search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஜூவாலா மாலினி
    X
    ஜூவாலா மாலினி

    துன்பங்களை போக்கும் ஜூவாலா மாலினி மந்திரம்

    ஜூவாலா மாலினி நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.
    இந்த நித்யா தேவி, நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில், நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜனை அகலமும், முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையை உருவாக்கியவள். அக்னியையே மாலையாக அணிந்தவள். இந்த அம்பிகையின் வித்யை, அறுபது அட்சரங்களைக் கொண்டது.

    வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜூவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கி அருள்பாலிக்கிறாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும், முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சூழ்ந்துள்ளனர். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை சதுர்த்தசி, தேய்பிறை துவிதியை.

    மந்திரம்:-

    ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே

    மஹாஜ்வாலாயை தீமஹி

    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    Next Story
    ×