என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல திட்டத்தை தொடங்கி வருகிறார்.
    • ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

    விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக விரைவில் மாற்றும் நோக்கத்தில் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களையும் நடிகர் விஜய் அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என அரசியல் கட்சிகளுக்கு நிகராக மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சில வாரங்களுக்கு முன்பு ஏழை மாணவ- மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தொகுதி வாரியாக தளபதி விஜய் பயிலகம் என்ற இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று தொடங்கியது. நாளை வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 350-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மக்கள் இயக்கத்தினருக்கும் ரசிகர்களுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யவும் விஜய் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் அந்த பட்டியலை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் இரவு பாடசாலை திட்டம் போல் ஏழைகள் வசதிக்காக இலவச சட்ட உதவி மையம் விஜய்யின் ஆலோசனைப்படி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி சிறப்பான முறையில் செய்து வருகிறோம். ஏழை மாணவ -மாணவிகள் கல்வி பயில இரவு நேர பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இலவச சட்ட உதவி மையம் மாவட்டம் தோறும் விரைவில் மக்கள் இயக்கம் மூலம் தொடங்க உள்ளோம். அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட் அருகில் இந்த மையத்தினை தொடங்குகிறோம். முதலில் மாவட்டம் வாரியாக தொடங்கி அடுத்த கட்டமாக தொகுதி வாரியாக இந்த சட்ட உதவி மையம் விரிவுபடுத்தப்படும். ஏழைகள் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த மையத்தின் மூலம் சட்ட ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லாலும் ரஜினியும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், இந்த காம்போவ பாக்கதான காத்திருக்கோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகை சமந்தா சமீபத்தில் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார்.
    • அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


    நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


    சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை சமந்தா மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    • இயக்குனர் சாந்தகுமார் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    'மெளனகுரு', 'மகாமுனி' படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கு இப்படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' தயாரிக்கிறது.


    இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரசவாதி போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ரசவாதி – The Alchemist' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.
    • நாளை வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது.

    புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே, மும்பை மத்திய திரைப்பட பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், தமிழ்நாடு முற்பாக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இணைந்து 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.


    விழாவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சங்கம் ஆதவன்தீட்சண்யா, எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் திரைப்பட குறிப்பு புத்தகத்தை அலையன்ஸ் பிரான்சே, இயக்குனர் லொரேன்ஜலிகு வெளியிட்டார். நாளை (6-ந்தேதி) வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது. 9 நாடுகளை சேர்ந்த படங்களுடன் 32 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழகம், புதுவையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளிகளின் இலக்கிய படைப்புகளும் இடம்பெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
    • இவர் உயர் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி வழங்கியுள்ளார்.

    திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.


    கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது இணைய பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் உயர் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வடுகபட்டி

    கவிஞர் வைரமுத்து

    கல்வி அறக்கட்டளையின் சார்பில்

    உயர் மதிப்பெண் பெற்ற

    ஏழை மாணவர்களுக்கு

    உயர்கல்வி நிதி வழங்கினேன்

    "போதையிலிருந்து

    இளைய தலைமுறையைக்

    காப்பதும் மீட்பதுமே

    கல்வியினும் தலையாயது" என்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.




    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.



    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.


    சந்திரமுகி 2 போஸ்டர்

    இந்நிலையில், 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மனதை மயக்கும் அழகியாக கங்கனா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





    • நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரத்தமாரே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    • நடிகை அதா சர்மா சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் சர்ச்சையை கிளப்பியதோடு வசூலையும் குவித்தது.

    சிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதா சர்மா. இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2' படத்திலும் நடித்திருந்தார்.


    சமீபத்தில் விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாமல் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகை அதா சர்மாவிற்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறியிருந்தார்.


    இந்நிலையில், நடிகை அதா சர்மா அவரது அடுத்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
    • இப்படம் பல மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.


    இந்நிலையில், 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.
    • இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.


    மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளரை சந்தித்த நடிகர் அருண் விஜய்யிடம் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.


    அதற்கு, "நல்ல விஷயம் தானே. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அவர் அறிவிக்கட்டும். அவர் வரும்போது நாம் வரவேற்போம்" என்றார். மேலும், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேட்டபோது, "நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். பொதுப்பணிகளும் இருக்கிறது. எதிர்காலத்தில் பார்ப்போம்" என்றார்.

    ×