என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தான் ஏற்கனவே இருக்க, வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே, என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடை திறந்து, தெய்வானை அம்மனுடன் முத்துக்குமாரசுவாமி சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உட்பிரகாரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
    பழனியில் தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை கோவில் பணியாளர்கள் தூக்கி தொட்டியில் 3 முறை வலம் வந்தனர்.
    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை வலம் வருவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் 'அரோகரா' கோஷம் அதிர வைக்கும்.

    இந்த ஆண்டு தெப்ப உற்சவம், பக்தர்கள் இன்றி பெரியநாயகி அம்மன் கோவிலில் எளிமையாக நடந்தது. அதாவது கோவில் பிரகாரத்தில் உள்ள தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை பணியாளர்கள் தூக்கி வலம் வந்தனர். முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை உற்சவம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை, 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளிய சப்பரத்தை கோவில் பணியாளர்கள் தூக்கி தொட்டியில் 3 முறை வலம் வந்தனர். தொடர்ந்து தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், பொறியாளர்கள் குமார், பாலாஜி, கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.
    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாதம் உத்திர தினத்தன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளாகும்.

    இதையொட்டி தை உத்திரத் தினத்தன்று வருஷாபிஷேகம் நடக்கும். இந்த ஆண்டு மூலவர் பிரதிஷ்டை தினமான இன்று வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வருஷாபிஷேகம் நடைபெற்று விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை தொடர்ந்து கோவில் உட்பிர காரத்தில் சுவாமி குமரவிடங்க பெருமாள் தேவ சேனா அம்பாள் எழுந்திருப்பது நடைபெறுகிறது.

    மாலை 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம் நடக்கிறது இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்று இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின் நடை திருக்காப்பிடப்படுகிறது.

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் இன்று வருஷாபிஷேகம் விழாவையொட்டி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    நாளை (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    சென்னை :

    வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு தற்போது கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

    கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.2.56 கோடி செலவில் 34 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் வடபழனி முருகன் கோவிலில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. 20-ந்தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று 2-ம் கால மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நடந்தன. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். மேலும் நேற்று அஷ்ட பந்தன மருந்து இடிக்கும் வைபவம் நடைபெற்றது. பச்சை சுண்ணாம்புகல், கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய 8 பொருட்கள் சேர்த்து இடித்து அஷ்டபந்தன கலவை தயாரித்து சன்னதிகளின் பீடத்தில் சாத்தப்பட்டது.

    நேற்று மாலை தங்கமுலாம் பூசப்பட்ட 7 தங்ககலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. இன்று காலை 8.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 5-ம்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு 6-ம்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பரிவார யாகசாலை பூஜையும், 9 மணிக்கு பிரதான யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

    9.30 மணிக்கு யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    காலை 11 மணிக்கு அனைத்து பரிவாரங்களுடன் முருகனுக்கு மகாகும்பாபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முருகபெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.

    தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. யூடியூப் சேனல் மூலம் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் நேரடியாக காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரண் பிரசாத், வடபழனி உதவி கமி‌ஷனர் பாலமுருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் நாளை வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    கடந்த வாரம் தொடர்ந்து விழா நாட்கள் வந்ததால் 14-ந்தேதியில் இருந்து 18-ந் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலில் 19-ந் தேதியும், நேற்று முன்தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அரசு உத்தரவின் படி நேற்று முதல் மீண்டும் தொடர்ந்து 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுர வாசல்களும் மூடப்பட்டு அதன் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களும் மூடப்பட்டன. இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அஷ்ட லிங்கத்தை வழிபாடு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கோவில்களில் சாமிக்கு அனைத்துப் பூஜைகளும் நடந்தது.
    கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக அதிகமான பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் ரதவீதி சாலை மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று அரசின் உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவிலின் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரம், 3-ம் பிரகாரம் தீர்த்தக் கிணறுகளில் நீராட செல்லும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. அதுபோல் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வாசல் பகுதியில் நின்று தரிசனம் செய்து சென்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக நேற்று அதிகமான பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் ரதவீதி சாலை மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில், திருஉத்தரகோசமங்கை மங்கள நாதர் கோவில், திருவாடானை ஆதிெரத்தினேசுவரர் கோவில், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்றும் நாளையும் இந்த தரிசன தடை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். “ஜென்ம சனி” என்றால் என்ன என்பதை குறித்தும், அதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கு அறிந்தது கொள்ளலாம்.
    ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது “ஜென்ம லக்னம்” ஆகிய “ஒன்றாம்” வீட்டில் பெயர்ச்சி ஆவதை “ஜென்ம சனி” என்பார்கள். இந்த ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, உடல் மற்றும் மன ரீதியான அசதி போன்றவை ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    ஜென்ம சனி காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம லக்னத்திலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வார். ஜென்ம சனி நடைபெறும் காலத்தில் சனி பகவானால் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை சனி பகவானின் அருளால் அதிகம் பெறுவதற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, “அனுமன் சாலிசா” மற்றும் சனி பகவானுக்குரிய மூல மந்திரங்களை துதித்து வழிபடுவது நல்லது. புதன்கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபட்டு வர உடல்சார்ந்த துன்பங்கள் இக்காலங்களில் ஏற்படாமல் காக்கும்.

