search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தவர்களை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு

    வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற வழிபாட்டு தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் மூடப்பட்டது.

    இந்த நிலையில் 5 நாட்களுக்குப்பிறகு நேற்று வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகளின்படி மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர். 5 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×