search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது.. மாமன்னனை பாராட்டிய வசந்த பாலன்
    X

    மாரி செல்வராஜ்- வசந்த பாலன்

    நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது.. மாமன்னனை பாராட்டிய வசந்த பாலன்

    • 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    'மாமன்னன்' திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வசந்த பாலன் இப்படம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாமன்னன் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார். காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை, அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிபடுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்.


    வசந்த பாலன் பதிவு

    மாரியின் பரியேரும் பெருமாள் திரைப்படத்தில் பரியன் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம். அது போல இந்த திரைபடத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி, உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள் நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    'மாமன்னன்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.





    Next Story
    ×