என் மலர்
சினிமா செய்திகள்
- பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா.
- இவர் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
- பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.
திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது, இவர் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்குகிறார்.

மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் இணைந்துள்ளார். மேலும், யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் அஜயன் பாலா, "மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
இயக்குனர் அஜயன் பாலா 'சித்திரம் பேசுதடி', 'பள்ளிக்கூடம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'மனிதன்', 'சென்னையில் ஒரு நாள்', 'லக்ஷ்மி', 'தலைவி', உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பீட்சா 3’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவானது. இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கினார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

பீட்சா 3
இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'பீட்சா' திரைப்பட வரிசையில் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி, இப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 'பீட்சா' நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்று கூறினார்.
- நடிகர் பிரபு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
- அப்போது வட மாநிலத்தில் தமிழ் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினார்.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான பிரபு முன்னணி நடிகர்களான விஜய், அஜித் என பலருடன் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, "தென்னிந்திய படங்களை வட மாநில மக்கள் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு பெரிய மவுசு உண்டு. நான் டெல்லி, மும்பை செல்லும்போது, 'தாதா ஜி வி லவ் தமிழ் பிக்சர்ஸ்' என கூறுகின்றனர். தமிழ் படங்களுக்கு அங்கே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது" என்று கூறினார்.

விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, "நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். சமூகத்துக்கு அவர் எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவர் வருவது மகிழ்ச்சி" என்றார்.
மேலும் அவரிடம், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்களே? என்று கேட்டதற்கு, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். தேவர் மகன் படம் பார்த்தீர்கள். அதில் தேவர் போனதுக்கு பிறகு அந்த இடத்தில் சின்ன தேவர் வந்து உட்காருகிறார். தம்பி அஜித்தும் இருக்கிறார். வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்" என்று கூறினார்.
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்
இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாரர் டைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Welcome to the Darkness!
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) August 3, 2023
Presenting the first look of #DemonteColony2 a Pulse-pounding horror thriller on the way to cinemas soon.#VengeanceOfTheUnholy#DarknessWillRule#2023WillBeDark @BTGUniversal #BobbyBalachandran @arulnithitamil @priya_Bshankar @SamCSmusic @ManojBeno… pic.twitter.com/UhpIk93PYL
- இயக்குனர் எம்.ஜே.இளன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தின் கதாநாயகனாக புகழ் நடிக்கிறார்.
இயக்குனர் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'துடிக்கிறது மீசை'. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் புகழ், முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குனர் பேரரசு, மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

'துடிக்கிறது மீசை' படத்தைப் பற்றி இயக்குனர் எம்.ஜே. இளன் பேசியதாவது, "படத்தின் கதை என்னவென்றால், காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்த கதை பேசுகிறது. இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்த கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரஸ்சியமாகக் கூறவிருக்கிறோம்.

இன்றைய சினிமாவின் ஆரோக்கியமான விஷயமாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இன்று எத்தனை பெரிய நட்சத்திரங்கள் நடித்தாலும் அவை வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான, என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் புகழ்பெற்ற வசனமான 'துடிக்கிறது மீசை' என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். இத்தலைப்பு கோபத்தை குறியீடாக சொல்கிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு அசோக்குமார், இசை ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசைவாணன், சீர்காழி சிற்பி என்று சினிமா மீது பேரார்வமும் திறமையும் உள்ளவர்கள் இணைந்துள்ளார்கள். படப்பிடிப்புக்கு நம்பிக்கையோடு புறப்படுகிறது படக்குழு" என்றார்.
- நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஜெயிலர்.
- இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'கோலமாவு கோகிலா'. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷோகேஸ் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் வேட்டை மன்னனும் ஒன்று.

இந்நிலையில் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் கையில் எடுக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு வேட்டை மன்னன் படத்தின் பணிகளில் நெல்சன் இறங்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் பிரபாஸ் தற்போது 'கல்கி 2898- ஏடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தீபிகா சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தீபிகா படுகோனே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். மிகவும் அழகான பெண் மற்றும் உலகம் முழுவதும் ஏற்கெனவே மிகவும் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் துடிப்போடு இருப்பார். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் அவருடன் பணியாற்ற விரும்பினேன். இப்போதுதான் முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். இப்படம் வருகிற 10-ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம், அர்ஜூன் என பலர் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது.

நானி -ரஜினி
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் நானி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவரின் காட்சிகள் 20 நிமிடம் திரையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் இணைந்துள்ள நிலையில் இந்த படத்திலும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
- ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாட்னர்'.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில் பாட்னர் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
- ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயிலர்
இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதையடுத்து இதே தலைப்பில் இதே நாளில் மலையாள 'ஜெயிலர்'படமும் வெளியாகவுள்ளது. அதாவது, தமிழில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குனர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருந்தார். எனினும், தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள 'ஜெயிலர்' படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சக்கீர் மடத்தில்
இதையடுத்து ஜெயிலர்' படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மலையாள ஜெயிலர் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சக்கீர் மடத்தில், கேரள பிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், கேரளாவில் தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால், மலையாள சினிமா மூச்சுத் திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- மாரி செல்வராஜ் இயக்கியிருந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தில் ரவீனா ரவி, ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும், கதாபாத்திரங்களையும் பாராட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் ரத்னவேலுவாக நடித்த ஃபகத் பாசிலின் மனைவியாக ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரவினா ரவி அந்த பாத்திரம் குறித்து நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.






