என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த உற்சவ நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார். 14-ந்தேதி(சனிக்கிழமை) அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.15-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வட காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்தருளி இரவு 12 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந்தேதி இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். 17-ந்தேதி இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழிக்கவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக் குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் புறப்பட்டனர்.
இன்று காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலைக் கோவிலில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்துள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நோய்தொற்று பரவல் தற்போது குறைந்ததை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரைமாத பிரம்மோற்சவ விழா முருகன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அப்போது முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனைகள் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இனை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில், அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகில், பத்திரகாளியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில் மற்றும் பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
கந்த சஷ்டி விரதத்தை ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் முத்தாரம்மன் சப்பர பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா,வில்லிசை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளையில் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பெருங் கொடை விழா கடந்த 1-ம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, 108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊர்வலம், கோலாட்டம், கரகாட்டம் கேரளா நடனங்கள், சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனியும் நடைபெற்றது.
மேலும் முத்தாரம்மன் சப்பர பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா,வில்லிசை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுவதை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்திருந்தனர்.
டேராடூன் :
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கேதார்நாத் கோவில், குளிர்காலத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி மூடப்பட்டது.
இந்தநிலையில், 6 மாதங்களுக்கு பிறகு நேற்று பக்தர்களுக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பிரார்த்தனை நடத்திய பிறகு காலை 6.25 மணிக்கு கோவிலின் பிரதான கதவு திறக்கப்பட்டது. ராணுவத்தின் இசைக்குழு, பக்தி பாடல்களை இசைத்தது.
அப்போது, சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்திருந்தனர். முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமியும் வந்திருந்தார். அவர் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல்-மந்திரி முன்னிலையில், உலக அமைதி மற்றும் வளமையை வேண்டி, பிரதமர் மோடி சார்பில் ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.
இதுபோல், ‘சார் தாம்’ யாத்திரைக்காக கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை கடந்த 3-ந்தேதி திறக்கப்பட்டது. மற்றொரு கோவிலான பத்ரிநாத் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.

குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!
என்ற மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் 11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும். ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள். நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத் தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி. குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறி விடுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் கீழ் அமைந்த இந்த சிவலிங்கம், ஒரு நாளில் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு மாறுகிறது.
இந்த அதிசய நிகழ்வு, வருடத்தில் அனைத்து நாட்களும் நடைபெறுவதுதான் கூடுதல் சிறப்பு. காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறி விடுகிறது. மறுநாள் காலை சிவலிங்கம் மீண்டும் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே இந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அடி முடி காண முடியாதவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் விதமாக, இந்த சிவலிங்கம், ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்கு கீழே புதையுண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் பூலோகத்தில் கால் பதித்த ஒரே இடம் இதுதான் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு, மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும் என்பதும் பெரும்பாலானவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கோவிலுக்கு செல்ல கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வைகாசி மாத பூஜையிலும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
இது தவிர ஒவ்வொரு தமிழ்மாத முதல் நாளிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
14-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மறுநாள் 15-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அன்று முதல் 19-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கலாம்.
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கோவிலுக்கு செல்ல கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வைகாசி மாத பூஜையிலும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வைகாசி மாத பூஜைகள் முடிந்த பின்பு ஜூன் மாதம் 8-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
கோவில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறும். இதற்காக ஜூன் 8 மற்றும் 9-ந்தேதிகளில் கோவில் நடை திறந்து இருக்கும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வருகிற 8-ந்தேதி கருட சேவையும், 12-ந்தேதி தேர் திருவிழாவும், 14-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரமோற்சவ விழா இன்று காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் வீரராகவர் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான வருகிற 8-ந்தேதி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், 14-ந்தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தானம் சார்பில் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்...வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி சொல்லுங்கள்

வெள்ளிக்கிழமை தினத்தில் மனம் முழுக்க அலைமகளை நினைத்து துதியைச் சொல்லி வழிபடுங்கள். பொன்மகள் அருளால் உங்கள் வாழ்வில் இன்று முதல் புத்துணர்ச்சியும் குதூகலமும் பிறக்கும்.
லெட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். மகாவிஷ்ணு கூட லட்சுமியை துதிகளால் போற்றுவதாகச் சொல்கிறது தேவி பாகவதம். வெள்ளிக்கிழமைகளில் தினத்தில் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
தேவேந்திரன், குபேரன், எமன், மனு உத்தானபாதன், துருவன், தட்சன், காச்யபர், வசிஷ்டர், மகாபாலி, சூரியன், புதன், வள்ளி ஆகியோர் லட்சுமி பூஜை செய்து பலன் பெற்றவர்கள். லட்சுமிதேவி எளிமையான பூஜையாலேயே சந்தோஷம் அடைபவள்.
தூய மனத்துடன் சுத்தமான உடை அணிந்து, சுத்தமான இடத்தில் திருவிளக்கேற்றி மனதார வணங்கினால் போதும், லட்சுமியின் கரம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் வீட்டினுள் லட்சுமிகரம் நிறையும்.