ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் அர்ஜுன் தாஸ் படக்குழு

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கியவர் சாந்தகுமார்.இவர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் அர்ஜுன் தாஸ் படக்குழு
Published on

'மெளனகுரு', 'மகாமுனி' படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கு இப்படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' தயாரிக்கிறது.

இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com