என் மலர்
வழிபாடு

துடைப்பத்தால் அடித்து கொள்ளும் வினோத திருவிழா
ஆண்டிப்பட்டி அருகே மாமன் மைத்துனர்கள் துடைப்பத்தால் அடித்து கொள்ளும் வினோத திருவிழா
மறவபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மாமன், மைத்துனர் உறவுமுறை நீடிக்க இதுபோல் துடைப்பத்தால் ஒருவரையொருவர் அடித்து கொள்வது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி அம்மன் சிலையை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக சாம்பல் அடித்து கொள்ளுதல், துடைப்பத்தால் அடித்தல் ஆகியவை கோவில் முன்பு நடைபெற்றது. மாமன், மைத்துனர் உறவுமுறை நீடிக்க இதுபோல் துடைப்பத்தால் ஒருவரையொருவர் அடித்து கொள்வது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
மாமன்மைத்துனர் உறவு கொண்டவர்கள் கோவில் முன்பு சகதியில் புரண்டு எழுந்தனர். நீண்ட கயிறுகளால் தங்களை இணைத்துக்கொண்டு துடைப்பத்தை சகதியில் நனைத்து ஒருவரையொருவர் அடித்து கொண்டனர். பின்னர் கோவில் முன்பு தரையில் விழுந்து அம்மனை வணங்கி சென்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கோவில் திருவிழாவில் சகதியில் நனைத்து துடைப்பத்தால் மாமன் மற்றும் மைத்துனரை அடித்து கொள்ளும் நிகழ்வு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் குடும்பத்தில் சந்தோசம் நிலவும், மேலும் பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் இணையும் என நம்பப்படுகிறது.
இதன்மூலம் நட்பு மற்றும் உறவு நீண்ட காலமாக ஒற்றுமையாக இருந்து வருகிறது என்றனர்.

Next Story