என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    'மாமன்னன்' திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வசந்த பாலன் இப்படம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாமன்னன் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார். காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை, அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிபடுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்.


    வசந்த பாலன் பதிவு

    மாரியின் பரியேரும் பெருமாள் திரைப்படத்தில் பரியன் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம். அது போல இந்த திரைபடத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி, உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள் நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    'மாமன்னன்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.





    • பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா.
    • இவரது கணவர் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


    ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருவருடமே ஆன நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இதைத்தொடர்ந்து அரவிந்த் சேகரின் மரணம் குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில் இதற்கு விளக்கமளித்து நடிகை ஸ்ருதி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அரவிந்த்தோட இறப்பு செய்தி கேட்டு, நேரிலும் போனிலும் பலபேர் ஆறுதல் சொல்லியிருந்தீர்கள். எங்களுக்கு நிறைய பலம் கொடுத்தீர்கள் அதுக்கு ரொம்ப நன்றி. இதுமாதிரி கஷ்டமான நேரத்திலும் வீட்டுல் உள்ள எல்லா சடங்குகளை விட்டுவிட்டு இப்படி ஒரு வீடியோ ரெக்கார்டு பண்ணி போடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

    நிறைய யூடியூப் சேனல்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தேவையில்லாத தகவல்களை அதிகமா பரப்பி வருகிறார்கள். தெரியாமல் நீங்கள் போடும் விஷயங்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் காயப்படுகிறார்கள். அது மட்டும் பண்ணாதீர்கள். எல்லா யூடியூப் சேனல்களிடமும் இதை நான் கேட்டுக்கொள்கிறேன்.


    என் கணவர் மாரடைப்பினால் இறந்துவிட்டார். அதைத் தாண்டி நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். அவர் ஒரு பாடிபில்டர், டிரெய்னர், ஜிம்ல ஒர்க்அவுட் செய்யும் போது இறந்துவிட்டார், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் சிவில் இன்ஜினியர். பிட்னஸ் மேல் அவருக்கு ஆர்வம் அவ்வளவுதான்! இதற்கிடையில் எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம்" என உருக்கமாக பேசியுள்ளார்.


    • பல படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பேரரசு.
    • இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பேரரசு, திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது, "சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி சார் கேட்டு வாங்கியது இல்லை. தளபதி என்றால் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி . இது மிகப்பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இது விஜய் மற்றும் ரஜினி சாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? சில விஷயங்களை நாம் கடந்து போக வேண்டும்.


    சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அதில் நம்பர் ஒன் யார் என்று பேசலாம். சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அதை விஜய் சாரும் கேட்கவில்லை. ரஜினி சாரும் சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கும் சொந்தமில்லை என்று சொல்லியிருக்கிறார். பட்டம் என்பது விஷயமில்லை. யாரும் அடுத்த உலகநாயகன், அடுத்த நடிகையர் திலகம் என்று கூறுவது இல்லை. சூப்பர் ஸ்டார் என்பது அதுமாதிரியான ஒரு பட்டம் தான். அரசியலில் தான் வாரிசு என்றால் சினிமாவிலும் ஏன் பட்டத்தை வைத்து வாரிசு என்கிறீர்கள். பட்டத்தை பட்டமாக பாருங்கள்" என்று பேசினார். இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்தது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், மாளவிகா மோகனனின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கலான் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • சசிகுமார் இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் 'சுப்ரமணியபுரம்'.
    • இப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியானது.

    சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய், கஞ்சா கருப்பு ஆகியோர் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெய், "எல்லாருக்கும் மிக்க நன்றி. முதல் நாள் முதல் காட்சியை விட ரீ ரிலீஸுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. இத்தனை வருடத்திற்கு பிறகு இந்த படத்தின் மீது இவ்வளவு மரியாதை இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. சசிகுமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்று அவர் இல்லையென்றால் நான் இல்லை" என்று பேசினார்.

    மேலும், பேசிய சசிகுமார், "14 வருடங்களுக்கு முன்பு 'சுப்பிரமணியபுரம் ரிலீஸாகும் போது எங்களால் முதல் காட்சி பார்க்க முடியவில்லை. இன்று 8 மணி காட்சி கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.

    • மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கியவர் சாந்தகுமார்.
    • இவர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

    'மெளனகுரு', 'மகாமுனி' படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கு இப்படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' தயாரிக்கிறது.



    இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    • 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன்.
    • இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது,

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.



    இந்நிலையில் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் சேதுபதி கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார். 



    • நடிகர் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.


    பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.


    கிக் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




    • சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் 15 ஆண்டுகளை பிறகு இன்று மீண்டும் வெளியானது.
    • இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

    சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சுப்ரமணியபுரம்' படம் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. வடபழனி கமலா தியேட்டரில் இன்று காலை திரையிடப்பட்ட 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய் ஆகியோர் வந்தனர். அதன்பின்னர் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

    • கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
    • இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், மொன்மாலை பொழுது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த நிகழ்வால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.



    • மாரி செல்வராஜ் இயக்கியிருந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே நெஞ்சமே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற 'நெஞ்சமே நெஞ்சமே' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில் விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.



    • நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலையில் தனது மனைவியுடன்கிரிவலம் சென்றார்.
    • அருண் விஜயுடன் ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.



    மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ராஜகோபுரம் முன்பு அண்ணாமலையாரை, வணங்கி திருக்கோயில் ஒட்டிய 14 கிலோமீட்டர் மலையைச் சுற்றி நேற்று (ஆகஸ்ட் 3) நள்ளிரவு தனது ரசிகர்கள் பட்டாளத்துடன் கிரிவலம் வந்தார்.

    மேலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்திற்கு நெய்விளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து இடுக்கு பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். கிரிவலம் சென்ற நடிகர் அருண் விஜயுடன் ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    ×