என் மலர்tooltip icon

    வழிபாடு

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    X
    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி அளிக்கும் வைபவம் மற்றும் புறப்பாடு 9-ந்தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
    கொங்கேழு சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் பூஜைகளுக்கு பின் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி நாளை சூரிய சந்திர மண்டல காட்சிகள், 7-ந்தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் மற்றும் அன்னம் வாகன காட்சிகள், 8-ந்தேதி கைலாச வாகனம், புஷ்பக விமானம் காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி அளிக்கும் வைபவம் மற்றும் புறப்பாடு 9-ந்தேதி இரவு 7 மணி முதல் தொடங்கி நடக்கிறது. 10ந்தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவம் வெள்ளை யானை வாகன காட்சி நடக்கிறது.

    11-ந் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 12, 13-ந்தேதி காலை 8 மணிக்கு பெரிய தேர் தேரோட்டம், 14-ந்தேதி அம்மன், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடக்கிறது. 15-ந்தேதி வண்டித்தாரை மற்றும் இரவு பரிவேட்டை நடக்கிறது.

    16-ந்தேதி மாலை தெப்பத்தேர், 17-ந் தேதி ஸ்ரீநடராஜ பெருமானின் தரிசன காட்சியும் நடக்கிறது. 18-ந்தேதி மஞ்சள் நீர் விழா, இரவு மயில்வாகனம் காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×