search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
    X
    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் ஏழைப்பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவில் செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வாய்மேடு பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் வல்லபகணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    Next Story
    ×