என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.
    தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகாரம், தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருவார்கள். இவர்களும் வாரத்தில் கோவில்கள் மூடப்படும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு்ள்ளது.

    மற்ற 4 நாட்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.

    குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று பவானி கூடுதுறைக்கு பரிகாரம் செய்ய குறைவானவர்களே வந்திருந்தனர். இதனால் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் வெறிச்சோடி கிடந்தது.
    விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
    ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வேளை மட்டும் உணவு அருந்துவது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, நீர், ஜூஸ், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.

    குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலை செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

    சந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதாகும். இந்த முறையின்படி அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவு கூட்டப்பட்டு, பவுர்ணமியில் முழு உணவாக உண்பது முறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று விரதத்தில் முடிவு பெறும்.
    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டு, 17-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2021-22-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்று, நடை அடைக்கப்பட்டது.

    மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 14-ந் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்றையதினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை கண்ட மன நிறைவோடு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    நடப்பு சீசனை முன்னிட்டு இறுதி நெய்யபிஷேகம் வழிபாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி இன்று (வியாழக்கிழமை) காலை சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இதையொட்டி பக்தர்கள் நேற்றுடன் தரிசனத்தை முடித்துக்கொண்டு மலை இறங்க தொடங்கினர். காட்டுப்பாதையும் இரவு அடைக்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் சபரிமலை சீசன் நிறைவாக பாரம்பரிய முறைப்படி சன்னிதானத்தில் இருந்து சரம் குத்திக்கு மாளிகப்புரத்தம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவையொட்டி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்தார். பின்னர் காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    அதைத்தொடர்ந்து பந்தளம் ராஜகுடும்ப வாரிசு சங்கர் வர்மா தலைமையில் மீண்டும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

    மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டு, 17-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும்.
    ஸ்ரீகணேஸாயநம:

     1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
     நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
          ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
     காமதஹம்கருணாகர லிங்கம்I
        ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
     புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
        ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

     எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

     4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
     பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
          தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

     தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    5: குங்குமசந்தனலேபித லிங்கம்
     பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
        ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

     குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

     6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
     பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
        தினகரகோடிப்ரபாகர லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

     7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
     ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
        அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

     8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
     ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
        பராத்பரம் பரமாத்மக லிங்கம்
     தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை  நமஸ்கரிக்கிறேன்.

    லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
    ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII
    மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன்,
    எவர் படிப்பாரோ... அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
    நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை மாத நிறைபுத்தரிசி பூஜை நேற்று காலை நடந்தது. அதன்படி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்யப்பட்டது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக நெற்கதிர் கட்டுகளை பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
    800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் திருக்கோவில், வீரபாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.
    திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சங்காணி என்ற ஊர். இங்கு ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், வீரபாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயம் கோள வட்டம், சதுர வட்டம் எனப்படும் ‘துவிதள விமான’த்தின் அமைப்பில் காட்சியளிக்கிறது. இந்த அமைப்பை மேலே இருந்து பார்த்தால், அறுங்கோண வடிவில் அழகாக இருக்கும்.

    இந்த ஆலயத்தில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சர்வ அலங்கார ரூபத்தில் காட்சியளிக்கிறார். இவரது வலது கரத்தில் ‘தன ஆகர்ஷண ரேகை’ உள்ளது. இதனால் பக்தர்கள், பொன்னோ, பொருளோ கொண்டு வந்து, பெருமாளின் வலது கரத்தில் வைத்து வழிபட்டு எடுத்துச் சென்று, வீட்டில் வைத்தால், அந்த பொருள் பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு

    இந்தக் கோவிலின் பெருமையைப் பற்றி அறிந்த, நாயக்க மன்னர் ஒருவர், இங்கு வந்து இறைவனை தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் ஒருவர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மன்னர் வருகிறார் என்பதால் அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் கண்டது. பெருமாளை வழிபடுவதற்காக மன்னர் வரும் நாள் நெருங்கிவிட்டது. கோவில் அர்ச்சகர் பரப்பாக செயல்பட்டார். மன்னர் வருவதற்கு முன்தினம் இரவு, ராக்கால பூஜையை முடித்து நடையை சாத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார். மறுநாள் அதிகாலையில் எழ முயன்றவருக்கு, அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. கடுமையான காய்ச்சல் காரணமாக அவரால் படுக்கையை விட்டு கொஞ்சம் கூட நகர முடியவில்லை.

