என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    இந்நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் விஜய் சேதுபதிக்கு படம் இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அது இனிமேல் பண்ண முடியாது. அவரோட நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதை மாற்றப்பட வேண்டும் மற்றும் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது" என்று கூறினார்.

    • இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.


    'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் பாடல் காட்சிகளையும் மிகப்பிரமாண்டமாக இயக்குவார். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படத்திற்காக புதுமையான காட்சிகளை ஷங்கர் உருவாக்கியுள்ளதால் இத்தனை கோடிகள் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கி நடித்துள்ளார்.
    • இவர் பட்டங்களும் பதவிகளும் ஒரு நாள் மறக்கப்படுபவைதான் இதற்காக ஏன் இத்தனை சண்டைகள் என்று பேசினார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடம் ஏற்படும் பிரச்சினை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "இந்த போட்டியும் சண்டையும் ஒவ்வொரு காலமும் வந்திருக்கிறது. இதை நாம் ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டு, பார்வையாளர்களை தூண்டிவிட்டு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்குவது தமிழ் கலாசாரத்திற்கு அழகில்லை.


    திறமையானவர்களை போற்றுங்கள், திறமைசாலிகளை கொண்டாடுங்கள் அதோடு முடித்துக்கொள்வோம். என்றைக்கு இருந்தாலும் இந்த இடம் நிரந்தரம் இல்லை. பட்டங்களும் பதவிகளும் ஒரு நாள் மறக்கப்படுபவைதான். இதற்காக ஏன் இத்தனை சண்டைகள். இது உலகத்தின் முக்கிய பிரச்சினை இல்லை. மணிப்பூரில் இரண்டு பெண்களை அவமானப்படுத்தியது குறித்த கேள்வி உங்களிடம் இருந்து வரவில்லை. ஆனால் இது ஒரு கேள்வியாக கேட்கிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்" என்று பேசினார்.

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினியும் மோகன் லாலும் இடம்பெற்றிருந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் சூர்யா நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’.
    • இப்படம் தெலுங்கில் ‘சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது.

    கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இப்படத்தில் சூர்யா, அப்பா -மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர்களுக்கு ஜோடியாக சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை', 'அவ என்ன தேடி வந்த அஞ்சல' போன்ற பாடல்கள் நம்மை காதலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு ஹாரிஷ் ஜெயராஜின் இசை அமைந்திருக்கும்.


    இப்படத்தின் பாடல்களுக்கு இன்று வரை ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 500-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் காட்சியில் 'அஞ்சல' பாடலுக்கு பலர் இணைந்து நடனம் ஆடியது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.


    இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, உண்மையில் நீங்கள் எனக்கு ஒரு மாபெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளீர்கள் என்று கூறி, ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் சத்யராஜ் மகள் ஈடுபட்டுள்ளார்.
    • மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன.

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

    மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார்.

    அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். இந்த பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    நான் இந்த மாதம் இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறி னார்.

    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் 'ரத்தமாரே' பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    இந்நிலையில், 'ரத்தமாரே' பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.


    இந்நிலையில், 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.


    • விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இலியானா.
    • இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் இலியானா. இவர் 'கேடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 'நண்பன்' படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்த இலியானா 'இருக்கானா இடுப்பிருக்கானா' என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்தார்.


    சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, சமீபத்தில் என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டிருந்தார்.


    இலியானாவிற்கு திருமணமாகாத நிலையில் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை இலியான சமீபத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதிலும் ஒரு ட்விஸ்டாக அவரின் பெயர் மற்றும் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.


    இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து 'Koa Phoenix Dola' என பெயர் சூட்டியுள்ளதாகவும் "எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.


    • பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார்.
    • நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார்.

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் முதல் மதுரை மாவட்டத்தில் நடைபயணத்தை ஆரம்பித்தார்.

    செல்லும் வழியெங்கும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. புகார் பெட்டியுடன் செல்லும் அண்ணாமலை மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிவருகிறார்.

    மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் நெருங்கி வருபவர்களுடன் செல்பி எடுத்தும் கவர்ந்து வருகிறார். இந்த நடைபயணத்தின் போது, தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடிவரும் அண்ணாமலை அ.தி.மு.க. தலைவர்கள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.


    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பங்கேற்ற ரசிகர்கள்

    இந்தநிலையில் நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர்.

    அப்போது முனிச்சாலை பகுதி அருகே அண்ணாமலை வருகை தந்த போது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.

    விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அவரது ரசிகர்கள் இதில் பங்கேற்றது பா.ஜ.க.வினரிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இது அரசியல் விமர்சகர்கள் இடையே பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள இணையப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    • நடிகை சமந்தா சமீபத்தில் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார்.
    • அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


    நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.



    சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    சமந்தா பதிவு

    இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து சமந்தா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மயோசிட்டிஸ் சிகிச்சைக்கு ரூ.20 கோடியா? நான் அதில் சிறிய தொகையைதான் எனது சிகிச்சைக்காக செலவு செய்கிறேன். என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். ஆயிரக்கணக்கானோர் மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதுபோன்ற தகவல்களை பகிரும்போது பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    ×