என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.
ஸ்துதி
ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:
விஸர்க்க பிந்து மாத்ரேஷ யததிஷ்டான மேவஹா
ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:
வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே
கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:
ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:
க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்
யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே
(ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)
செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேரட்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் 27-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி மாத திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதில் மாசி திருவிழா தான் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகப்பெருமான், முதல் மூவர், சந்திரசேகர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும்.
இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழா கொடியேற்றம் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது. இதையொட்டி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்தின் அருகே யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். காப்பு கட்டிய பட்டர் கொடிமரத்திற்கு பூஜை செய்தார்.
அதை தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கும், மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் சுவாமிகள் 2-ம் பிரகாரம் வலம் வந்தனர். இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 8.30 மணிக்கு சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றியுள்ள கொடிமரத்திற்கு சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல் மீனாட்சி சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வருவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாடு இருப்பதால் சித்திரை வீதிகளுக்கு பதில் சுவாமி நான்கு ஆடி வீதிகளை வலம் வருவர். அதை தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந் தேதி கொடியிறக்கப்பட்டு கணக்கு வாசித்தல் நடைபெற்றதும் திருவிழா நிறைவு பெறும். கொரோனா காரணமாக திருவிழா முழுவதும் கோவிலுக்குள் தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.

எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை.
திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.
முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.
இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டிய நாடார் கொடியற்றி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 31-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம், நடக்கிறது. பிப்ரவரி 1-ந் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் அதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி சப்பரம் உலா வருதல், இரவு 10 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடைபெறுகிறது.
2- ந் தேதி காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. மேலும், அதிக கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்ற தைப்பூச திருவிழா காலங்களிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வகையில் பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச திருவிழாவுக்கு பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க, கோவிலில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது. கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடிக்கிடந்தது.
ஆனாலும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்தனர். பக்தர்கள் கோவில் பகுதிக்கும், கடற்கரைக்கும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையும் மீறி பாதயாத்திரை பக்தர்கள் சாரைசாரையாக திருச்செந்தூரில் குவிந்தனர்.
இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் பக்தர்கள் சலை ஓரங்களிலும், காலியிடங்களிலும் தங்கியிருந்தனர். நேற்றுமுன்தினம் முதல் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால், கோவில் வளாகத்திலும், கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும், வார இறுதி நாட்களான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் தடை அமலுக்கு வந்துள்ளது.

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்.
அரச மரத்தின் அடியில், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை, பூச நட்சத்திரம் அன்று விரதம் இருந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், பணப் பற்றாக்குறை தீரும். செல்வ வளம் கொழிக்கும்.
பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்பு, சதுர்த்தி திதி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து கணபதியை வழிபாடு செய்வதால், செய்யும் காரியங்களில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் விலகும்.
சிவன்- பார்வதி ஆகியோருடன் விநாயகர் வீற்றிருக்கும் உருவத்தை ‘கஜமுக அனுக்கிரக மூர்த்தி’ என்பார்கள். பெற்றோருடன் விநாயகப்பெருமான் வீற்றிருக்கும் இந்தத் திருக்கோலத்தை வழிபடுவதால் பல சிறப்புகள் வந்துசேரும். விநாயகர் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘ஆனந்த புவனம்’ என்று பெயர்.
வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள். அதோடு ஏழை பெண்களுக்கு தானம் கொடுங்கள். அப்படிச் செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில், விரதம் இருந்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள சக்கரபாணி திருக்கோவிலில், சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அதே போல் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் குழலூதும் விநாயகர் காணப்படுகிறார். இதுபோன்ற வித்தியாசமான கோலத்தில் உள்ள விநாயகரை வழிபடும் போது, எதிர்பார்த்த காரியங்கள் எந்த இடையூறும் இன்றி நடந்தேறும் என்பது நம்பிக்கை.

வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-வது ஆண்டு தைப்பூச திருவிழாவில் ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி வடலூர் சத்தியஞானசபையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பல்லாக்கை கருங்குழி கிராமத்தை சேர்ந்த மீனவ சமூகத்தினர்கள் தங்களது தோளில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
மேட்டுக்குப்பத்துக்கு செல்லும் வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும், செங்கால் ஓடையில் நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களும், அதை தொடர்ந்து கருங்குழி கிராமத்தினரும் பூக்கள் பழங்கள் உடன் வரவேற்றனர்.
கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருவறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டுசெல்லப்பட்டது, அங்கு கிராம மக்கள் சார்பில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
பின்னர் வள்ளலார் சித்திபெற்ற திருஅறையினுள் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. மதியம் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதா க பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாகி அதிகாரி ராஜா சரவணகுமார் மற்றும் மேட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பழனியில் தைப்பூச திருவிழா தெப்பத்தேர் உற்சவத்துடன் இன்று நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினசரி வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 17-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 18-ந்தேதியும் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது. அதன்படி திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்டவை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. எனினும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் தைப்பூச திருவிழா தெப்பத்தேர் உற்சவத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. மேலும் இன்று முதல் 3 நாட்கள் தரிசன தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் படையெடுத்தனர். குறிப்பாக காரைக்குடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து பழனி வீதிகளில் நடந்து வந்தனர். பின்னர் அவர்கள் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நிறைவு நாளான இன்று இரவு 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
வால்பாறையில் உள்ள தூய இருதய தேவாலயத்தின் திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சிறப்பு ஜெபமாலை ஜெப வழிபாடு நடைபெற்றது. இதனைதொடர்ந்து தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் திரு உருவம் பொறித்த கொடியை தேவாலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் தேவாலயத்தின் பங்கு குரு மரியஜோசப் திருவிழாக் கொடியை மந்தரித்து ஏற்றி வைத்தார். பின்னர் பங்கு குருக்கள் மரியஜோசப், பினிட்டோ, டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது.

உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.
உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீயாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.
இன்று தொடங்கும் ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி சங்கர் வர்மா தலைமையில் திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2021-22-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட முதல் நாளன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மறுநாள் முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி அன்று புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை, ஜோதி தரிசனம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்றுடன் மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பந்தளம் அரச குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
மண்டல மகர விளக்கு சீசன் நிறைவடைந்ததை முன்னிட்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்வாக கோவில் சாவி மற்றும் பணக்கிழியை சங்கர் வர்மாவிடம், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஒப்படைத்தார். அதேபோல் கோவில் சாவி மற்றும் பணக்கிழியை அரச குடும்பம் சார்பில் சங்கர் வர்மா மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைத்த பிறகு பிரதான சம்பிரதாய சடங்குகள் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி சங்கர் வர்மா தலைமையில் திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம் சேரும். குபேரன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் சிலவற்றை இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம் சேரும். குபேரன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் சிலவற்றை இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
குபேரன் நிதி பெற்ற தலம்
மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோவில். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உப கோவிலாக திகழும் இந்த ஆலயம் பற்றி, திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடியுள்ளார். புண்ணியசேனன் என்பவன், ‘சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்’ என்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார். அதன்படியே தவம் செய்த புண்ணியசேனனுக்கு, நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆணவம் கொண்ட அவன், ஒருவரையும் மதிக்காமல் நடந்துகொண்டான். இதனால் அவனது ஒரு கண் பார்வையை பறித்தார், ஈசன். இதையடுத்து தவறை நினைத்து வருந்திய அவனுக்கு மீண்டும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் குபேரன் என்ற பெயரையும் சிவபெருமான் சூட்டினார்.
திருவானைக்காவல்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். தன்னிடம் இருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் இங்கு தவமியற்றினான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது, மகாலட்சுமியின் அருளால்தான் சாத்தியம்’ என்று சொல்லி மறைந்தார். இதையடுத்து குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இங்குள்ள குபேர லிங்கத்தை, சுக்ர ஓரையில் வெண் பட்டாடை சாத்தி வழிபாடு செய்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
தஞ்சபுரீஸ்வரர்
எல்லோருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் தரும் குபேரன், இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். அவனிடம் இருந்து அந்த நாட்டை பறித்துக் கொண்டான், ராவணன். இதனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் அனைத்தையும் இழந்து வடதிசை நோக்கி வந்து, சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். இங்கு சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள் புரிந்தார். இதனால் இந்த தலம் `சித்தி தரும் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
12 குபரேன் சிற்பம்
செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. இங்கு சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோவில் உள்ளது. இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடும் அருள்பாலிக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்துகின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட் புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
செல்வத்தை மீட்ட குபேரன்
ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்கிற நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடம் இருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்பு ஏற்படும். திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே உள்ளது, தேவபுரீஸ்வர் கோவில்.
குபேர மகாலட்சுமி
ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோவிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சன்னிதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
செல்வம் வழங்கும் ஆலயம்
சந்திரகுப்தன் என்பவன், தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது அலைந்தவன், கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோவிலுக்குள் புகுந்து நந்தியம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோவிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு, சந்திரகுப்தனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் இத்தலத்தில் தனிச் சன்னிதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.