என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஏகவீரி
    X
    ஏகவீரி

    புன்னகை புரியும் போர்க்கால காளி

    சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன்பாக, அஷ்டபுஜ காளி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
    இருக்கிறது, திருவலஞ்சுழி என்னும் ஊர். இங்கு சுவேத விநாயகர் எனப்படும் வெள்ளை விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் வடக்குப் பகுதியில் அம்மன் சன்னிதி ஒன்று உள்ளது.

    சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன்பாக, இந்த அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அம்மனின் முன்பாக வாள், ஈட்டி, கேடயம் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் அனைத்தையும் வைத்து பூஜை நடத்தி, அம்மனின் உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் புகுந்துள்ளனர். அப்போது அவர்களின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை சோழர்களிடம் நிலவியிருக்கிறது.

    இந்த அன்னை ‘ஏகவீரி’ என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு ‘அஷ்டபுஜ காளி’ என்று பெயர் மாற்றம் பெற்று கோவிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள். தற்போது இந்த ஆலயத்திற்கு வரும் பலரும், இந்த அன்னையை கோவிலில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் என்ற வகையிலேயே பார்த்து வணங்கிச் செல்கின்றனர். ஆனால் இந்த அன்னை, அந்த காலத்தில் எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கிறாள் என்பது, அங்குள்ள கல்வெட்டுகளுக்கு மட்டுமே தெரியும். இந்த அன்னையின் புன்னகைக்கு ஈடாக எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு இந்த அஷ்டபுஜ காளியின் சிரிப்பு சிறப்பு வாய்ந்தது.
    Next Story
    ×