    கோவில்களுக்கு தீப எண்ணெயை தானமாக வழங்கி வரலாம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஒரு வேளை உணவு உண்ணாமல் சனி பகவானுக்கு விரதம் இருந்து,கோவிலுக்கு சென்று சனி பகவானின் விக்கிரகத்தின் அடியில் கருப்பு எள் கலந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இந்த சமயங்களில் சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது. துப்புரவு தொழிலாளிகள், கீழ்மட்ட நிலை பணியாளர்கள் போன்றோரிடம் மரியாதையுடன் நடந்து, அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லாசிகள் உங்களுக்கு கிடைக்க செய்யும்.
    50 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த யாகம் வருகிற 27-ந்தேதி வரை டி.வி.யில் ஒளிபரப்பப்படுகிறது.
    உலக நன்மைக்காகவும், மக்கள் சுபிட்சமாக வாழ ேவண்டியும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் 7 நாட்கள் ஸ்ரீயாகம் நடக்கிறது. இந்த ஸ்ரீயாகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது.

    அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் கோவிலின் பிரதான அர்ச்சகர் வேம்பள்ளி சீனிவாசன் தலைமையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீயாக நிகழ்ச்சிகள் தொடங்கியது. மதியம் 1 மணி வரை யாக சாலையில் சங்கல்பம், ஹோமங்கள், அக்னி பிரதிஷ்டை, நித்யபூர்ணாஹுதி, நைவேத்தியம், மகாமங்கள ஆரத்தி நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீயாகம் ஹோமங்கள், லகுபூர்ணாஹுதி, மகாநிவேதனம், மகாமங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பிறகு உற்சவர் பத்மாவதி தாயாரை கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

    ஸ்ரீயாகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, கோவில் உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

    அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் குடும்பத்தினர் சார்பில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு 34 கிராம் எடையிலான தங்க ஆரம் காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த ஆரத்தை பெற்ற அர்ச்சகர்கள் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அணிவித்தனர். ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.

    இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.
    கடவுளின் வாக்கே இவ்வுலகில் மனிதராக பிறந்து நம்மோடு வாழ்ந்ததால் அவரை ‘இறைமகன்’ என்று அழைக்கிறோம். தமது இறைத்தன்மையை இழக்காமல் மனிதராக தோன்றிய இயேசு, தம்மைப் பற்றி சீடர்களிடம் பேசிய நேரங்களில் ‘மானிட மகன்’ (மனுஷ குமாரன்) என்று குறிப்பிட்டார்.

    இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.

    அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.

    ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.

    இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.

    கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.

    தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.

    இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.

    நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.

    மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.

    இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.

    இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).

    மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.

    மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.

    இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.

     - டே. ஆக்னல் ஜோஸ், சென்னை. 
    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் ஏழைப்பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவில் செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வாய்மேடு பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் வல்லபகணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இக்கோவிலுக்கு ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் பரிகாரம் செய்வதற்கும், இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் கோவில் நடை சாத்தப்படும் என்பதால் நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்வதற்காகவும், எமனை தரிசனம் செய்வதற்காகவும் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து சாமியை வழிபட்டு சென்றனர்.
    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இருவேளையிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்த நிலையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கல இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. இதில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ×