என் மலர்

  ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

  வால்பாறையில் தூய இருதய தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  X
  வால்பாறையில் தூய இருதய தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  வால்பாறையில் தூய இருதய தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
  வால்பாறையில் உள்ள தூய இருதய தேவாலயத்தின் திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சிறப்பு ஜெபமாலை ஜெப வழிபாடு நடைபெற்றது. இதனைதொடர்ந்து தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் திரு உருவம் பொறித்த கொடியை தேவாலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.

  பின்னர் தேவாலயத்தின் பங்கு குரு மரியஜோசப் திருவிழாக் கொடியை மந்தரித்து ஏற்றி வைத்தார். பின்னர் பங்கு குருக்கள் மரியஜோசப், பினிட்டோ, டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

  26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது.

  Next Story
  ×