    காய்ச்சலின் வீரியம் உடலை பாடாய் படுத்தினாலும், ‘மன்னர் வரும் வேளையில் பூஜை செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விட்டதே. மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேருமே’ என்ற கவலையே அர்ச்சகரை வருத்தியது. தன் மீது பழி வராதபடிக்கு தன்னை காத்தருளும்படி பெருமாளை வேண்டிக்கொண்டார். இரண்டாம் நாள்தான் படுக்கையை விட்டே, அர்ச்சகரால் எழ முடிந்தது. உடனடியாக உடலை சுத்தம் செய்து கொண்டு, கோவிலை நோக்கிச் சென்றார். அங்கு அவரைப் பார்த்த அனைவரும், ‘மன்னர் வந்த நேரத்தில் சிறப்பாக பூஜை செய்து அசத்திவிட்டீர்கள். அதுவும் நீங்கள் பாடிய பாசுரங்கள் அனைத்தும் மிகப் பிரமாதமாக இருந்தது’ என்று புகழ்ந்தனர். அர்ச்சகருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

    தன்னை புகழ்ந்தவர்களிடம், “என்ன சொல்கிறீர்கள்? இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், இன்றுதான் கோவிலுக்கு வருகிறேன்” என்றதும், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவர்கள் அனைவருக்கும் அப்போதுதான் ஒன்று புரிந்தது. அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருக்கு எந்த களங்கமும் வரக்கூடாது என்பதற்காக, பெருமாளே அர்ச்சகரின் உருவத்தில் வந்து, மன்னனுக்காக பூஜைகள் செய்ததோடு, தன்னைப் பற்றி தானே பாசுரங்களையும் பாடியிருக்கிறார். இதை நினைத்து அர்ச்சகர் உள்பட அனைவரும் மனமுருகிப்போயினர்.

    இந்த ஆலய பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு, குறைவில்லாத செல்வம் வந்துசேரும் என்பது ஐதீகம். மேலும், ஆணவம், மாயை, காமம், வெகுளித்தனம், மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். தங்களது கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

    இங்கு பெருமாளுக்கு அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி ராப்பத்து, பகற்பத்து சிறப்பான முறையில் நடைபெறும்.
    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள உள் தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், அகஸ்தியர், குங்கிலிங்கநாயனார், தாமிரபரணி, அஸ்திரதேவர் அஸ்திரதேவி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று நெல்லையப்பர் கோவிலில் உள்ள சவுந்தரிய சபா மண்டபத்தில் நடராஜரின் திருநடன காட்சி நடைபெற்றது. அப்போது நடராஜர் திருநடனம் ஆடும் வைபவமும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    வழக்கமாக தைப்பூச திருநாளையொட்டி சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் சந்திப்பிள்ளையார் கோவில் அருகே நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அம்மன் சன்னதி முன்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு சுவாமி, காந்திமதி அம்பாளுக்கு நடராஜருடன் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

    அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடராஜருக்கும் தீபாராதனையும், சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தைப்பூச திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 9 சுற்றுகள் சுற்றி வருவார்கள். இதற்காக வெளி தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு, சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் முககவசம் அணிந்து, அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்ட உற்சவம் நிறைவு பெற்றது. ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரைவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. தைத் தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் கடந்த 17-ந் தேதி நடைபெற வேண்டும்.

    தேரோட்டத்தின்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடையும்.

    ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தைத்தேரோட்டத்திற்கு பதிலாக நிலை தேர் உற்சவமாக நடைபெற்றது. உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று முன்தினம் சப்தாவரணம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.

    இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.30மணிக்கு ரெங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உலாவந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தைத்தேர் உற்சவம் நிறைவு பெற்றது.

    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற வழிபாட்டு தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் மூடப்பட்டது.

    இந்த நிலையில் 5 நாட்களுக்குப்பிறகு நேற்று வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகளின்படி மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர். 5 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி மூடப்பட்ட நாகூர் தர்கா 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி பேராலயத்தில் வழிபட மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதன்படி நாகூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவும் 5 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபட அனுமதிக்கப்பட்டனர். வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் நாகூர் சில்லடி கடற்கரை செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பங்குதந்தை தேவ.சகாயராஜ் தலைமையிலான குழுவினர் வரவேற்பளித்தனர். இதையடுத்து தேர்பவனியை பங்கு தந்தையர்கள், பாளையக்காரர் பொன் வீரசேகர வேலுசாமி கச்சிராயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேர் பவனியானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.

    இதில் மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் மற்றும் ஆலய ஊழியர்கள், விழாக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தேர்பவனி களையிழந்து காணப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்துகொள்வார். அதன்படி திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலரூபமான அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பகல் 11 மணி அளவில் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார்.

    ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார். தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார். அப்போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் அறிவொளிப்பூங்கா அருகே வரும் போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார்.

    இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
    ×