மணிக்கு பெரிய தேர் தேரோட்டம், 14-ந்தேதி அம்மன், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடக்கிறது. 15-ந்தேதி வண்டித்தாரை மற்றும் இரவு பரிவேட்டை நடக்கிறது.
16-ந்தேதி மாலை தெப்பத்தேர், 17-ந் தேதி ஸ்ரீநடராஜ பெருமானின் தரிசன காட்சியும் நடக்கிறது. 18-ந்தேதி மஞ்சள் நீர் விழா, இரவு மயில்வாகனம் காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.
பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று முதல் வருகிற 8-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 9- ந்தேதி முதல் 13-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி பின் மாலை 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
பூச்சாற்று உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 13-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
* நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்
* தானம் கொடுப்பதை தடுப்பது பாவம்
* மனம் ஒத்த நட்பிற்கு வஞ்சகம் விளைவிப்பது பாவம்
* பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம்
* கோள் சொல்லி குடும்பத்தைக் கலைப்பது பாவம்
* குருவை வணங்காமல் கூசி நிற்பது பாவம்
* தவம் செய்வோரைத் தாழ்ந்து பேசுவது பாவம்
* தாய்-தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்

பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.
பஞ்சமி திதி என்பது வராஹியை விரதம் இருந்து வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில்
வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹிதேவி.
சப்தமாதர்களில் வராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும், விரதம் இருந்து இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும்
வளர்பிறை பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய… சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வராஹி தேவி.
வராஹி தேவியின் திருநாமங்கள் 1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வராஹி 7. போத்ரிணி 8. சிவா
9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி.
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான
செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது.